ஒலிம்பிஸ் துவக்க விழாவின் உலகெங்கும் ஒளிபரப்பட்ட அற்புதமான வாணவேடிக்கைக்காட்சிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் நுட்பத்துடன் உன்னதமாக்கப்பட்டவை என்று தெரியவந்திருக்கிறது.  இப்பொழுது எல்லாவற்றையும்விட எரிச்சலூட்டும் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. துவக்கவிழாவில் குட்டி தேவதையைப் போன்ற தோற்றத்துடன் நளினமான அசைவுகளுடன் பாடிய பெண் உண்மையிலேயே பின் நின்று வேறொரு பெண் பாட வெறும் வாயசைப்பைத் தந்திருக்கிறாள் என்று தெரியவந்திருக்கிறது.  காட்டப்படும் பிம்பம் அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும் என்று உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாடெங்கும் போட்டிகள் நடத்தி நல்ல குரல் வளம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பார்க்க அழகாக இல்லை என்ற காரணத்தால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறாள்.  ஏற்கனவே தொலைக்காட்சி பழக்கம் உள்ள, விளம்பரங்களில் நடித்த அனுபவமுள்ள வேறொரு பெண் அற்புதக் குரலுக்குச் சொந்தக்காரியாக உலகின் முன் காட்டப்பட்டிருக்கிறாள்.

“I think the viewers should be able to understand that, in the national interest, for the perception of the country, this was an extremely important and serious matter,” Chen Qigang, the ceremony’s chief music director, said in an interview with a Beijing radio station.

“The child on camera should be flawless in image, internal feeling and expression,” he said. “We felt the coupling of a perfect voice with the best appearance produced the most optimal result.”

ஒன்பது வயதுக் குழந்தையை அழகற்றது என்று சொல்ல அசாத்திய மன உறுதி வேண்டும்.

இந்த ஒலிம்பிக்ஸ் நடந்து முடிந்தபின் சீனாவில் சில முக்கியமான அரசியல் முடிவுகள் வரலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம் உள்ளேயிருக்குமாம் ஈறும்பேனும்.