அனுபம் கேர் துணையுடன் ஆறுபரிமாணப்படம்

வழக்கமாக நமது திரைப்படங்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், ஆறு பரிமாணத்தில் இது கொஞ்சம் ஓவராகவே தோன்றுகிறது.

மொஹஞ்சதாரோவைப் பற்றிய இந்தப் படத்தில் வழக்கமான கட்புல, செவிப்புல உணர்வுகளுடன் கூடவே நாசி, தொடுகை உணர்ச்சிகளுக்கும் உண்டாம். “People can not only see but feel, smell and touch all the images and visuals in this film.”

smell, touch புரிகிறது. பீலிங்க்ஸ்தான் வழக்கமாக இந்தியப்படத்தில் எப்பொழுதும் உண்டே, இங்கே என்ன விசேஷம்?

தகவல் மூலம்: Annals of Improbable Research

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

//People can not only see but feel, smell and touch

I hope Namitha is acting.

இது உண்மையான செய்தியா? (சுட்டிகளில் படித்தபோதும் சந்தேகம் இருக்கிறது) - இருப்பின், வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், 3 பரிமாணம் + 3 புலன்கள் என்பதை ஆறு பரிமாணங்கள் என்று (தவறாகச்) சொல்கிறார்களோ?

Invasion of the body snatchers ஐ யெர்ஷு குரோட்டோவ்ஸ்கி நாடகமாக நிகழ்த்தி, அதில் ஒரு ‘பார்வையாளனாக’ (Note:பார்வையாளனாக ;-)) இருக்க முடிந்தால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்த்ததுண்டு - அதுதான் நினைவுக்கு வருகிறது!!

balaji

Namitha acting is like military intelligence.

சன்னாசி,

படத்திற்குத் தலைப்பு “மொஹஞ்சதரோவில் ஆரிய நாகரீகம்” அல்லது “இந்து மதத்தின் தொட்டில்” என்று இல்லாதவரை சரி.

தோக்கியோவில் வசித்தபொழுது டொயோட்டாவின் அம்லக்ஸ் திரையங்கில் http://www.amlux.jp/english/floorguide/index.html#box-b1f இதுபோன்ற சமாச்சாரத்தைப் பார்த்திருக்கிறேன். அரைக்கோளத் திரையரங்களில் (கிட்டத்தட்ட ஐமாக்ஸ் டோம் போல) படம் செல்ல கார் மலையில் செல்லும்பொழுது இருக்கை அதிரும். பாலைவனத்தில் மழைபெய்யும்பொழுது மண்வாசனை கிளம்பும், ரேஸ்கார் வந்தால் கூடவே வரும் அம்மணி வரும்பொழுது நறுமணம் வரும், இப்படி அதிர்வுணர்வு, வாசனை, முப்பரிமாணத் திரைப்படம் எல்லாம் இருந்தது அந்த அரங்கில் (நான் சொல்வது 1999-2001). முக்கியமான விஷயம் இது முற்றிலும் இலவசம் (டோக்கியோவில் அதிமுக்கியம்). பார்த்துவிட்டு திரும்பவும் வரிசையில் நின்றிருக்கிறோம்.

Invasion… இல் நீங்கள் பார்வையாளராக இருக்(கத்துவங்கலாம்)கலாம், ஆனால் அருகில் இருப்பவர்?

Leave a comment

(required)

(required)