Archive for March, 2008

செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்

பிரபு ராஜதுரையின் இந்தக் கேள்வி (‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?)மிகவும் முக்கியமானது.
ஞாநியின் கட்டுரை ஒன்றை முன்வைத்து சஞ்சிகைகளில் பத்தி எழுதுபவருக்கு எந்தவிதமான மொழியறிவும் தேவையில்லை போலிருக்கிறதே என்று வியந்திருக்கிறார். இது கட்டாயமாக அவலநிலைதான். ஞாநியின் அந்தக் கட்டுரையின் இடத்தில் வேறு எந்தத் தமிழ்ப்பத்தியாளரின் கட்டுரையையும் போட்டு இதே விமர்சனத்தை முன்வைக்க முடியும். சான்றான்மை என்று ஒரு பதம் உண்டு; தான் செய்யும் காரியம் அனைத்திலும் தன் முழு எத்தனத்தையும் பயன்படுத்தி காரியம் எல்லாவற்றிலும் முழுமையடைவது சான்றோர்கள் [...]


டாடா – ஜகுவார்

அதிகார்வபூர்வமாக இப்பொழுது ஜகுவார், லாண்ட் ரோவர் இரண்டும் டாடாவின் கையில். இந்திய உற்பத்தித்துறையில் இது ஒரு முக்கியமான மைல்கல்.
அதிசொகுசு கார் டாடாவினால் மாசுபடப்போகிறது என்று எழுந்த கூக்குரல்கள்கள் எதுவும் எடுபடாமல் போய்விட்டன (என் முந்தைய பதிவு – அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகுவார், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்). சமீபகாலமாக இந்தியா தகவல் நுட்பம் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் சொல்லிக்கொள்ளத்தக்க உலக அதிர்வுகளை உண்டாக்கிவருகிறது. குறிப்பாக மருந்து உற்பத்தி மற்றும் தொழில்பொருட்கள் உற்பத்தித் துறை. ஆனால், மற்றெல்லாவற்றையும்விட இது [...]


நகைச்சுவை, அவலம், கொடூரம்

ஐந்து வருடங்களாகின்றன – அமெரிக்கா ஈராக்கின்மீது போர்தொடுத்து. கொண்டாட டிக் செய்னி பாக்தாத் சென்றிருக்கிறார்.
நகைச்சுவை
“If you look back on those five years it has been a difficult, challenging but nonetheless successful endeavour … and it has been well worth the effort,” Cheney, an architect of the invasion, said after meeting Iraqi leaders.
அவலம்
U.S. Vice President Dick Cheney on Monday [...]


பில்லி, சூன்யம், தொலைக்காட்சி

விட்டு விடு கறுப்பு, விடாதே செருப்பு, என்று அபத்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடையே இப்படியொரு உருப்படியான (கல்வி) நிகழ்ச்சி இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் வந்திருப்பது வியப்பான விஷயம்.
India TV தொலைக்காட்சியில் சனல் எடமருகு என்பவர் பில்லி சூன்யம் வைக்கும் சாமியார் ஒருவருடன் நேரடியாக மோதியிருக்கிறார். சனல் எடமருகு Indian Rationalists Association-ன் தலைவர். போட்டியில் சாமியார் தன் மந்திர பலத்தைப் பயன்படுத்தி எடமருக்குவைத் பலத்த முயற்சிகளுக்கும் பின்னர் சடமருக்குவைக் கொல்ல முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார். [...]


இனிய π தின வாழ்த்துகள்

இன்று மார்ச் 14 (3.14) உலகமெங்கும் π தினம் கொண்டாடப்படுகிறது! கணக்கில் பல அற்புதமான எண்கள் உள்ளன பை, i, e என்று இவை ஒவ்வொன்றும் விசேடமானவை. இவற்றுக்குள்ளே πமிகவும் விசேடமானது. πகுறித்து சில உபயோகமான(மற்ற) தகவல்கள்:


பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம் – 2008

அறிவியலில் சிறப்பான சாதனைகள் புரிந்த பெண் விஞ்ஞானிகளைக் கௌரவிக்கும் முகமாக லேரெல் நிறுவனத்தின் பணவுதவியுடன் வழங்கப்படும் யுனெஸ்கோ-லோரெல் பரிசுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன (இது குறித்த என் சென்ற வருடத்திய பதிவு இங்கே).
ஆசியா : பேராசிரியர் லிஹாத் அல்-கஸாலி (Prof. Lihadh Al-Gazali) ஐக்கிய அரபுக் குடியரசு
பேரா. அல்-கஸாலி மரபுவழி நோய்பரவல் குறித்த அவரது ஆராய்ச்சிக்காகப் பரிசு பெருகிறார். நோய்சார் மரபியல் துறை மரபு ரீதியாத் தொடரும் வியாதிகளைப் பற்றியது. இது நோய்களுக்கும் அவற்றைத் தாங்கி [...]


புத்தக விமர்சனம் : The Indian Clerk

இப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட் லெவிட்டின் தி இந்தியன் க்ளர்க் நாவல் அற்புதமான புனைகளத்தைக் கொண்டது. முதலாம் உலகப் போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து இந்தச் சரித்திர நாவல் துவங்குகிறது. சரித்திர நாவல்களில் நாம் பெரிதும் கண்டவை உண்மை நிகழ்வுகளினூடாக புனைவு மாந்தர்கள் உலவும் [...]


மூளைச் செயலிழப்பு – மருத்துவரின் அனுபவப் பகிர்வு

அறிவியலின் துறைகளுக்குள்ளே மனிதன் பெரிதும் விந்தையாய் காண்பது மூளையின் செயற்பாட்டை. நவீன அறிவியலின் புரிதல்கள் போதுமான அளவில் இல்லை என்று ஏக்கமும் வருத்தமும் கொள்ளவைப்பது மனித மூளையைப் பற்றிய புரிதல்களை. மறுபுறத்தின் அறிவியல் பயிற்சியும், அறிவியல் நோக்கும் இல்லாதவர்கள் மனித மூளையின் செயற்பாட்டை முழுவதுமாக அறிவியலின் எல்லைக்குள்ளே நின்று புரிந்துகொள்ள இயலாது என்று கூச்சலிடுகிறார்கள். காதலையும், காமத்தையும், கருணையையும், வீரத்தையும் ஹார்மோன்களின் கணக்கீட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பது இவர்கள் தரப்ப்பு வாதம். ஆனால் நவீன அறிவியல் கொஞ்சம் [...]


நிழற்படப் போட்டி – விருது

ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden – ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. ராயல் பொட்டானிக்கல் கார்டன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. விழாவில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட் செடிகள் இடம்பெறுகின்றன. ஆர்க்கிட்களின் பல பிரிவுகளுக்கும் தனித்தனி பரிசுகள் [...]


முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் – பகுதி 2

இதன் முதல் பகுதி
நாம் சாப்பிடும் சாப்பாட்டைச் செரிப்பதற்கு வயிற்றில் சுரக்கும் அமிலம் மிகவும் முக்கியமானது. (இது எப்படி வேலை செய்கிறது என்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசையிருந்தால் சொல்லுங்கள், இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம்). அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பதால் மூன்றில் ஒருவர் அவதிப்படுகிறார் என்று மருத்துவப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா காலத்திலும் எல்லா நாடுகளிலும் இது ஒரு முக்கியமான, தீராத வியாதியாகத்தான் இருப்பதாகத் தெரிகிறது. நம்மூரில் வவுத்தெரிச்சல், வவுத்துல புளியக் [...]