கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

அவர் என்னிடம் பேசுகையில், …மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்….மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை உங்களைப் போன்றவர்கள்தான் போக்க வேண்டும். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் நடிகரை விட மேலானவர் என்றார்.

கம்மம் மாவட்டத்தில் ஒரு ஊர்க்காவல் படை வீரர் எனக்காக தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், சிரஞ்சீவியை முதல்வராக காண முடியவில்லையே என்று எழுதியிருந்தார். இது என்னை நெகிழ வைத்து விட்டது.

அதேபோல ஐடி வேலையில் இருந்து வந்த ஒரு தம்பதியினரும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர். இது எல்லாம் என்னை நிறைய சிந்திக்க வைத்துவிட்டது.

எனவே இனிமேலும் அரசியலுக்கு வராமல் இருக்கும் பிழையை செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்தேன்.