• ஃபிடல் காஸ்ட்ரோ நம்மாளுதான்

    by  • January 18, 2008 • நகைச்சுவை • 3 Comments

    castro_nikon.png ஒரு அல்ப சந்தோஷம். இன்றைக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும் நீக்கான் காமெரா பயன்படுத்துகிறார் என்று தெரிய வந்தது. என் அபிமான காமெரா நீக்கான்.

    சமீபத்தில் ஹவானா வந்த பிரேஸில் குடியரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா-வை காஸ்ட்ரோ படம் எடுக்கிறார்.

    3 Responses to ஃபிடல் காஸ்ட்ரோ நம்மாளுதான்

    1. வடுவூர் குமார்
      January 19, 2008 at 1:19 am

      நான் உங்க ஆள் இல்லை.

    2. Soundar
      January 19, 2008 at 8:55 am

      ஒருமுறை ஹென்றிஸ் என்கிற பிரபல போட்டோ/ காமிரா நிறுவனத்தில் காமிரா ‘ஸர்வே’ செய்வதற்குச் சொன்றிருந்தேன். காமிராவைப்பற்றி எனக்கு என்ன தெரியும் என்று கணிப்பதற்காக அந்த நிறுவனத்தில் நான் அணுகிய ஒருவர் என்கையில் ஒரு காமிராவைக் கொடுத்து ஃபோகஸ் பண்ணச் சொன்னார். நான் காமிரா பிடிக்கும் திறனைப் பார்த்ததும் ‘இது தேறாது’ என்று முடிவு கட்டிவிட்டார். அப்புறம் என்னிடம் அவர்’பிடி’ கொடுத்துப் பேசவேயில்லை. அதற்குப்பிறகு ‘பிரஸ்டீஜ்’ க்காக ஒரு விலையுயர்ந்த காமிரா வாங்கினேன் என்பது வேற விஷயம்.

      அதுபோல, ஃபிடல் பிடித்துக் கொண்டிருக்கும் லாவகத்தைப் பார்த்தால் அவர் ஒரு காமிரா ஆர்வலர் என்று சொல்வதற்கில்லை. எனவே அவரும் என்னைபோல் என்று பெருமைப்பட வேண்டிய விசேஷமில்லை என்று தோன்றுகிறது.

    3. வெங்கட்
      January 19, 2008 at 8:46 pm

      குமார் – நீங்க கெனான் விரும்பியா?

      சௌந்தர் – இதுக்காகத்தான் நான் கையில கேமரா பிடிக்கிறாமாதிரி எல்லாம் போட்டோ எடுத்துக்கறதில்லை!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *