• Archive for July, 2008

    அன்றாட அறிவியல்

    by  • July 28, 2008 • அறிவிப்புகள், அறிவியல்/நுட்பம் • 2 Comments

    கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விட்டுப்போயிருந்த என் வானொலி அறிவியல் நிகழ்ச்சியை கடந்த ஐந்து வாரங்களாக மீண்டும் நடத்திவருகிறேன். நண்பர் விஜயகுலதுங்கன் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி கனேடிய தமிழ் வானொலியில் டொராண்டோ பெருநகரப் பகுதியில் நேரடி ஒலிபரப்பாகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை திங்கட்கிழமைதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 9:25க்கு என் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி வாயிலாக நேரடியாக இணைகிறேன். நிகழ்ச்சியை இணையம் வாயிலாக உலகெங்கும் கேட்கமுடியும் (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மாத்திரம்தான் வேலைசெய்கிறது).

    Read more →

    புலி மேலேந்து எறங்கியாச்சு

    by  • July 26, 2008 • அறிவிப்புகள் • 6 Comments

    சரியாக ஐந்து வருடமாகச் சவாரி செய்துகொண்டிருந்த புலியின் மீதிருந்து இன்றைக்குக் காலை வெற்றிகரமாக கீழே இறங்கிவிட்டேன் (என்று நம்புகிறேன்). தமிழிலில் வலைப்பதிவு எழுதும் யாரும் செய்யாத ஒரு காரியத்தை நான் இவ்வளவு நாளாகத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததேன்.  2003 ஜூலையில் தொடங்கிய நாளிலிருந்து நேற்றுவரை என் வலைப்பதிவு என் வீட்டிலிருந்த சேவை வழங்கியால் இயங்கிக் கொண்டிருந்தது. நண்பர்களில் பலரும்  ப்ளாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் என்று இலவசச் சேவைகளைப் பயன்படுத்திவருகிறார்கள். மிகச் சிலர் (ஒரு சதவீதம்??) சொந்தமாக இணைய தளம் பதிவு [...]

    Read more →