நிழற்படப் போட்டி - விருது

first_prize.jpgthird_prize.JPG

ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden - ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. தென் ஒண்டாரியோ ஆர்க்கிட் சொஸைட்டி, ராயல் பொட்டானிக்கல் கார்டனுடன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. விழாவில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட் செடிகள் இடம்பெறுகின்றன. ஆர்க்கிட்களின் பல பிரிவுகளுக்கும் தனித்தனி பரிசுகள் உண்டு. போட்டியின் மறுபுறத்தில் நிழற்படங்களைத் தவிர கோட்டோவியம், நீர்வண்ணம், எண்ணெய்ப்பூச்சு, பீங்கான்/களிமண் என்று பல பிரிவுகளில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே மூன்று பரிசுகள் உண்டு.

மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிழற்படப் பிரிவில் என் படங்கள் (ஒரு போட்டியாளர் இரண்டு படைப்புகளை மாத்திரமே சமர்ப்பிக்கலாம்) மூன்றாவது மற்றும் இரண்டாவது முதலாவது பரிசுகளைப் பெற்றன. நிழற்படப் போட்டியொன்றில் நான் பங்குபெறுவது இதுதான் முதல்முறை. இரண்டு படங்களும் சென்ற வருடக் காட்சியில் எடுக்கப்பட்டவை (காட்சியில் முக்காலி மற்றும் விசேட ஒளியமைப்புகளுக்கு அனுமதி இல்லை, எனவே இருக்கும் நிலையைக் கொண்டே படங்களை எடுக்க வேண்டும்.) நிக்கான் ரா (RAW) கோப்பாகப் பதியப்பட்டவை, Apple Aperture உதவியுடன் JPG வடிவில் மாற்றப்பட்டன. பின்னர் கிம்ப், உதவியுடன் பின்புலங்கள் நீக்கம் செய்யப்பட்டன.

பரிசு பெற்ற படங்கள் இங்கே

மூன்றாவது பரிசு : http://domesticatedonion.net/photos/index.php/2008/01/13/cymbidium/

முதல் பரிசு : http://domesticatedonion.net/photos/index.php/2008/03/12/phyllis-scott-milne-award/

கூடுதலாக, Digital Photography and Digital Art இரண்டுக்குமான ஒட்டுமொத்தப் பரிசான Best in Class - Phyllis and Scott Milne Award-ம் மஞ்சள் ஃபெலனாப்ஸிஸ் ஆர்க்கிட் படத்திற்குக் கிடைத்தது.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

[...] உள்ளும… added an interesting post on நிழற்படப் போட்டி - விருதுHere’s a small excerpt [...]

வாழ்த்து(க்கள்) வெங்கட்.

:)

வாழ்த்துகள் வெங்கட்.
இரு படங்களுமே அருமை.
அதிலும் முதல் பரிசு பெற்ற படத்தின் தரம் 100%.

vazhthukkal

ஒரு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மருத்துவரின் முன்னறையில் உட்கார்ந்திருந்த போது, புரட்டிய சஞ்சிகையில் நியு மெக்சிக்கோவின் காட்டு ஓர்கிட் பூக்கள் பற்றி படித்து ஆச்சரியப்பட்டுப் போனேன். ஓர்கிட் பூக்கள் பாலை நிலத்திலும் மலரும் என்பதறிய சுவராசியமாக இருந்தது. அதுவும் பாலையில் 29 வகைகளா என்று ! கற்றுக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.

அப்போது உங்களுடைய ஓர்கிட் படங்கள் ஞாபகத்திற்கு வந்தன. நல்வாழ்த்துகள்.

good!

Congrats, the pictures are very nice!

வாழ்த்துக்கள் வெங்கட்…

அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி! இரண்டு நாட்களாக இதைச் சொல்லிக் கொள்ளத் தயக்கமாக இருந்தது, இன்று புகுந்த வீட்டின் பாராட்டை உடன்பிறந்தானிடம்கூடச் சொல்லக்கூடாதா என்று தோன்றிய நொடியில் எழுதிவிட்டேன்.

வாசன் - நியூ மெக்ஸிகோ ஆர்க்கிட் தகவலுக்கு நன்றி! பாலைவனம், பனிபடர்ந்த தண்றப்பிரதேசம், எரிமலைகளுக்கு அருகில், சேற்றில் என்று ஆர்க்கிட்கள் பூக்காத இடமேயில்லை. ஒருவகையில் மிகவும் தகவமைந்து கொள்வனவாக உள்ள இவை மறுபுறத்தில் வீட்டில் வளர்க்கக் கடினமாக இருப்பது விநோதம்.

முதற்பத்தியில்
//வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. //

இரண்டாம் பத்தியில்
//மூன்றாவது மற்றும் இரண்டாவது பரிசுகளைப் பெற்றன. //

ஆக, முதல் மூன்று இடங்களும் உங்களுக்குத்தான் என்று சொல்லுங்கள் ;-)

நல்லா படம் எடுக்கறதே திறமை என்றால், பரிசும் வாங்கறது மேலும் சிறப்பு. மேலும் இது போல் நிறைய படங்கள் எடுத்து, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வசந்தன் - ம்ம்ம். நன்றி! திருத்தியிருக்கிறேன்.

சதங்கா - நன்றி.

வாழ்த்துக்கள்!!!!

mikavum santhosamaana seithi! pirantha veedu ungal vetriyai arinthu mikavum santhosapadukirathu!

anbudan
osai chella

வெங்கட்
படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து்கள் வெங்கட்.

வாழ்த்துகள் வெங்கட்… படங்கள் அருமையாக இருக்கின்றன…

nanaani, chella, prakash, suresh kannan, peyarili - thanks for the encouragement.

Leave a comment

(required)

(required)