Archive for March, 2008

கணிமை/தகவல் நுட்பம் இந்திய மாணவிகளுக்கான கூகுள் விருது

சந்தோஷம் தரும் ஒரு செய்தி. கணிமை தகவல் நுட்பியல் துறைகளில் சிறந்த இந்திய மாணவிகளுக்கு கூகுள் நிறுவனம் இந்த ஆண்டிலிருந்து புதிய விருது ஒன்றை வழங்குகிறது. இள, முது, பிஹெச்.டி பட்ட மாணவிகளுக்கான இந்த முதலாம் விருதைப் 16 மாணவிகள் பெருகிறார்கள். அதிக பட்சமாக ஐஐடி பாம்பாயிலிருந்து நான்கு மாணவிகள். கூகுளின் அறிவிப்பு

As part of Google’s ongoing commitment to encouraging women to excel in computing and technology, we are [...]


முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் - பகுதி 1

நாம் எல்லோரும் நாள் தோறும் செய்யும் காரியம் இது; சில நிமிடங்களாவது முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் செலவிடுகிறோம். அப்பொழுது நாம் பார்க்கும் தோற்றம் இடம் வலம் மாறியது. நாம் தன்னிச்சையாக இதைக் கவனிக்காதுவிடுகிறோம். கண்ணால் காணும் உலகைப் போலவே மூலக்கூறுகள் உலகிலும் இதுபோன்ற இட-வல மாற்றங்கள் உண்டு. இன்றைக்கு உலகில் பணம் கொழிக்கும் பல மருந்து நிறுவங்களுக்கு காமதேனுவாக பில்லியன் கணக்கில் பணத்தைக் கொட்டுபவை இந்த இட-வல மூலக்கூறுகள்தாம். இதைப் பற்றி [...]


தமிழ்க் கணிமை விருது - பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

விசேட வேண்டுகோள் : இந்த அறிவித்தலை தங்களால் இயன்ற அளவில் பிற வலைப்பதிவுகள், மின்னஞ்சல் குழுக்கள், சஞ்சிகைகள் பிற ஊடகங்களில் மறுபிரசூரம் செய்து உதவ வேண்டுகிறேன்:
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல்விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் [...]