first_prize.jpgthird_prize.JPG

ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden – ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. ராயல் பொட்டானிக்கல் கார்டன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. விழாவில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட் செடிகள் இடம்பெறுகின்றன. ஆர்க்கிட்களின் பல பிரிவுகளுக்கும் தனித்தனி பரிசுகள் உண்டு. போட்டியின் மறுபுறத்தில் நிழற்படங்களைத் தவிர கோட்டோவியம், நீர்வண்ணம், எண்ணெய்ப்பூச்சு, பீங்கான்/களிமண் என்று பல பிரிவுகளில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே மூன்று பரிசுகள் உண்டு.

மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிழற்படப் பிரிவில் என் படங்கள் (ஒரு போட்டியாளர் இரண்டு படைப்புகளை மாத்திரமே சமர்ப்பிக்கலாம்) மூன்றாவது மற்றும் இரண்டாவது முதலாவது பரிசுகளைப் பெற்றன. நிழற்படப் போட்டியொன்றில் நான் பங்குபெறுவது இதுதான் முதல்முறை. இரண்டு படங்களும் சென்ற வருடக் காட்சியில் எடுக்கப்பட்டவை (காட்சியில் முக்காலி மற்றும் விசேட ஒளியமைப்புகளுக்கு அனுமதி இல்லை, எனவே இருக்கும் நிலையைக் கொண்டே படங்களை எடுக்க வேண்டும்.) நிக்கான் ரா (RAW) கோப்பாகப் பதியப்பட்டவை, Apple Aperture உதவியுடன் JPG வடிவில் மாற்றப்பட்டன. பின்னர் கிம்ப், உதவியுடன் பின்புலங்கள் நீக்கம் செய்யப்பட்டன.

பரிசு பெற்ற படங்கள் இங்கே

மூன்றாவது பரிசு : http://domesticatedonion.net/photos/index.php/2008/01/13/cymbidium/

முதல் பரிசு : http://domesticatedonion.net/photos/index.php/2008/03/12/phyllis-scott-milne-award/

கூடுதலாக, Digital Photography and Digital Art இரண்டுக்குமான ஒட்டுமொத்தப் பரிசான Best in Class – Phyllis and Scott Milne Award-ம் மஞ்சள் ஃபெலனாப்ஸிஸ் ஆர்க்கிட் படத்திற்குக் கிடைத்தது.