சோதனை - wordpress 2.5

வேர்ட்பிரஸ் 2.5 நிறுவிய பின் பதிவுகளை எழுதுவதில் சிக்கலிருக்கிறது. நீண்ட பதிவுகளை உள்ளிடமுடியவில்லை.

இந்தச் சிறிய இடுகையைப் பதிப்பிக்க முடியுமா?

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

வேர்ட்பிரஸ் நண்பர்களுக்கு:

யாராவது வேர்ட்பிரஸ் 2.5 நிறுவியிருந்தால்/இற்றைப்படுத்தியிருந்தால் உங்களுக்குப் பிரச்சனை இருக்கிறதா என்று சொல்லுங்கள். சற்று பெரிய பதிவை எழுதினால் உள்ளிட முடியவில்லை. உங்கள் உதவிக்கு நன்றி!

வெங்கட்

2.5 க்கு - அது வெளிவந்த நாளன்று புதுப்பித்தேன். எல்லாம் ஒழுங்காக புதுப்பிக்கப்பட்டது என அசரீரி அப்போது சொன்னது. அதற்குபின், இதுவரை பதிய விஷயமும் இல்லை, நேரமும் இல்லை. ஏதாவது சோதனை பதிவு செய்வது உதவும் என்றால், தமிழ்மணம் சொருகுநிரலை தூங்க செய்துவிட்டு இன்றிரவு செய்து பார்த்து தகவல் தெரிவிக்கிறேன்.

- வாசன்

http://blog.balabharathi.net/

தலிவா… நான் அப்டேன் பண்ணிவிட்டேன். ஆனால்.. நீங்கள் சொல்லும் பிரச்சனை எனக்கு இல்லை. என் வலைப்பதிவின் முதல் பக்கத்தில் காணப்படும் மூன்று பதிவுகளுமே அப்டேட் செய்யப்பட்ட பின் எழுதப்பட்டவையே…!

இதை விட பெரிய பதிவு எழுத எனக்கு வரலை. உண்மைத்தமிழனுக்கு ஒரு இடுகை போட கடன் கொடுத்தால் உண்மை தெரிய வரும். :)))

எதற்கும் மற்றவர்களின் கருத்தை கேட்போம்.
(எனக்கு பின்னூட்டங்கள் மெயிலில் வராமல் இருந்தது. செட்டிங்கில் போய் மீண்டும் ஒரு முறை மெயில் ஐ.டி கொடுத்து, கட்டங்களை கிளிக் செய்தபின் அதுவும் ஓகே ஆகிவிட்டது.)

வாசன் - நன்றி!

பாலபாரதி - நானும் இற்றைப்படுத்தி இரண்டு பதிவுகள் பிரச்சனையில்லாமல் இருந்தது. இப்பொழுது மூன்றாவது பதிவை எழுத மூன்று நாட்களாகத் திண்டாடிக் கொண்டிருக்கிறேன் (முனைந்து நிரல்களை எல்லாம் நோண்டிப் பார்க்க நேரம் செலவிடவும் இயலவில்லை). ஒவ்வொன்றாக எல்லா நீட்சிகளையும் தடுத்துப் பார்த்தபின்னும் இதே பிரச்சனைதான். எனவே இரண்டு வரி எழுதினாலாவது உள்ளே வருகிறதா என்று பார்த்தேன். வருகிறது.

சொந்தமாக இடுகை எழுதினால்தான் பிரச்சனை என்கிறார்கள், கடன் வாங்கியவர்களுக்கு இந்தத் தொந்தரவில்லையாம். :)

அது என்ன மாயமோ தெரியல!

புதிதாக ஒரு பதிவு தொடங்கி ஏற்கனவே சேமித்து வைத்திருந்ததை வெட்டியொட்டினேன். இது உள்ளே போய்விட்டது. ஆனா, இது எப்ப திரும்ப வருமோ தெரியாது. (அதுக்குள்ள 2.5.1 வந்துடும்னு நெனைக்கிறேன்).

வாசன், பாலபாரதி - நன்றிகள்!

வெங்கட் எனக்குத் தெரிந்த வரை 2.5ல் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.

ஆனால் தமிழ் மணம் கருவிப்பட்டை மட்டும் சில சமயம் முரண்டு பிடிக்கிறது.பதிவினை தமிழ் மணத்தில் இடும் போது எல்லா நிரல்களையும் ஒரு முறை டீஆக்டிவேட் செய்து விட்டு தமிழ்மணம் நிரலியை மட்டும் ஆக்டிவேட் செய்து விட்டு பப்ளிஷ் செய்தால் ஒழுங்காய் வேலை செய்கிறது.

இதை தவிர வேறு எதுவும் தவறுகள் எனக்கு புலப்பட வில்லை.

Leave a comment

(required)

(required)