Archive for August, 2008

சிரஞ்சீவி அரசியலுக்கு வரக் காரணம்

கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
அவர் என்னிடம் பேசுகையில், …மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்….மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை உங்களைப் போன்றவர்கள்தான் போக்க வேண்டும். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் நடிகரை விட மேலானவர் என்றார்.
கம்மம் மாவட்டத்தில் [...]


தாளம் : உலகெங்கும் – 2

உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும் ஜொலிக்கும் ரஷ் (Rush) என்ற இசைக்குழுவின் ட்ரம்ஸ் கலைஞர், ரஷ்ஷின் ஆஸ்தான பாடலாசிரியரும்கூட. சமகால ட்ரம்ஸ் கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் என்று பிற ட்ரம்ஸ் கலைஞர்களால், இசை வல்லுநர்களால், சஞ்சிகைகளால், இரசிகர்களால் புகழப்படுபவர். [...]


ஒலிம்பிக்ஸ் – பிம்பங்களும் சிதைவும்

ஒலிம்பிஸ் துவக்க விழாவின் உலகெங்கும் ஒளிபரப்பட்ட அற்புதமான வாணவேடிக்கைக்காட்சிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் நுட்பத்துடன் உன்னதமாக்கப்பட்டவை என்று தெரியவந்திருக்கிறது.  இப்பொழுது எல்லாவற்றையும்விட எரிச்சலூட்டும் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. துவக்கவிழாவில் குட்டி தேவதையைப் போன்ற தோற்றத்துடன் நளினமான அசைவுகளுடன் பாடிய பெண் உண்மையிலேயே பின் நின்று வேறொரு பெண் பாட வெறும் வாயசைப்பைத் தந்திருக்கிறாள் என்று தெரியவந்திருக்கிறது.  காட்டப்படும் பிம்பம் அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும் என்று உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாடெங்கும் போட்டிகள் நடத்தி நல்ல குரல் [...]


இலக்கிய விமர்சனம்

நன்றி : xkcd.com


தாளம் – உலகெங்கும் – 1

சிறு வயதிலிருந்தே எனக்குத் தாள வாத்தியங்களின் மீது வேறெல்லா இசையையும் விட ஈர்ப்பு அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தெருக்கோடியிலிருக்கும் மிருதங்கங்கம் கணேசய்யர் அவரது சிஷ்யகோடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில் அவருக்கு அடுத்த வீட்டு மாமாவிடம் ஓசி ஹிண்டு வாங்கி படித்துக்கொண்டே தாளத்தில் மயங்கிக் கிடப்பேன். கணேசய்யருக்குக் காசுகொடுத்து படிப்பிக்க என் குடும்பத்தில் வலுவில்லை. தெருவெல்லாம் புறப்பாடு நடத்திவரும் காளஹத்தீஸ்வரரையோ, பாணபுரீஸ்வரரையோ, படைவெட்டி மாரியம்மனையோ ஜனங்கள் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது நான் மேளத்தையும், பறையையும் மாத்திரமே கண்கொட்டாமல் [...]


பிரிட்னி ஸ்பியர்ஸ்-ம் ஜான் மெக்கெய்னும்