• அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கு லாரென்ஸ் லெஸிக்

    by  • February 15, 2008 • சமூகம் • 2 Comments

    lessig.jpg

    சான்ஃப்ரான்ஸிஸ்கோ பகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாம் லாந்டோஸ் சமீபத்தில் காலமானார். இந்த இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் லாரென்ஸ் லெஸிக் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி நடந்து லெஸிஸ் அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

    லாரென்ஸ் லெஸிக் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பச் சட்டத்துறை பேராசிரியராக இருக்கிறார். Creative Commons என்ற அமைப்பைத் துவங்கியவர். தளையறு மென்கலன் கழகத்தின் இயக்குநர்களில் ஒருவர். தொழில்நுட்பம், காப்புரிமை, பகிர்தல், மென்கலன் போன்ற துறைகளில் செயற்பாட்டு விதங்களில் மிகவும் ஆழமான புரிதலும், சட்டநுணுக்கத் திறனும் கொண்டவர். மிகச் சிறந்த பேச்சாளர் கூட. லெஸிக்கைப் போன்ற திறமையானவர்கள் அரசியலில் ஈடுபடுவது மிகவும் நல்லது. சமீபகாலத்தில் அமெரிக்கச் சட்டத்துறையில் தனியார்துறையின் குரலே ஓங்கி ஒலித்துவருகிறது. பொதுஜன நலன் குறித்து குரல்கொடுக்க லெஸிக் போன்றவர்கள் தேவை.

    Go! Lessig Go!

    2 Responses to அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கு லாரென்ஸ் லெஸிக்

    1. பூர்ணா
      February 15, 2008 at 9:41 pm

      தொழில்நுட்பச் சட்டத்துறைன்னா என்னங்க? இல்லை, கமா விட்டுப் போச்சா?

    2. வெங்கட்
      February 15, 2008 at 11:00 pm

      பூர்ணா, கமா- விட்டுப்போகவில்லை. தொழில்நுட்ப’ச்’ சட்டத்துறைதான்.

      லாரென்ஸ் லெஸிக் நுட்பத்துறைகளைச் சார்ந்த சட்டத்துறையில் வல்லுநர். குறிப்பாகச் சொல்லப்போனால் மென்கலன்/தகவல்நுட்பக் காப்புரிமை (Software and information technologies copyright), நுட்பம் சார்ந்த குற்றம் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் உலகப் புகழ் பெற்றவர். அவருடைய பல்கலைக்கழக இணையப் பக்கத்தில் இப்படியிருக்கிறது:

      >Stanford Professor of Law and Founder and Director of the Center for Internet and Society

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *