செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்

பிரபு ராஜதுரையின் இந்தக் கேள்வி (’ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?)மிகவும் முக்கியமானது.

ஞாநியின் கட்டுரை ஒன்றை முன்வைத்து சஞ்சிகைகளில் பத்தி எழுதுபவருக்கு எந்தவிதமான மொழியறிவும் தேவையில்லை போலிருக்கிறதே என்று வியந்திருக்கிறார். இது கட்டாயமாக அவலநிலைதான். ஞாநியின் அந்தக் கட்டுரையின் இடத்தில் வேறு எந்தத் தமிழ்ப்பத்தியாளரின் கட்டுரையையும் போட்டு இதே விமர்சனத்தை முன்வைக்க முடியும். சான்றான்மை என்று ஒரு பதம் உண்டு; தான் செய்யும் காரியம் அனைத்திலும் தன் முழு எத்தனத்தையும் பயன்படுத்தி காரியம் எல்லாவற்றிலும் முழுமையடைவது சான்றோர்கள் குறித்த வரையறை. துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.

மொழியாளுமையைத் தாண்டி விஷயத்திலும் அவர்கள் அப்படியொன்றும் வித்தகர்கள் அல்லர். தமிழில் பத்தியெழுதுபவர்களில் பலர் உளறிக்கொட்டுவதை அடுத்த நொடியிலேயே இணையத்தில் விவாதித்திப்பது வழக்கம்தானே!. அது பின்நவீனத்துவமோ, மரபு மாற்றமோ, சூடேற்றமோ, சூடான் அரசியல் விவகாரமோ இவர்கள் பல சமயங்களில் மேம்போக்காக மேய்ந்துவிட்டு அடுத்தவாரமே தங்கள் மேதமையை அச்சிலேற்றிவிடுவார்கள். தன் வாசகர்கள்மீதுதான் பத்திரிக்கைகளுக்கு எவ்வளவு நம்பிக்கை!

இன்றைக்கு முதல்தர எழுத்தாளர்களாக அச்சில் அடையாளம் காணப்படுபவர்கள் பலருக்கும் செய்நேர்த்திக்கு முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை. இலக்கியவாதிகள் என்றும் பேரழிவிலிருந்து தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் மீட்டெடுப்பவர்கள் என்றும் தங்களை அடையாளம் காண்பவர்களுக்கு சுயவிமர்சனம் என்றொரு விஷயம் இருப்பதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தமிழில் முதன்மை எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்கள் (அல்லது தாங்களாகவே முன்னிருத்திக் கொள்பவர்கள்) இணையத்தில் எழுதுபவர்களைக் குறித்து போகிற போக்கில் “அங்க யாரும் சீரியஸ் கிடையாது. கொழுத்த பணம் சம்பாதித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மிச்சமிருக்கும் நேரத்தில் இவர்கள் கிறுக்கித் தள்ளுவது” என்ற வகையில் அவ்வப்பொழுது அச்சுப் பத்திரிக்கைகளில் ஏளனம் செய்வார்கள்.

சொல்லப்போனால் இணையத்தில் ‘மேம்போக்காக’ எழுதும் பல நண்பர்கள் உள்ளடக்கத்திலும், மொழியாளுமையிலும் அதிகமே கவனம் செலுத்துகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன; முக்கியமான ஒன்று சக-விமர்சனம். வலையில் எழுதுபவர்கள் பலரும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சகர்களாக இருக்கிறார்கள். மிகச் சாதாரணமான சின்ன விஷயங்கள்கூட நொடியில் விமர்சிக்கப்பட்டுவிடுகின்றன. (பல சமயங்களில் படைப்பாளர் இதற்கு நேரடி பதில் சொல்வதுண்டு). உதாரணமாக சென்றவாரம் நான் எழுதிய நாலுவரி “டாடா-ஜகுவார்” செய்தி விமர்சனத்தில் டாடா என்று எழுதுவதில் இருக்கும் ஒலிக்குறை சுட்டப்பட்டது. இப்படி அவசரமாக ஒலிக்குறையைக் கவனிக்காமல் எழுதிவிட்டோமே என்று என்னை நானோ நொந்துகொண்டது உண்மை. அச்சு ஊடகங்களில் இதுபோன்று கிடையாது. அதிமுக்கியமான கருத்துப்பிழைகளைக் கூட பலரும் சுட்டுவதில்லை. அப்படியே செய்தாலும் அதற்கு ஒளிவட்டம் தாங்கி உலாவரும் மேதைகளிடமிருந்து எந்த மறுவினையும் இருக்காது. இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பத்தி எழுதுபவர்கள் நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

மின்வடிவத் தகவல்கள் உயிரூட்டமானவை. எழுதப்பட்ட விஷயம் சரியா தவறா என்று அடுத்த நொடியிலேயே இன்னொரு உலாவி சாரளத்தைத் திறந்து தேடிப்பார்க்க முடியும். தவறு விரைவிலேயே வெளிவந்துவிடும் என்பதால் எழுதுபவர்கள் (முதல்தர வலை எழுத்தாளர்களை மாத்திரம்) இயன்ற அளவுக்குத் தவறில்லாமல் எழுத முனைகிறார்கள். ஆனால் செத்தமரத்தில் இப்படியில்லை. அது எழுதி எட்டு நாளுக்குப்பிறகுதான் அச்சில் வரும், சுருட்டிப் பிடித்துக்கொண்டு வாசிப்பவர்கள் வாசித்துமுடித்தவுடன் சுருட்டியெறிந்துவிட்டுப் போய்விடுவார். இணையத்திலோ ஐந்துவருடங்களுக்கு முன்னால் எழுதியதைக் கூட ஒன்றிரண்டு முக்கிய வார்த்தைகளை உள்ளிட்டு தேடல் இயந்திரம்மூலம் நோண்டியெடுப்பது சாத்தியம். எனவே போகிற போக்கில் எழுதுபவையாகச் சொல்லப்படுபவை ஒருவகையில் நிரந்தரமாக விமர்சனத்துக்கு உள்ளாவதும் அழியாத காகிதத்தில் அச்சிடப்பட்டவை தேடக்கிடைக்காமல் போக கருங்குழியில் விழுவதும் மேலுக்கு முரணாகத் தோன்றினாலும் மறுக்கமுடியாத உண்மை.

ஒருவகையில் சொல்லப்போனால் இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை. இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை. மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ளமுடிவதில்லை. மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள். இது ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பா. ராகவன், வெங்கடேஷ், உள்ளிட்ட பலருக்கும் பொருந்தும்.

பழமையில் ஊறிப்போன படைப்பாளிகளாலும், விமர்சகர்களாலும் இதைப் புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றவில்லை. பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

* * *
கடைசியாக பிரபு இவர்கள் தமிழில் (தமிங்கலத்தில்) எழுதுவதைவிட என்னால் ஆங்கிலத்தில் நன்றாகவே எழுதமுடியும், எனவே எனக்கு ஆங்கிலத்தில் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். பதில் - கட்டாயம் கிடைக்காது. டைரக்டர், சினிமா, சப்ஜெக்ட்டு ரீதியில் எழுதும் மொழி தெரியாதவர்களுக்கு (அல்லது கொஞ்சமேனும் சிரத்தை எடுத்துக்கொண்டு திருத்தமாக எழுதமுயலாதவர்களுக்கு) ஆங்கிலத்தில் வாய்ப்பு கிடைக்காது. ஆங்கில வாசகர்கள் என்ன தமிழ் வாசகர்களைப் போல இளிச்சவாயர்களா?

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

வெங்கட்,

உண்மையில் நான் அந்தப் பதிவினை எழுதும் பொழுது, உங்களை மனதில் கொண்டே எழுதினேன். கடினமான விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளுக்கு கூட நீங்கள் கவனம் எடுத்து தேர்ந்த தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நான் எப்பொழுதும் வியப்பேன்.

“மொழியாளுமையைத் தாண்டி விஷயத்திலும் அவர்கள் அப்படியொன்றும் வித்தகர்கள் அல்லர்”

ஆமாம், அடுத்த குட்டு அதற்குதான்

//எனவே போகிற போக்கில் எழுதுபவையாகச் சொல்லப்படுபவை //

இப்பத்தான் ‘போகிறபோக்கில்’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுவிட்டு, பிரபுவுக்கு ஒரு பின்னூட்டம் இடப்போனேன். அங்கே இருந்து இந்தப்பதிவின் லிங்க் கைப் பிடிச்சு இங்கே வந்தால் இப்படி இருக்கு!!!!!

அழகான தலைப்பு வெங்கட்.

உண்மைதான். கருத்துப்பிழைகளைப்பற்றியும், மொழி ஆளுமையைப் பற்றியும் பெரிய கவலை ஏதும் இல்லாமல்தான் பத்திகள் செய்யப்படுகின்றன. எழுத்தாளன் ஆவதற்கு முதல்படியாக - “பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுது” என்று அறிவுரை கொடுப்பவர்கள் இன்றைய முதல்நிலை எழுத்தாளர்கள் :-) தவறு செய், கண்டுகொள்ளாதே, விமர்சனத்துக்கு பதில் சொல்லாதே என்பதெல்லாம் பாலபாடம் போல இருக்கிறது. என் பின்னூட்டப்பெட்டியை மூடிவிட்டு நானும் வளர்ந்த எழுத்தாளர் ஆகிவிடலாமா என்று யோசிக்கிறேன் - இவ்வளவு சுருக்குவழி இருப்பதைப்பற்றி இவ்வளவு நாளும் அறியாமல் இருந்திட்டேனே! அந்தகோ!

//மொழியாளுமையைத் தாண்டி விஷயத்திலும் அவர்கள் அப்படியொன்றும் வித்தகர்கள் அல்லர்//
? !

//இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள்.// :) :)

//இந்தப்பதிவின் லிங்க் கைப் பிடிச்சு இங்கே வந்தால் இப்படி இருக்கு!!!!!//

Link - இழை, தொடுப்பு. இன்னும் பொருத்தமான சொற்கள் கிடைக்கலாம்.

——————-
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-’08)
என்னை இன்னமும் தமிழுடன் உயிர்ப்போடு உறவாட வைத்திருக்கும் சுஜாதாவுக்கு நன்றி.

//தான் செய்யும் காரியம் அனைத்திலும் தன் முழு எத்தனத்தையும் பயன்படுத்தி காரியம் எல்லாவற்றிலும் முழுமையடைவது சான்றோர்கள் குறித்த வரையறை. துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.//

முற்றிலும் உண்மையே.
கைப்புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி தேவையா என்ன ?

அது மட்டுமல்ல. இவர்கள் “தம‌க்குத் தெரியாது என்பதே
தம‌க்குத் தெரியாதவர்கள் ” ரகத்தைச் சார்ந்திருப்பதால்,
தமக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு கற்பனை உலகில்
உலாவுகிறார்கள்>

கருத்தெழுதிய நண்பர்களுக்கு நன்றி!

சுப்புரத்தினம் -
>அது மட்டுமல்ல. இவர்கள் “தம‌க்குத் தெரியாது என்பதே
தம‌க்குத் தெரியாதவர்கள் ” ரகத்தைச் சார்ந்திருப்பதால்,
தமக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு கற்பனை உலகில்
உலாவுகிறார்கள்

நான் அப்படி நினைக்கவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்; ஆனால் தெரிந்துகொண்டு தங்களை உயர்த்திக்கொள்ள ஆர்வம் கிடையாது. எல்லாம் இதுபோதும் என்ற அலட்சியம். எனவேதான் பினாத்தல் சுரேஷ் சொல்வதுபோல் இவர்கள் விமர்சனங்களைப் புறந்தள்ளுகிறார்கள்.

தமிழில் விகடன்,குமுதத்தில் தமிங்கலமே அதிகம்.இதற்கு பத்தி எழுதுபவர்களும் விதிவிலக்கல்ல.ஞாநி எந்த அவசரத்தில் அதை எழுதினாரோ.இருப்பினும் அவர் எழுத்துக்களில் இப்படி ஆங்கிலச்
சொற்கள் இடம் பெறுவது ஒரு நீண்ட தொடர்கதைதான். ஆங்கிலத்தில் cnn-ibn தளத்தஇல் உள்ள பதிவுகளைப் படித்தால் அங்கு எத்தகைய மேதாவிகள் இருக்கிறார்கள் என்பது புரியும்.
ஆங்கிலத்தில் ஹிந்துவில் ஒருவர் எழுதிய சினிமா விமர்சனங்கள் எந்த லட்சணத்தில் இருந்தன என்பதை தேசி
பண்டிட்டில் கிழித்திருக்கிறார்கள்.
சில எழுத்தாளர்கள் பின்னூட்ட பெட்டியை வைக்காதது சரியல்ல.
ஆனால் நடைமுறையில் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள்/எரிதங்களை கையாள அஞ்சியும் அவ்வாறு
செய்வதே மேல் என்று அவர்கள் முடிவு செய்திருக்கலாம்.
அக்கறையுள்ள வாசகர் மின்னஞ்சல் செய்யட்டும் என்று நாகார்ஜுனன் நினைப்பதால் அவரும் பின்னூட்ட பெட்டியை
வைக்கவில்லை.இவ்வளவிற்கும் அவர் ஜெமோ,சாரு,எஸ்ரா போல் அதிகம் அறியப்பட்டவர் அல்ல.அது அவரது தெரிவு என்று கொள்வதே சரி.

இந்த விஷயத்தில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உள்ளன. தமிழைப் பொருத்தமட்டில், பத்தி எழுத்து எழுதுபவர் குறைவு. இவ்வாறு எழுதுபவர் பலரும் துறை வல்லுநர்கள் கிடையாது. அதனால் வேறு வழியின்றி, வல்லுநர் அல்லாத பொதுமையாளர்கள், வல்லுநர்களாகக் காட்டிக்கொண்டு எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் தமிழில் எழுதக்கூடிய வல்லுநர்களை இதழ்கள் அடையாளம் காணாததும், தமிழ்நாட்டு வல்லுநர்கள் தமிழில் எழுதத் தலைப்படாததுமே. இந்தக் குற்றத்தில் இருவருக்கும் சம பங்கு உள்ளது.

அடுத்து தமிழில் சொல்லாக்கம். ஞாநி ஆங்கிலச் சொற்களை விரவி எழுதுவது சரி என்று நான் சொல்ல வரவில்லை. அவர் நிச்சயம் முயற்சி செய்து, புழக்கத்திலே இருக்கும் பல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். பிரபு ராஜதுரையின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக பொதுமக்கள் மத்தியிலேயே தமிழ்ச்சொற்கள் பரவியுள்ளன. அந்த வகையில் ஞாநிக்கு இந்த வாரக் குட்டு உண்டு. ஆனால் அதே நேரம், இதில் எந்த அளவுக்கு குமுதம் ஆசிரியர் குழுவின் கைவண்ணம் உள்ளது என்பதையும் பரிசீலிக்கவேண்டும். ‘இதெல்லாம் புரியாது சார், அதனால இங்க்லீஷ் வார்த்தையாவே போட்டிருவோம்’ என்று அவர்கள் சொல்லியிருக்கலாம். அல்லது சொல்லாமலேயே மாற்றியிருக்கலாம். எனவே அந்த உண்மை தெரியும்வரை ஞாநிக்கு நாம் குடுக்கும் தண்டனையை தாற்காலிகமாக நிறுத்திவைப்போம்!

மூன்றாவது விஷயம்: பாரா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றோர் பின்னூட்டப் பெட்டிகளை மூடிவைப்பது தொடர்பாக. பாராவுக்கு பின்னூட்டப் பெட்டியை முடிவைக்கும் யோசனையை நான்தான் குடுத்தேன். பிறர் பற்றி எனக்குத் தெரியாது. காரணம், பாரா விமரிசனத்தை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள் என்பதால் அல்ல. ஆனால் கொஞ்சம் பிரபலமானவர் என்ற ஒரே காரணத்தால் அவர் படும் கல்லடியை, கொஞ்சம்கூட அடிப்படை இல்லாத கடும் தாக்குதலை சர்வசாதாரணமாகப் புறந்தள்ளிவிட்டு தனது வேலையில் ஈடுபடும் ஸ்திதப்பிரக்ஞை இல்லாதவர் என்பதால். வீணாக அழுத்தத்தால் ஆட்படுத்தப்பட்டு, வேலையில் சரியாக ஈடுபடமுடியாமல் போவதைவிட, இப்போதைக்கு பின்னூட்டம் என்ற வசதியைக் கொடுக்காது போவது எவ்வளவோ மேல் - என்பது என் கருத்து.

நல்ல தலைப்பு வெங்கட்.

நான் முடிந்த வரையில் தமிழில் எழுத முனைகிறேன். சில சமயங்களில் தகுந்த சொற்கள் தெரியாமல் ஆங்கில சொற்களைப் பாவிக்க வேண்டியதாக இருக்கிறது.

பத்ரி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. சினிமாவில் வன்முறை, அபத்தங்கள் எனச் சொன்னால் அதுதான் ரசிகர்களுக்குத் தேவையாக இருக்கிறது எனச் சொல்வது போல் இருக்கிறது அவருடைய வாதம். //இதெல்லாம் புரியாது சார், அதனால இங்க்லீஷ் வார்த்தையாவே போட்டிருவோம்’ // எனச் சொன்னால், தமிழில் இருக்கட்டும் வேண்டுமென்றால் அடைப்புக்குள் ஆங்கிலச் சொல்லைப் போடலாம் எனச் சொல்ல இவர்களுக்கு ஏன் முடியாமல் போகிறது? இன்று நம் வலையுலகில் புழங்குபவர்களுக்கு பின்னூட்டம், இடுகை, சிரிப்பான் என்ற பதங்கள் இப்பொழுது எளிதாக புரிவதில்லையா? ஆனால் முதலில் இவற்றைப் பாவிக்கும் பொழுது நாம் ஆங்கிலச் சொல்லை அடைப்புக் குறிக்குள் போட்டுத்தானே பழகினோம்? அது போல் செய்வதில் என்ன சிரமம்? மனதிருந்தால் மார்க்கமுண்டு. அப்படி ஓரு நிலை கூட எடுக்க முடியாமல் தன் எழுத்து அச்சில் வருவதை மட்டுமே இவர்கள் விரும்புவது ஏன்?

ஆனால் இன்னும் ஒன்று கூடச் சொல்ல வேண்டும். தமிழ்ப்படுத்துகிறோம் எனச் சொல்லி மிகவும் கடினமான சொற்களால் ஆன பதங்களை நாம் முடிந்த வரையில் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட துறை சேர்ந்த பதங்கள் இல்லாவிட்டாலும் பொதுவாகப் பயன்படுத்தும் பதங்களின் தமிழ் மொழியாக்காம் எளிதாகப் புரியும்படி இருத்தல் அவசியம்.

பின்னூட்டங்கள் எல்லாம் பத்தி நான் கருத்து சொல்ல தகுதியே இல்லை! :))

Ignorant - வலைப்பதிவு என்ற ஊடகக்கிளைக்குப் பின்னூட்டம் மிகவும் தவிர்க்கமுடியாதது என்றே நான் கருதுகிறேன். எரிதங்கள் தொழில்நுட்பச் சமாச்சாரம். சுயமாக வீட்டிலேயே வழங்கி வைத்து தளத்தை நடத்துபவன் என்ற வகையில் தமிழில் வேறு எவரைக்காட்டிலும் தொழில்நுட்பத்த்தால் நிகழும் அபத்தங்களைப் பற்றி என்னால் நிறையவே சொல்லமுடியும். எரிதத்தால் யாரும் மனம் நொந்துபோவார்களேயானால் அவர்களைக் கண்டு அனுதாபப்படத்தான் முடியும். (இதன் தொடர்ச்சியை பத்ரிக்கான பதிலில் எழுதுகிறேன்)

பத்ரி உங்கள் கருத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

1. தமிழில் பத்தி எழுதாத வல்லுநர்களுக்கும் தமிழ் பத்திரிக்கைகளுக்கும் இதில் சமபங்கு உண்டு என்பது உண்மைதான். தமிழில் எழுதக்கூடியவர்களை வளர்த்தெடுக்காதது பத்திரிக்கைகளின் குற்றம். உதாரணமாக மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் இதை விகடனால் எளிதில் சாதித்திருக்கமுடியும். மறுபுறம் ஞாநி, சாரு போன்ற பெயர்பெற்றவர்கள் முழுக் கவனக்குறைவுடன் சராசரி மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் திரைப்படம், இயக்குநர் போன்ற வார்த்தைகளுக்குத் தமிங்கலம் எழுதுவது அராஜகம் - என்னைப் பொருத்தவரை அவர்களுடைய வாசகர்களுக்கு அந்த அளவிற்குத்தான் மதிப்பு கொடுக்கிறார்கள். எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம் ஆசிரியர் அடிக்கோடிட்டு சினிமா என்று எழுதுவார் என்று நம்பமுடியவில்லை.

2. வலைப்பதிவில் பின்னூட்டப்பெட்டியை மூடுவது: ஆய்வகங்களிலும் அலுவல்களிலும், தொழில் முனைவராகவும் வேலை செய்துகொண்டு பின்னூட்டம் படித்து பதில் எழுதமுடியும் என்றால் எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் (அல்லது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்) இதை இன்னும் எளிதாகவே, திறம்படச் செய்ய முடியும். வருகின்ற எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. நானோ, நீங்களோ வரிக்கு வரி பதில் சொல்லிக் கொண்டு நிற்பதில்லை. மாறாக, மாற்று கருத்துக்கு(ம்) இடம் கொடுப்பது என்பது வலைப்பதிவின் அடிப்படை சாரம்சம்.

இதில் மட்டுறுத்தல் என்று ஒரு சுதந்திரமும் எழுதுபவருக்கு இருக்கிறது. எனவே யாரும் கொதிப்படையாமல் ஒரு அளவுக்கு மேல் போவதைக் கட்டாயம் தடுக்க முடியும். ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? உங்கள், என், அருள்செல்வன், சன்னாசி, இன்னும் பலரின் வலைப்பதிவுகளில் எத்தனை முறை மட்டுறுத்தி பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன? (நான் அறிந்தவரை இன்றுவரை என் பதிவில் ஒரு பின்னூட்டத்தையும் தடை செய்யவில்லை). மறுவினை செய்பவருக்கு அந்தச் சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுப்பதால் யாரும் அபத்தமாகக் கருத்துகள் எழுதுவதில்லை. மாறாக, பெருசுகளுக்குப் பின்னூட்டப்பெட்டியை மூடவேண்டியிருக்க முக்கிய காரணம் - மறுவினைக்கு மதிப்பு கொடுக்கப்போவதில்லை என்ற நிலையில் போகிற போக்கில் கல்லெறிபவனுக்குத்தான் ஆர்வம் வருகிறது. நான் பிரபலமானவன் எனவேதான் என்னைத் தாக்குகிறார்கள் என்று சுயபச்சதாபம் கொள்ளத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. பிரபலத்திற்குக் கொடுக்க வேண்டிய விலை என்று நேர்மையுடன் எதிர்கொள்ளலாமே?

இது பெரிதும் அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது என்றே தோன்றுகிறது. வலைப்பதிவு என்பது உரையாடல், சரளமாக, சாதாரணமாக சகநண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு நம் புரிதலையும், அறிவையும் முன்னெடுத்துச் செல்வது. மாறாக எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவ மனநிலையில் குன்றேறி நின்று பிரங்கிப்பது மட்டுமே இவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

வலைப்பதிவு எழுத வரும் “எழுத்தாளர்கள்” கொஞ்சம் கண்களைத் திறந்து இங்கு ஐந்து வருடங்களாகப் பலரால் எப்படி வலைபபதிவு எழுத முடிகிறது என்று பார்க்க வேண்டும். மேலே சொன்ன நம்மில் யாரும் முழுக்க முழுக்க நெய்யில் செய்த இனிப்பு மிட்டாய் கருத்துக்களை எழுதுவதில்லை. மனத்தளவில் உண்மை என்று தோன்றுவதைத் தயங்காமல் எழுதுகிறோம். வாசிப்பவருக்கு இந்த இடத்தில் நிறையவே மரியாதை உண்டு. எனவே பின்னூட்டப் பெட்டிகள் திறந்தே இருக்கின்றன.

காரசாரமாக எதிர்வினையைத் தூண்டும் பதிவை எழுதினால் அதற்கு வரும் பின்னூட்டங்களைப் பற்றியும் யோசித்துப் பதில் சொல்லும் வகையில் எழுத வேண்டும். எனவே ஒருவகையில் என்ன மறுவினை வரும் என்பதை எதிர்ப்பார்த்தே வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. மாறாக விமர்சனங்கள் எனக்குத் தேவையில்லை என்றால் ஏன் வலைப்பதிவு எழுத வேண்டும்?

ஒரு சமயத்தில் எனக்கும் பின்னூட்டப்பெட்டியை மூடிவிடச் சொல்லி “மூத்த” எழுத்தாளர்கள் இருவரிடமிருந்து யோசனைகள் வந்தன. ஒரு வேளை அப்படியும் ஒரு நிலை வந்தால் நான் வலைப்பதிவு எழுதுவதைத்தான் நிறுத்துவேன்.

மின்னஞ்சல் மூலம் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு, தேவையானதை மட்டும் பொறுக்கியெடுத்து அதற்கு அடுத்த பதிவாக பதில் எழுதும் சீட்டுக்கவித்தனம் இன்றைய மின்னூடகத்தைப் பற்றி இவர்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது.

வலைப்பதிவு குறித்த ஹரன் பிரசன்னாவின் தமிழினி கட்டுரை, ஜெயமோகன் எதிர்முகம் புத்தகத்தில் சொல்லியிருப்பவை இவற்றை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத பல நாட்களாக நினைத்திருக்கிறேன். வலைப்பதிவுகள் குறித்து அச்சு வாசகர்களுக்கு இவர்கள் தரும் பிம்பம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. விரைவில் எழுதுவேன்.

**
வலைப்பதிவு என்பது உரையாடல், சரளமாக, சாதாரணமாக சகநண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு நம் புரிதலையும், அறிவையும் முன்னெடுத்துச் செல்வது. மாறாக எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவ மனநிலையில் குன்றேறி நின்று பிரங்கிப்பது மட்டுமே இவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
**
வலைப்பதிவு குறித்த ஹரன் பிரசன்னாவின் தமிழினி கட்டுரை, ஜெயமோகன் எதிர்முகம் புத்தகத்தில் சொல்லியிருப்பவை இவற்றை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத பல நாட்களாக நினைத்திருக்கிறேன். வலைப்பதிவுகள் குறித்து அச்சு வாசகர்களுக்கு இவர்கள் தரும் பிம்பம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. விரைவில் எழுதுவேன்.

நல்லது.

வலைப்பதிவில் எழுதுவது என்பது ‘எழுத்துத்திறமையை காண்பிக்க’ என எழுதுபவர்களைக் கண்டு வியந்து போயிருக்கிறேன்.

அவனவன் வலைப்பதிவில் சலவை குறிப்பிலிருந்து, மளிகை பட்டியல் என எதை வேண்டுமானாலும் எழுதலாம் எனபதுதான் நான் புரிந்து கொண்டது. எங்கே போனாலும் எதை எடுத்தாலும்,யாருக்காவது எதையாவது நிரூபிக்க வேண்டும் என்கிறது போல சிலர் நினைத்து எழுதுவது பித்துக்குளித்தனம்.

வெங்கட் - நித்திய மறுசுழற்சித் தத்துவம் போல இது மறுபடி மறுபடி வந்துகொண்டேதான் இருக்கும். உங்கள் அனைத்துக் கருத்துக்களுடனும் ஒத்துப் போகிறேன். தாறுமாறான பின்னூட்டங்களைப்பற்றி பத்ரி சொன்னது ஓரளவு உண்மை எனினும், டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, என்ன - ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. நேரடி மனிதத் தொடர்புகளைத் தாண்டிய கருத்து விவாதங்களுக்கு பழம்பெருச்சாளிகள் தயாரில்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம் - அதை தெளிவாகவே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். மனித உறவுகளை மட்டுமே பெருமளவில் அடிப்படையாகக் கொண்ட, தொழில்நுட்பம் என்பதை ஒரு மலிவான ஆன்மீகப் பார்வைக்குள் பொதிந்து வைத்து ஒரு வெறும் ‘சௌகரியம்’ என்பதாகவே மட்டும் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்ட மனோபாவங்கள் நிரம்பியுள்ள, நம்மை காப்பாற்ற இன்னொரு காந்தி எப்போது வருவார் என்று கேள்விகள் ஆசிரியருக்கு அனுப்பப்படும் சமுதாயத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இரண்டு வருடங்களுக்கு முன், இணையத்தில் படிப்பவர்கள் எழுதுபவர்கள் அனைவரும் சைடு ஜோலி பார்த்துக்கொண்டிருக்கும் ஆழ அகலமற்ற மேம்போக்கான வாசகர்கள் என்று கருத்து தெரிவித்த கந்தசாமிகளுக்கு, கடந்த இரண்டு வருடங்களுக்குள் இணைய வாசகர்களின் தரம் சர்ரென்று ஏறிவிட்டதாக ஞானோதயம் வந்துவிட்டதோ என்னவோ, ஆற்றில் மணல் எடுக்க வரும் லாரிகள் மாதிரி ஒரு பெரிய லாரி ஊர்வலமே வருகிறது!!

My name is Red நாவலில், மனித உருவங்கள் குறித்த பிரதானமான அக்கறை இன்றியும், வரைந்து முடித்த ஓவியத்தில் கையெழுத்திடாமல் விட்டுவிடுவதே கலையின் உச்சம் என்றும், வரையப்படும் ஓவியத்துக்கேற்பக் கதைகள் எழுதப்படுகின்றன என்பதாகவும் இயங்கும் மத்திய கிழக்கின் சித்திரக்காரர்கள் பின்பு அவையனைத்துக்கும் நேரெதிரான வெனீஷிய, ஃப்ராங்க்கிய ஓவியர்களின் ஓவியங்களைப் பார்க்கும்போது அடையும் சிக்கலை கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலுள்ள ஓர்ஹான் பாமுக் என்ற கோட் சூட் போட்ட துருக்கியரால் வெகு துல்லியமாக எழுத முடிகிறது. சுயத்தை அழித்து பேரமைதிக்குள் கலக்கும் பெருந்தண்மையுடையதாகக் கற்பிதப்படுத்தப்படும் ‘கிழக்கத்திய மனோபாவத்தைத்’ தூக்கிப் பிடிப்பதாக வார்த்தைக்கு வார்த்தை பிரசங்கிக்கும் கூசிச் சுருங்கும் உயிர் கோமாளிகளால் எந்த இடத்திலாவது கையெழுத்துப் போடாமல் விட முடிகிறதா? கருத்துக்களால் யாருக்கும் பிரச்னை இல்லை - ஹிப்போக்ரஸி தான் பிரச்னையே. இப்போது, பின்னூட்டப் பொட்டியை மூடிவிட்டு எழுதுங்கள் என்று ஒரு அறிவுரை. மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆக்ஸிஜன் சப்ளை உள்ள சவப்பெட்டி மாதிரி ஒரு பொட்டிக்குள் ஒரு டேப்ரிக்கார்டருடன் போய்ப் பூட்டிக்கொண்டால் இன்னும் சௌகரியம். பின்னூட்டம் என்ன, பிராணவாயு தவிர எந்த ஊட்டமும் வராது, நினைப்பதையெல்லாம் எழுதித் தள்ள முடியும். இதே மாதிரியான ஹிப்போக்ரஸி தான் நீங்கள் குறிப்பிட்டு விமர்சித்திருக்கும் விஷயங்களிலும் இருக்கிறது. தெளிவான பதிவு, தெளிவான பதில்கள் - பாராட்டுக்கள்!!!

வெங்கட்,
நல்ல பதிப்பு. இதனூடாகவே பதிவுலகில் ஏற்படவேண்டிய சில மாற்றங்களையும் சொல்லியிருக்கலாம்.

பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்திருக்கிறார்கள். இதுவும் ஒருவகை மட்டுறுத்தல் முயற்சியே. பதிவ்வர்கள் எப்படி பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறார்களோ அதுபோலவே அவர்களும் தெரிந்தெடுத்த மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கிறார்கள்.

Our people are easily satisfied. There are numerous examples of people with great talents doing ordinary things and people with no talents getting to the top. Mediocrity is enough to satisfy our people, anything above it may in worst cases be rejected. The question then is who is going to remedy this situation. I think most responsibility rests with those who create.

Once again, nice thoughts on a serious issue.

>மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆக்ஸிஜன் சப்ளை உள்ள சவப்பெட்டி மாதிரி ஒரு பொட்டிக்குள் ஒரு டேப்ரிக்கார்டருடன் போய்ப் பூட்டிக்கொண்டால் இன்னும் சௌகரியம். பின்னூட்டம் என்ன, பிராணவாயு தவிர எந்த ஊட்டமும் வராது, நினைப்பதையெல்லாம் எழுதித் தள்ள முடியும்

சன்னாசி - உங்களுக்கு ஜாக்ஸன் நினைவுக்கு வந்தார். எனக்குப் பரிக்ஷித் மஹாராஜா தோன்றியது. சுற்றிலும் கற்கோட்டைகளைக் கட்டிக்கொண்டுவிட்டால் (அதற்குள் மறக்காமல் கொஞ்சம் ஜால்ராக்களைப் பிடித்துப் போட்டுக்கொள்ள வேண்டும்) லௌகீகக் கவலைகள் இல்லாமல் ஹரிகதா பஜனை - நித்தமும் நாமஸ்மரணைதான், நிரந்தர ஸ்வர்க்கம்தான்.

சிறில்-

>பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்திருக்கிறார்கள். இதுவும் ஒருவகை மட்டுறுத்தல் முயற்சியே. பதிவ்வர்கள் எப்படி பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறார்களோ அதுபோலவே அவர்களும் தெரிந்தெடுத்த மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கிறார்கள்.

தெரிந்தெடுத்த மின்னஞ்சல்களுக்கு ஏன் பொதுவில் பதிலளிக்க வேண்டும்? அண்ணாருக்கு சும்மா Reply பொத்தானைத் தட்டி அதேமாதிரி ரகஸியமாகத் தனியாகவே பதிலெழுதலாமே! புஸ்டாஸ் போட்டுக்கொடுத்தால் சிக்ஸர் அடிக்கலாம். யாக்கர் போட்டால் நோபால் சொல்லலாம் - இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள்தான்.

வெங்கட் உன்மையிலேயே உங்களுக்கு மோசமான பின்னூட்டங்களின் தீவிரம் புரிந்திருக்கிறதா என சந்தேகம் எழுகிறது. எனக்கே அது குறைவாகத்தான் உள்ளது இருந்தபோதுமே அறுவறுப்பும் மனச்சோர்வும் மிகுந்த ஒரு அனுபவம் அது தவிர்க்க இயன்றவரை தவிர்க்க வேண்டியது.

சிலவை நமக்கு நடந்தால் தெரியும். அவர்களுக்கு நடந்திருக்கிறது தெரிந்திருக்கிறது. :)

உள்ளே போய் பூட்டிக்கொள்கிறதெல்லாம் கொஞ்சம் அதிகபடியான சாடல்கள். பின்னூட்டப் பெட்டியை திறந்து வைத்திருப்பவர்களெல்லாமும் நேர்மையானவர்களுமல்ல மறைத்து வைத்திருப்பவர்கள் மோசமானவர்களுமல்ல. மின்னஞ்சல் என்பது அதிகமான accountabilityயுடன் வருகிறது. கொஞ்சம் தைரியமாக எதிர்கொள்ளலாம். பின்னூட்டப்பெட்டி தெருவில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி தலைவவ அங்கே சிலர் நன்கொடைகளைப் போடுவார்கள் சிலர் குப்பையும் போடுவார்கள்.

மட்டுறத்தப்படும் பின்னூட்டத்திற்கும் மின்னஞ்சலில் பெறப்படும் பின்னூட்டத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம் எனத் தெரியல. அதர் ஆப்ஷன், அனானி ஆப்ஷன் பலரும் அனுமதிப்பதில்லை அவர்களை விட்டுவிட்டீர்களே.

பின்னூட்டங்களின் வழியே பல நல்ல விவாதங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால் எல்லோரின் அனுபவமும் அதுவல்ல.

தலைப்பிற்க்கு - செத்த மரங்களில்தானே சிற்பங்கள் செதுக்க முடியும். சிற்பங்களுக்கு உயிர் இருக்க வேண்டும் என்பது கற்பனைதானே.

ஆங்கிலப் புலமை என்பது இலத்தீன், பிரஞ்சு, ஜெர்மன் போன்ற பல வார்த்தைகள் ஆங்கிலமயமாக்கபட்டு உபயோகபடுத்தப்படுகின்றன. தமிழில் அப்படி இல்லையே.

இங்கு ‘ழ’ உச்சரிப்பிற்க்கு சிரமப்படாதவர்கள் கூட தமிழ் மொழியின் மேன்மைக்கு பாடுபடுபவர்களாக தங்களை காட்டி கொள்ள முடியும்.

நான் பதிவு கணக்கு வைத்திருந்தாலும், பதிவுகள் எழுதியது இல்லை. இந்த பின்னூட்ட மட்டுறுத்தல், பயமுறுத்தல் ஒரு முக்கிய காரணம் :-)) சாதாரணமாக வரும் எரிதங்களை விலக்கவே தாவு தீர்ந்து விடுகிறது. எரிச்சலோடு வரும் எரிதங்களினால் மன நிம்மதிதான் பாழாகும் என்று நினைக்கின்றேன். பதிவு எழுத கொஞ்சம் ‘தடித்த’ தோலும் வேண்டும் என்று தோன்றுகிறது.

//பதிவு எழுத கொஞ்சம் ‘தடித்த’ தோலும் வேண்டும் என்று தோன்றுகிறது.//

ஏதாவது ஒரு கும்மிக்கூட்டணியில் ஐக்கியமானவர்களுக்கு இதிலிருந்து விலக்குக் கிடைக்கலாம்.:-)

இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வது நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!

என் தளத்தில் பின்னூட்டங்கள் இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.

அதேவேளை “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை. இதுபற்றி நேற்றுத்தான் எழுதினேன்.

பிரபு ராஜதுரை கூறியிருப்பது பற்றி சுருக்கமாக - தமிழில் பத்தி எழுதுவோரில் மறைந்த சுஜாதா உள்ளிட்ட பலரிடமும் இந்தப்பிரச்னை உண்டு. தவிர, இந்தியாவிலிருந்து வரும் ஆங்கிலப்பத்திரிகைகளில் சிலாகிக்க இடமிருப்பதுபோல மோசமான விஷயங்களும் பல நிச்சயம் உண்டு. ஆங்கிலப்பத்திரிகை உலகில் பல ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில் பல எடுத்துக்காட்டுகளை என்னால் கூற முடியும்…

நாகார்ஜுனன்

திருத்தங்களுடன் வாசிக்கவும்..

இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வதில் நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!

என் தளத்தில் பின்னூட்டங்களை இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.

அதேவேளை “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை. இதுபற்றி நேற்றுத்தான் எழுதினேன்.

பிரபு ராஜதுரை கூறியிருப்பது பற்றி சுருக்கமாக - தமிழில் பத்தி எழுதுவோரில் மறைந்த சுஜாதா உள்ளிட்ட பலரிடமும் இந்தப்பிரச்னை உண்டு. தவிர, இந்தியாவிலிருந்து வரும் ஆங்கிலப்பத்திரிகைகளில் சிலாகிக்க இடமிருப்பதுபோல மோசமான விஷயங்களும் பல நிச்சயம் உண்டு. ஆங்கிலப்பத்திரிகை உலகில் பல ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில் பல எடுத்துக்காட்டுகளை என்னால் கூற முடியும்…

நாகார்ஜுனன்

தீர்மானித்து விட்ட காரணத்துக்காக அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல், எடுத்த தீர்மானங்களுக்குத் தோதாக சுற்றி வளைத்து வியாக்கியானங்கள் எழுதாமல், முடிவுகளை மறுபரிசீலனை செய்ய முன்வருவது, பொதுவாக அச்சு ஊடகங்களில் இருந்து இணையத்தில் சைடு ஜோலி பார்க்க வருபவர்களிடம் காணக் கிடைக்காத ஒரு நல்ல குணாதிசயம்.

வெரி குட் நாகார்ஜூனன்.

சிறில் - உங்கள் கடைசி இரண்டு கருத்துக்களும் என்னுடைய அடுத்த பதிவுக்குத் திறப்பைத் தந்திருக்கின்றன. விரைவில் எழுதுகிறேன்.

எனக்கு மோசமான பின்னூட்டங்கள் வந்திருக்கின்றனவா என்ற சந்தேகத்திற்கு இரண்டு விதமான பதில்கள்: 1. ஆமாம், நான் ஏற்கனவே எழுதியதைப் போல குறைந்தபட்சம் இரண்டு பெயர் பெற்ற எழுத்தாளர்கள் அவற்றைப் படித்துவிட்டு என் பின்னூட்டப்பெட்டியை மூடச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களைப் பாதித்ததைப் போல என்னைப் பாதிக்காததால் மூடவில்லை.

2. ஒருக்கால் என்னுடைய பதிவுகள்/பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் வாசித்துவிட்டு (நான் எந்தப் பின்னூட்டத்தையும் நீக்கியதில்லை) எனக்கு மற்றவர்களைப்போல மோசமான பின்னூட்டங்கள் வரவில்லை என்ற முடிவுக்கு வருவதும் சாத்தியமே. அப்படியென்றால் நான் அவற்றை வரவழைக்கும் தகுதியில்லாதவன் என்று கொள்ளலாம்.

ஶ்ரீதர் - கோனார் நோட்ஸ்க்கு மன்னிக்கவும். செத்த மரங்கள் = காகிதங்கள்.

எழுதுவதற்கு முன்னாலே எரிச்சல் பின்னூட்டம் வரும் என்று பயப்படுவது ஆச்சரியமளிக்கிறது. எரிச்சலைத் தூண்டாமல் எழுத முயற்சிக்கலாமே!

காசி - தடித்த தோல்களைப் பற்றி சொல்ல எனக்குத் தகுதியில்லை என்று நினைக்கிறேன். :)

நாகார்ஜுனன் - பிரகாஷ் சொன்னதுதான். எந்தவிதமான முன்முடிபுகளும் இல்லாமல் உரையாடல் சாத்தியத்தை முயற்சித்துப் பார்க்க வந்ததற்கு நன்றி!

சூப்பர், ஒழிக எல்லாவற்றையும் உள்வாங்கி அப்படியே விட்டுவைத்தால் கொஞ்ச நாட்களில் நின்றுவிடுவது நான் நடப்பில் கண்டது. ஒருமுறை நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர் ஒருவர் என் அறிவியல் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு “அது நல்லா வந்திருக்குங்க வெங்கட்” என்று சொன்னார். நான் என்ன நல்லா என்று தெரிந்தால் அடுத்த எழுத்துக்கு உதவியாக இருக்குமே என்று துருவித்துருவிக் கேட்டேன். அதே வரிதான் திரும்பத் திரும்ப வந்தது. சில சமயங்களில் நமக்கு முற்றிலும் தெரியாத ஒன்றைப் பிறர் எழுதும்பொழுது ஒரு லேசான புரிதல்/ஆர்வம் வந்தால் இதுமாதிரி ஒற்றை வார்த்தை சூப்பர்-தான் வருகிறது. (அதேபோல்தான் ஒழிக-வும்). எனவே, இவற்றை அப்படியே விட்டுவிடுவதால் எந்தப் பாவமும் இல்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

பின்னோட்டம் நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக எழுதிவிட்டேன். இப்பதிவு குறித்த விவாதம் இங்கு
http://jamalantamil.blogspot.com/2008/04/blog-post.html

அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன் - வலையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றிகள்!

படைப்பிலக்கியம், வலைப்பதிவுகள் இரண்டுக்குமான வித்தியாசத்தை இளக்க முயற்சிக்கவில்லை. நுட்பம் சார்ந்த வளர்சிதை மாற்றங்களை நீங்கள் கணக்கில் கொள்ளவில்லை எனத் தோன்றுகிறது. இன்றைக்கு நான் எழுதத் தொடங்கியிருப்பதில் அதைத் தொட்டிருக்கிறேன். இது இன்னும் வரும்.

[...] வெங்கட் கட்டுரையின் மையக்கருத்தை, இங்கு வந்திருக்கும் பரந்த பின்னூட்டாங்கள் நிலைநாட்டி வலியுறுத்துகின்றன. அதேவேளை நேற்றுக் கூறியது போல “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை! [...]

நல்லதொரு தலைப்பில் வந்திருக்கும் நல்ல பதிவு. வலைப்பதிவுலகின் பல படைப்புகள் நிச்சயமாக பதிப்புலகின் படைப்புகளை விஞ்சி நிற்கின்றன என்பதில் ஐயமில்லை. இங்கு காணப்படும் நகைச்சுவை மற்றும் அரசியல் பதிவுகள் பதிப்புலகை ஓரம் கட்டிவிடுகின்றன. ஆனால் பின்னூட்டங்கள் வரமா சாபமா என்று தெரியாத நிலையில்தான் இன்னும் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சில செய்திகளைப் பற்றிக் கருத்து தெரிவிக்காமலோ அல்லது பதிவெழுதாமலோ இருந்தால் பின்னூட்டங்கள் தரும் அபத்தங்களிலிருந்து தப்பிக்கலாம். இந்நிலையில் பெரிய எழுத்தாளர்கள் பின்னூட்டப் பெட்டிகளை மூடி வைத்திருப்பது எனக்கு தவறாகத் தெரியவில்லை. வலைப்பதிவுலகம் பெற்றிருக்கும் கவனமும் முக்கியத்துவமுமே பெரும் எழுத்தாளர்களை இங்கு இழுத்திருக்கின்றன. மின்னஞ்சல் முகவரியில் அவர்கள் செயலாற்றுவதும் மட்டுறுத்தலுடன் பின்னூட்டப் பெட்டியைக் கையாளுவதும் ஏறக்குறைய ஒன்றெனவே எனக்குத் தொன்றுகிறது.

பதிவோடு உடன்படுகிறேன்.

மறுமொழி மட்டுறுத்தல், ட்ராக்பேக் தடுத்தல், பூங்கா எடிட்டோரியல் எல்லாமே மச்சியவெல்லித்தனமாக இருக்கிறது என்பது வெளிப்படை. எனினும், அதற்கும் (Garrett Mattingly: The Prince: Political Science or Political Satire?) மாற்றுக்கருத்து இருக்கிறது. அது போல், பின்னூட்டங்களுக்கான கேள்வி…

1. —எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம் ஆசிரியர் அடிக்கோடிட்டு சினிமா என்று எழுதுவார் என்று நம்பமுடியவில்லை.—

ஏன்? ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர், இப்படித்தானே மாற்றிப்போட்டு பதிவெழுதுகிறார்? தமிழ்ச்சொல்லின் அர்த்தம் நேரடியாக (எளிமையாக) விளங்கிக் கொள்ள முடியாமல் போவதினால், அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தை சொல்லப்படுகிறது.

குமுதம் ஆசிரியர் சாட்சி சொல்ல வரப்போவதில்லை. Inductive logic படி, இது வரை ஞாநி எப்படி எழுதியிருக்கிறார்? தீம்தரிகிட (keetru.com/dheemtharikida/index.php) இதழ்களில் ஸ்டைல், லேட்டஸ்ட் போன்றவை தென்பட்டாலும் குமுதத்தில் வெளியான அளவு நெருடவில்லை.

ஆசிரியர் கைங்கர்யமா, ஞாநியின் விருப்பமா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

2. —வருகின்ற எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.—

நிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன் :)
அதாவது, பொதுமைப்படுத்திவிடமுடியாது.

அதுவும், இன்னொருத்தர் எழுதியதை அனுமதித்தால்

* ‘இந்தக் கருத்துக்கு மட்டுறுத்தியவர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்னும் குற்றச்சாட்டு;
* ‘அவதூறாக இருக்குமோ?’ என்று நிறுத்தி வைத்தால், ‘கருத்து சுதந்திரம் பறிபோகிறது!”

இந்தப் பதிவுடன் எப்படியோ சம்பந்தப்படுத்தி, இங்கே என்னைப் பற்றி அவதூறாக அனானியாக ஒருவர் எழுதினால்,

அ) தணிக்கை செய்து வெளியிடுவீர்கள்
ஆ) முழுமையாக நிராகரித்துவிட்டு, ‘மன்னிக்கவும்… உங்கள் மறுமொழி சரியில்லை’ என்று பொதுவில் சொல்வீர்கள்.
இ) முழுமையாக நிராகரித்துவிட்டு, எதுவும் சொல்லமாட்டீர்கள்
ஈ) அப்படியே வெளியிடுவீர்கள்
உ) அதன் பிறகு நான் அதை கண்டித்தால், குறிப்பிட்ட அநாகரிகமான பதிலை நீக்குவீர்கள்
ஊ) மீண்டும் ஒரு மறுமொழி (இது வேறு ஐ.பி.; இன்னொரு தாக்குதல்; மீண்டும் (அ) விற்கு செல்லவும்; ஒவ்வொரு பதிவிலும் இந்த சுழற்சி தொடர்ந்தால்?)

என்னைப் போன்ற அதிகம் அறியப்படாத பதிவர் என்றால், இந்த மாதிரி எங்காவது பேர் வந்தாலே பெருமிதம் அடைந்து மகிழ்வார்.

ஆனால், ரஜினி, அண்ணா, சானியா மிர்சா போன்ற பொருத்தமான புகழ் பெற்றவர்களை நோக்கிய வசவுகளையும் இணையப் பெருசுகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

சுருக்கமாக… தாவு தீர்ந்துரும்.

இந்த மாதிரி செய்து கொண்டே அலுவலிலும் நாட்டம் பயில இயலுமா?

3. —என், அருள்செல்வன், சன்னாசி, இன்னும் பலரின் வலைப்பதிவுகளில் எத்தனை முறை மட்டுறுத்தி பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன?—

இந்தப் பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் / எவ்வளவு பேருக்கு புரிகிறது?

அருள்செல்வன் கருத்துப்படங்கள் விளங்குவதில்லை; சன்னாசி கவிதைகள் புரியவில்லை. அறிவியல் குறித்து லாஜிக் (தமிழில் என்ன சொல்லோ? விக்சனரி ‘அறிவுப்பூர்வமான’ என்கிறது - எனக்கு இது பொருத்தமாக தெரியவில்லை) உடன் எழுதினால் ஆக்ரோசமாக விவாதம் செய்ய என்ன இருக்கிறது?

ஈழம், பார்ப்பனீயம் போன்றவற்றில் உத்தம நிலையை (பொலிடிகலி கரெக்ட்) முன்வைத்து எழுதினாலோ, முகமிலியாக எழுதினாலோ நீங்கள் சொல்வது பொருத்தம். கலகக்குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பினால் கல்லடி கிடைப்பது சகஜம்தான் என்று வைத்தியசாலைக்கு பக்கத்தில் வலையகத்தை நடத்துவது சாத்தியமா?
—–

சன்னாசிக்கு….
—டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, என்ன - ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை.—

தட்ஸ்தமிழில் கூட மறுமொழி வசதி இருக்கிறது. சினிமா கிசுகிசுவாகட்டும்; அரசியல் செய்தியாகட்டும்; இந்த மறுமொழி ஒவ்வொன்றுமே, Platonic பண்புகளை வலியுறுத்தி சகலவிதமான NC-17 தரச்சான்றிதழுடன் உலா வருகின்றன.

இங்கேல்லாம் பிரச்சினையே இல்லை.

ஆனால், சில நூறு பதிவர்கள். அனைவரின் இடுகைகளும் படிக்காவிட்டாலும் ‘சூடான பதிவு’ படிக்கப்பெறுகிறது; பதில்கள் கண்காணிக்கப்படுகின்றன. (மின்னஞ்சலிலேயே பதிலுக்கு வந்த பதில்கள் வந்துசேருமாறு வோர்ட்பிரெஸ் முதல் ப்ளாக்ஸ்பாட் வரை வசதி இருக்கிறது!)

ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா? அல்லது அதற்காக ஜென் தத்துவம் பயில வேண்டுமா?

[...] 2, 2008 ஆல் bsubra உரிமை துறப்பு: வெங்கட் பதிவோடு [...]

பாலாஜி - உங்களது கேள்விகள் சிலது குறித்து (வெங்கட்டை கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், மின்னஞ்சலில் அவர் அதைப் பெற்று ஒரு மதிக்கத்தக்க கேள்வியாகத் தேர்ந்தெடுத்டு பதில் போடுவதற்கும், அது குறித்த ஒரு கருத்தை தெரிவிக்க நான் இன்னொரு பதிவை வேறோர் இடத்தில் போட்டு, இந்தப் பதிவுக்கும் தொடுப்பு கொடுக்கத் தேவையின்றி இந்த வலைப்பதிவில் பின்னூட்டங்கள் இடும் வசதி அனுமதிக்கப்பட்டிருப்பதால், கேள்வி அவருக்காயினும் எனக்குத் தோன்றியதை பின்னூட்டமாக இங்கேயே எழுதுகிறேன் - குறுக்கே புகுவதாக இருந்தால் மன்னிக்க):

இந்தப் பதிவுடன் எப்படியோ சம்பந்தப்படுத்தி, இங்கே என்னைப் பற்றி அவதூறாக அனானியாக ஒருவர் எழுதினால்…

என்னைப் போன்ற அதிகம் அறியப்படாத பதிவர் என்றால், இந்த மாதிரி எங்காவது பேர் வந்தாலே பெருமிதம் அடைந்து மகிழ்வார். ஆனால், ரஜினி, அண்ணா, சானியா மிர்சா போன்ற பொருத்தமான புகழ் பெற்றவர்களை நோக்கிய வசவுகளையும் இணையப் பெருசுகளையும் பொருத்திக் கொள்ளலாம். சுருக்கமாக… தாவு தீர்ந்துரும்.

ஆக, அவதூறாக எழுதுவதுதான் பின்னூட்டங்களின் ஒரே பிரச்னை என்றால், அச்சு ஊடகங்களில்/திரைப்படங்களில்/தொலைக்காட்சிகளில் இந்த அவதூறு கோராமையெல்லாம் நடப்பதில்லையா? காலச்சுவடும் இன்னபிறரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது எந்த வகையில் சேர்த்தி? சிறுபத்திரிகைகளில் மாற்றுக் கருத்துள்ளவர்களை இடுப்புக்குக் கீழே தாக்குவதில்லையா? ஆனந்தவிகடன் ஜெயமோகன் எழுதியதை வெளியிட்டு எம்.ஜி.ஆர் குறித்தும் சிவாஜி குறித்தும் ‘அவதூறு’ செய்தது விகடன் அச்சுப்புத்தகத்தில் உள்ள பின்னூட்டப் பெட்டி மூலமா? சன்.டிவி டாப் டென்னில் திரைப்படங்களைக் குதறி எடுப்பதைச் சகியாமல் சத்யராஜ் தனது படமொன்றில் கோட் சூட் போட்டு சேர் மேல உட்கார்ந்து காலை ஆட்டிட்டே சொல்லுற உனக்கெல்லாம் என்று கேட்பதில் ‘அவதூறு’ எந்தப் பக்கம்? அரசியல் மேடைகளில் (ஜெயமோகன் எழுதாமல் விட்ட) ‘ஒரு நாளு இந்த ***** ஒண்ணுக்குப் போயிட்டிருந்தப்ப’ என்று ஆரம்பித்து நிறுத்தி ஒரு சோடா குடித்து, பின் தொடருகையில் ‘எங்கே விட்டேன், ஆங், ***** ஒண்ணுக்குப் போயிட்டிருந்ததில் விட்டேன்’ என்று தொடரும் (தீப்பொறி ஆறுமுகமா வெற்றிகொண்டானா நினைவில்லை) அவதூறு அரசியல் மேடைகளில் சைடில் பொருத்தப்பட்டிருக்கும் பின்னூட்டப் பெட்டிகள் மூலமா நிகழ்கிறது? இந்த மாதிரி அவதூறுகளை முன்னே பின்னே பார்த்திராதவர்கள் இங்கே வந்து ஏதோ பச்சைப்பிள்ளை மாதிரி சிரமப்படப்போகிறார்கள் என்று ஏன் முன்னேற்பாடாகச் செய்யவேண்டும்? இந்த ஆபாசப் பின்னூட்டங்கள் எழுதுபவர்கள் போலி மின்னஞ்சல் ஒருவாக்கி இந்த பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டிருக்கும் மின்னஞ்சல்களுக்கெல்லாம் தாறுமாறாக மின்னஞ்சல்கள் அனுப்ப முடியாதா? அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதெல்லாம் ஒரு சாக்கா? மன உறுதி, தியான, திண்மை, அற ஒழுக்கக் கடாக்ஷநிபாதங்கள் தனக்குக் கிட்டியிருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவேண்டுமானால் பின்னூட்டப் பெட்டியை திறந்து வைத்து அங்கே என்ன நடக்கிறது என்றே கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமே?

உங்கள் கருத்து 3. குறித்து:

பிறர் குறித்து அவர்கள் தான் சொல்லவேண்டும் - என்னைக் குறித்து வேண்டுமானால் ஒரு சிறு விளக்கம் கொடுக்கலாம். உங்களுக்கு நானோ வேறு எவரோ எழுதுவது புரியவில்லை என்பது உங்கள் பிரச்னை - அதற்கு உங்களைத்தவிர யாரும் ஒன்றும் செய்ய முடியாது. பார்ப்பனீயம், ஈழம் குறித்து எழுதாமல் ஜாதி வெறி குறித்து எழுதாமல் பாதுகாப்பாக விளையாடுவது என்று பொருள்பட நீங்கள் குறிப்பிட்டிருப்பதை நான் செய்திருப்பதாகத் தோன்றவில்லை - மேலும் - குறிப்பாக - நீங்கள் குறிப்பிடும் இதே எழுத்தாளர்களைப் பற்றி (மட்டுமல்ல, எவரைப்பற்றியும் வைக்கலாம்)யும் அச்சு ஊடகங்களிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தான் இவை - சமூகப் பிரச்னைகளுக்காக இவர்கள் போராடியதில்லை, சிறை சென்றதில்லை, லத்தி அடி வாங்கியதில்லை என்று. நீங்கள் குறிப்பாலுணர்த்த முயல்வதுபோல ஒரு குறிப்பிட்ட பிரக்ஞை மட்டும்தான் இருக்கவேண்டுமென்றால் Being John Malkovichல் (Simble eksaamble) மால்கோவிச்சின் தலைக்கு