ஒபாமா வெல்லட்டும்
இன்றைக்கு அமெரிக்காவின் மிக முக்கியமான முன்னோட்டத் தேர்தல்கள் நடக்கின்றன. இன்னும் ஐந்து மணி நேரத்திற்குள் ஜனநாயக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவந்துவிடும். (என்றுதான் நினைக்கிறேன்). இது கடைசிவரை இழுத்துக்கொண்டு போவது யாருக்கும் நல்லதில்லை, முக்கியமாக ஜனநாயகக் கட்சி.
என்னைப் பொருத்தவரை குடியரசுக் கட்சியைப் பற்றி அதிகம் கவலையில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் துப்பாக்கி முன்னேற்றக் குழு, ஆயுத வியாபாரிகள் மற்றும் பெட்ரோலிய மாஃபியாதான் மீண்டும் அமெரிக்காவை ஆளும். இது அமெரிக்காவிற்கும் உலகத்திற்கும் நல்லதிற்கில்லை. ஏழை அமெரிக்கர்களுக்கோ, பிழைக்கவந்த ஹிஸ்பானிய வரவாளர்களுக்கோ இது முற்றிலும் எதிராகத்தான் இருக்கும். எனவே முன்னோட்டத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக யார் வந்தாலும் பெரிதாக அக்கறையில்லை. ஜான் மெக்கெய்ன் வருவார் என்று தோன்றுகிறது. மிதவாதக் குடியரசாளர் என்ற முத்திரை குத்தப்படவராதலால் இவர் தன்னை வலிந்து தீவிர வலதுசாரி என்று காட்டிக்கொள்ளவே முயலப்போகிறார்.
கவனம் ஜனநாயகக் கட்சியின் மீதுதான். ஒரு வாரலாற்றை உருவாக்க அமெரிக்காவிற்கு அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஜனாதிபதியாக முதன்முறையாக ஒரு பெண் அல்லது கறுப்பினத்தவரைத் தெரிந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இந்த முன்னோட்டத் தேர்தல்களின் துவக்கத்தில் எனக்கு ஒபாமாமீது பெரிய மதிப்பிருக்கவில்லை. பெண் என்ற காரணம் கடந்து ஹில்லரி ஒரு திறமையான ஆட்சியைத் தரக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமாக ஜான் எட்வர்ட்ஸ் மீதுதான் எனக்கு அதிக மதிப்பிருந்தது. துரதிருஷ்டவசமாக எட்வர்ட்ஸ் விலகிவிட்டார்.
ஹில்லரிமீது நம்பிக்கை குறைந்துவருகிறது. அவருடைய செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானிக்க, அவர் உரக்கக் கூவி விற்கும் பல கொள்கைகளுக்கு எதிராகவே ஹில்லரி செயல்பட்டு வருகிறார். அது புஷ்ஷின் போரை நியாயப்படுத்தி வாக்களித்தது, பெண்களின் அதிகபட்ச வாராந்திர வேலை நேரத்தை 30 ஆகக் குறைப்பதற்கு எதிராக வாக்களித்தது போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் ஹில்லாரி பொதுவில் எப்படிச் செயல்படுவார் என்பதற்கு ஒரு உதாரணம். தற்பொழுதைய நடப்புகளிலிருந்து எந்தவகையிலும் மாறுபட்டதாக ஹில்லரியால் ஆளமுடியும் என்று தோன்றவில்லை. இதுதான் ஆன் கொல்ட்டர் போன்ற வலதுசாரி தீவிரவாதிகளையே அவர் மீது நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது.
மறுபுறத்தில் ஒபாமா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இப்பொழுதைய அமெரிக்காவின் போக்கிலிருந்து நிதானத்திற்குக் கொண்டுவரக்கூடிய ஒரே நபர் அவராகத்தான் தெரிகிறார். அதிகம் பக்குவப்படாதவர், அவருக்குப் போதுமான முன்னனுபவம் இல்லை என்பது ஒன்றுதான் அவர்மீது பெரிதாக வைக்கப்படும் விமர்சனமாக இருக்கிறது. முன்னனுபவமும் இன்னும் எதுவுமே இல்லாமல் இரண்டு தடவைகள் ஜார்ஜ் புஷ்ஷால் ஆட்சி நடத்த முடியும் என்றால் ஒபாமாவால் அதைவிடைத் திறமையாகக் கட்டாயம் அமெரிக்காவைச் செலுத்த முடியும்.
இன்றைய முன்னோட்டத் தேர்தல்களின் முடிவுகள் வருவதற்குள் என் கருத்தை எழுதியாக வேண்டும் என்ற உந்துதலால் அவசரமாக எழுதியது இது. என் கணிப்பில் ஒபாமா ஜனாதிபதியாகவும், ஜான் எட்வர்ட்ஸ் அவருக்குத் துணையாகவும் வந்தால் (வரமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது). அமெரிக்காவுக்கும், உலகத்திற்கும் நல்லது என்று தீவிரமாக நம்புகிறேன்.
* * *
நான் விரும்பிப்படிக்கும் பதிவாளர்களில் பலர் அமெரிக்காவில் வசிப்பவர்கள். இவர்கள் இன்னும் தேர்தலைப் பற்றி எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. என்னிலும் பார்க்க இந்தத் தேர்தலைக் குறித்து அவர்களால் மிகத் திறமையான கருத்துக்களைச் சொல்லமுடியும். விரைவில் நம் நண்பர்கள் எழுத வேண்டும் என்று அழைக்கிறேன்.
Popularity: 8% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
வெங்கட், சரியாகத் தெரியவில்லை. இன்னும் முடிவுசெய்யாதவர் பட்டியலில் இருப்பதாக நினைக்கிறேன். ஆரம்பத்தில் ஒபாமாவின் நட்சத்திரப் புகழின் பின்னால் என்ன இருக்கிறது என்று அவரது பேச்சைச் சில சமயம் பார்த்தேன். என்னைப் பெரிதாகக் கவரவில்லை. வெறும் வெற்றுப் பேச்சாகத் தான் தெரிந்தது. அனுபவமின்மை என்பது கூடப் பெரிய குறையாகத் தெரியவில்லை. ஹில்லரியின் அனுபவம் என்பதும் சற்று மிகையாகத் தோன்றினாலும், பல்லாண்டு காலப் பொதுவாழ்வு அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய ஒன்று என்று நினைத்தேன். இருவரில் யாராக இருந்தாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதே. இருந்தாலும், சன்னாசி சொல்வது போல், இருவரில் யாராக இருந்தாலும் மெக்கெயினுக்கு எதிராக என்னும் போது கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருக்கிறது.
அதற்குள் எட்டு வருடங்கள் ஓடி விட்டது (இரண்டு முறை)!
ஒபாமாவால் மெக்கெய்னை வீழ்த்த இயலுமா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
ஒபாமாவிற்கு சமீபத்தில்தான் ஆதரவு வந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் நிறைய மாதங்கள் இருப்பதால், அதற்குள் பெரும்பான்மையான ஆதரவை சம்பாதிப்பார் என எதிர்ப்பார்ப்போம். அதற்குள் – இன்றைய கிணற்றைத் தாண்ட வேண்டுமே.
இப்போதைக்கு இரண்டு பேருமே சரிசமமான ஆதரவைப் பெறுவார்கள் போலிருக்குது. வடக்கில் ஹில்லாரியும், தெற்கில் ஒபாமாவும்.
எழுத வேண்டுமென ஆவல் நிறைய உண்டு, நேரம்தான் கூடி வர மாட்டேன் என்கிறது – உடல்நலம் எனும் மிரட்டல்காரன் வேறு
பக்கத்து நாட்டிலிருந்து ஆதங்கப்பட்டு எழுதியுள்ளீர்கள். என்னுடைய கருத்துகள் சில வரிகளில்:
1. இங்கே நியு மெக்சிக்கோவில் இன்னும் நிறைய இடங்களில் வாக்களிப்பு நடந்து கொண்டுள்ளது ஜனநாயகக்கட்சி வேட்பாளர் தேர்வுக்கு. நிறைய மக்கள் வாக்களித்தார்கள் என்கிறது வானொலி. சில இடங்களில் வாக்கு சீட்டுகளில்லை. கடந்த 2 நாட்களில் 4 லிருந்து 6 அடி வரை ஸ்நோ விழுந்த வட நியு மெக்சிக்கோ ஊர்களில் கூட வாக்களிப்பு நன்றாக இருந்ததாம். குடியரசு கட்சிக்கு ஜூன் வரை தேர்தல் இல்லை. நான் இரு கட்சிகளில் பதிவு பண்ணிக் கொள்ளாத திரிசங்கு என்பதால் வாக்களிக்கவில்லை, அதுவும் ஜனநாயக கட்சியில் பதிந்து கொள்ள வாய்ப்புகள் தற்போது இல்லை.
2. அலுத்து போன உவமைதான் என்றாலும், lesser of the evils என்கிற மாதிரி தான் இந்த முறையும் என்னால் வாக்களிக்க முடியும். இருக்கும் வேட்பாளர்களில் – இரு கட்சிகளிலும் சுத்தமாக என்னால் (தற்போதைக்கு) வாக்களிக்க முடியாது என்றால் அது ஹில்லரிக்குதான்.
3. பொது தேர்தலுக்கு முன் ஏதாவது மாற்றங்கள் நேர்ந்தாலொழிய நான் வாக்களிக்காமல் கூட போகலாம். குற்றவுணர்வு மிச்சமாகும்.
4. ஒபாமா பற்றிய ஒரு பெரிய பயம் எனக்கு என்னவென்றால், ஏற்கனவே அரசு இயந்திரம் அளவுக்கதிமாக வியாப்பித்து எதிலும் மூக்கிலிருந்து பின்பக்கம் வரை இங்கு நுழைந்துவிட்டது – ( ஜோர்ஜ் #2 காலத்தில் அரசின் குறுக்கீடுகள் தனிமனிதன் வாழ்வில் அதிகமானது பெரிய வேதனை) + அவருடைய மிக குறைந்த பட்டறிவு.
நேரம் கிடைத்தால் நான் அமேரிக்க அதிபர் தேர்தல் குறித்து விரிவாக எழுதப் பார்க்கிறேன். பங்கு சந்தை இன்று வாங்கிய
- 300+ புள்ளி அடி இன்னும் வலித்துக் கொண்டுள்ளது – இதற்கிடையில் முடிந்ததை எழுதியுள்ளேன்!
சன்னாசி – கட்டாயமாக, அதிக வருஷங்கள் வசிப்பவர்களுக்குத்தான் உள்ளூர்க்காரர்கள் psyche பிடிபடும். (நியூ மெக்ஸிகோ வாசன் தெற்கத்திகாரர்கள் மனநிலை எப்படியிருக்கிறது என்று சரியாகச் சொல்லமுடியும்). ஐந்து வருடங்களுக்கு முன்னால் டூஸான் (அரிஸோனா) சென்றிருந்தபோது ஒரு காலையில் ஹோட்டல் காலையுணவு மேசையில் உள்ளூர் தம்பதியினருடன் பேசியது என் 9/11 குறித்த என் கணிப்புகள் எத்தனை மடத்தனமானவை என்று எனக்கு தெரியப்படுத்தியது. அதனால்தான் உள்ளூர் அமெரிக்க நண்பர்கள் எழுத வேண்டும் என்று எழுதினேன்.
ஆண் கோல்டரம்மணியைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக வைத்துக்கொள்ளலாம். (கனேடிய வலதுசாரிகளால்கூட அம்மணியைத் தாங்கிக் கொள்ளமுடியாது. இங்கே Stand-up comedianகளுக்கு அவரால் நல்ல பிழைப்பு).
ஒபாமா மட்டும் முழுத் தேர்தலில் நின்றால் அமெரிக்காவில் சிலரின் கோர முகம் வெளிவரக்கூடும்.
>ஹூசேன்/மெக்கேய்ன் ஹில்லரி/மெக்கேய்ன் என்று வந்தால் மெக்கேய்ன் எளிதில் வெற்றி பெறுவார் என்பது எனது கணிப்பு
இது நான் எதிர்பாராதது! ஏன்? புஷ் எதிர்ப்பு வலுப்பட்டு வருவதால் anti-incumbent sentiment ரிபப்ளிக்கன் யார் நின்றாலும் பாதிக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
>ஒசாமாவிடமிருந்து தேர்தல் நேரத்தில் ஒரு வீடியோ வரலாம்.
இது நெத்தியடி!!
வாசன்,
எப்பொழுதுமே lesser of the evils விஷயம்தானே அரசியலில். எனக்கென்னமோ குடியரசுக் கட்சியில் யார் வந்தாலும் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.
நியூ மெக்ஸிகோவில் பனியைப் பொருட்படுத்தாமல் வந்ததாக எழுதியிருக்கிறீர்கள். இந்தமாதிரி ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணுவதாலேயே ஓபாமா (ஓரளவுக்கு ஹில்லரிகூட) நம்பிக்கை வருகிறது. அரசியலில் இழந்துபோன ஆர்வம் ஒபாமாவல் ஓரளவுக்கு இளைஞர்களுக்குத் திரும்பியிருக்கிறது.
பங்கு சந்தை ஒரு முக்கியமான விஷயம் (நியூயார்க் போன்ற இடங்களில்). சந்தை தாழத் தாழ குடியரசுக் கட்சிக்கு எதிர்ப்பு அதிகமாகலாம்.
செல்வராஜ், ஜீவா – என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, உங்கள் கருத்துக்கள் அடியில் தேங்கிவிட்டன. இப்பொழுதுதான் கண்டெடுத்து அனுமதிக்க முடிந்தது. மன்னிக்கவும்.
ஆச்சரியமாக இருக்கிறது, அமெரிக்க நண்பர்கள் அனைவரும் (சன்னாசி, செல்வராஜ், ஜீவா) மெக்கெய்ன் ஒரு அசைக்க முடியாத நபர் என்று நம்புவதாகத் தெரிகிறது. எனக்கென்னமோ இதுவரை அப்படித் தோன்றவில்லை.
ஹூம்! இப்ப தான் எனக்கு ஓரளவு புரிபட ஆரம்பித்துள்ளது.இங்குள்ள செய்திகளில் தினமும் இதைப்பற்றி சொல்வார்கள்.அப்போது எனக்கு ஒரு மண்ணும் புரியாது.
ஆச்சரியமாக இருக்கிறது, அமெரிக்க நண்பர்கள் அனைவரும் (சன்னாசி, செல்வராஜ், ஜீவா) மெக்கெய்ன் ஒரு அசைக்க முடியாத நபர் என்று நம்புவதாகத் தெரிகிறது. எனக்கென்னமோ இதுவரை அப்படித் தோன்றவில்லை//
அமேரிக்காவில் வசிப்பவள் என்ற முறையில் என்னாலும் அதை புரிந்து கொள்ள முடிகிறது.உடகங்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சியின் சார்பில் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.மேலும் தற்போது ஒரு புதிய வாதம் உண்டு.பொருளாதாரம் ஈராக் போரை விட முக்கியம் என்று.மேலும் மத்திய தர அமெரிக்கர்களிடம் உள்ள மற்றொரு நம்பிக்கை குடியரசுக் கட்சி வந்தால் வரிச்சலுகை உண்டென்பது( எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை, நான் வசிப்பதெல்லாம் குடியரசு கட்சியின் ஆட்சியின் போது தான்).
தேசிய பாதுகாப்பு என்பது மற்றொரு கோஷம். ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் மிதவாதிகள் என்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற வாதம் மிக பலமாக இருக்கும். சன்னாசி விளையாட்டாக (உண்மையாகவே !!) சொன்னது போல், ஒரு வெடிகுண்டு மிரட்டல், ஒரு ஒசாமா ஒலி நாடா போதுமானது.ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மிக திறமையளராக இல்லாவிட்டால் குடியரசு கட்சியே வெல்லும் என்று நினைக்கிறேன்.
உடகங்கள், பண முதலாளிகள் எவ்வழியோ மக்கள் அவ்வழி. எந்த நாட்டுக்கும் இது பொருந்தும்.
மெக்கெய்ன் வெற்றி மற்ற இருவரைக்காட்டிலும் அதிகம். காகேசியன், ஆண் கத்தோலிக்கர் என்ற தகுதி முக்கியம். எட்வர்ட் விலைகிக்கொண்டபோதே ஊகித்த ஒன்று. ஆனாலும் மக்களின் போர் எதிர்ப்பு, பொருளாதார நிலை இதைத் தாண்டி ஜனநாயககட்சிக்கு ஓட்டளிக்க செய்யுமா என்பதும் 30% தாண்டி வாக்காளார்கள் அதிகம் வாக்களிக்க வருவார்களா என்பதும் தீர்மானிக்கும்.
வெங்கட், சன்னாசி: ஹிலரியின் உடல்நல கொள்கை, கீழநாட்டுகளுக்கான ஆதரவு, ஓரின சேர்க்கையாளர்களின் மருத்துவ கொள்கை, லெஸ்பியன் பெண்களின் கர்ப்பபைகளும் மார்பகங்களும் மருத்துவர்கள் சின்ன கட்டி வந்தாலும் உனக்கெதற்கு என்று நீக்குவதை எதிர்க்கும் குணம், ஆண், பெண் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்களின் நிதி உதவி கொள்கை, எல்லா குழந்தைகளுக்கும் (irrespective of visa) உடல்நலக் காப்பீடு என்ற கொள்கைகளில் என்ன குறை கண்டீர்கள் (அவருடைய white female, blond tall image தவிர்த்து).இவற்றில் எல்லாம் ஓபாமாவின் கொள்கை என்ன என்று சரியாக (தெளிவாக) தெரியவில்லை.
ஓபாமா வென்றாலும் கூட ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக அவரால் எதுவும் செய்ய முடியாது, காங்கிரசிலும் செனட்டிலும் இருக்கும் அரசியல்வாதிகள் எந்த அளவு ஆதரவு தருவார்கள் என்பது சொல்ல முடியாது.
இங்கே எடிசனில் ச்படரோ என்ற ஜனநாயக வேட்பாளர் அல்லாமல் ஜூன் சாய் என்ற ஜனநாயக வேட்பாளர் மேயராக ஆனது முதல் நிர்வாகத்தில் அவருக்கு கிடைக்கும் இடைஞ்சல்கள் அதிகம்.இப்போது நேரிடையாக எடிசன் காவல்துறை தலைமை அதிகாரி மேயரை எச்சரித்திருக்கிறார்.
நியுயார்க் செனட்டாரக இருக்கும் போது அவரால் ஈராக் போருக்கு எதிராக வாக்களித்திருக்க முடியாது. மற்றபடி அவருடைய கணவரின் நிர்வாக திறமையும் (அவருடைய கணவரின் ஓய்வு நேரம் இடைஞ்சலாக இருந்தாலும்) உதவும் என்று அடிப்படை மக்களால் நம்பப்படுகிறது.ஹிலரியின் மிகப்பெரிய பலவீனம் மக்கள் அவரிடம் எதிர்பார்த்த உணர்ச்சி போராட்டம் (மோனிகா வழக்கில்) இல்லாதது அவரிடம் ஏற்படுத்திய நம்பகத்தன்மை. இன்னமும் அவரின் உணர்ச்சிகளை புரிந்து கொள்வதோ அவர் கட்டியணைக்கும் போது கூட இருக்கும் இயந்திரத்தனம் . பில்லுக்கு எதிரான குணம். பில் பேசும்போதே உணர்ச்சிகளில் மக்களின் இதயத்தோடு இணையத்தெரிந்தவர்.
புஷ் ஆட்சிசெய்தபின் யார் வந்தாலும் இதைவிட மோசமாக ஆட்சி செய்ய முடியாது என்பதால், கவலை தேவையில்லை. சரிந்த அமெரிக்க பொருளாதாரத்தை பற்றியோ மத்திய வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை பற்றியோ மருத்துவ காப்பீடு இல்லாமல் இருக்கும் 40 மில்லியன் மக்களை பற்றியோ யாருக்கும் கவலை இல்லை. எது எப்படி இருந்தாலும் பணம் அதிகம் ஓடும் என்று எதிர்ப்பார்க்கும் தேர்தல் இது.
//உடல்நலக் காப்பீடு என்ற கொள்கைகளில் என்ன குறை கண்டீர்கள் (அவருடைய white female, blond tall image தவிர்த்து).இவற்றில் எல்லாம் ஓபாமாவின் கொள்கை என்ன என்று சரியாக (தெளிவாக) தெரியவில்லை.//
பத்மா – தெளிவாகச் சொல்லாதது என் தவறாக இருக்கலாம் – white female, blonde, tall என்றது அந்த குணாம்சங்களை மூலதனமாக வைத்து தனது திரிப்புக்களை ஊடகத்தில் பரப்பும் Ann Coulter குறித்துச் சொன்னது – ஹில்லரி குறித்து அல்ல. மற்றபடி, white, blonde, tall எவை குறித்தும் எனக்கு ஆட்சேபணை இல்லை என்பது (அனுபவத்தில் கண்ட) உண்மை
ஹில்லரியின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்தும் விமர்சனங்கள் இருப்பதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் – மிகவும் தாமதமாக, எட்வர்ட்ஸ், ஒபாமா இருவரும் தங்களது திட்டங்களை முன்வைத்த பின்னர் அறிவிக்கப்பட்டது அது. ஜனநாயகக் கட்சியினரே ஹில்லரியிடம் காணும் ஒரு பெரிய குறை இதுதான் – way too orchestrated, way too cold, way too defensive. மற்றபடி, ஒரு வேட்பாளராக ஹில்லரி (நான் பார்த்தவரையில், புரிந்துகொண்டவரையில்) என்னை வசீகரிக்கவில்லை என்பதுதான் நிஜம். மீடியாக்களின் கைங்கர்யமாகவும் இருக்கலாம் – ஆனால், விரும்பியோ விரும்பாமலோ நான் (பொதுவாக இந்தியர்கள், எனக்குத் தெரிந்தவரை) தொடர்ந்து பார்க்கும்/படிக்கும் ஊடகங்களனைத்தும் லிபரல் சார்புடையதாக இருப்பதால், இது ஏதோ வலதுசாரி ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் என்றும் சொல்லிவிட முடியாது.
பத்மா, சொல்ல விட்டுப்போனது, காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து நீங்கள் உங்கள் பதிவில்(லோ) இங்கே பின்னூட்டங்களிலோ இன்னும் விவரமாக எழுதலாம் (சந்தர்ப்பம் இருந்தால்) – பிறர் பொதுவில் படித்து எழுதுவதை விட நீங்கள் எழுதுவது இன்னும் ஆதாரபூர்வமாக, விளக்கமாக இருக்குமென்று நம்புகிறேன்.
//உடல்நலக் காப்பீடு என்ற கொள்கைகளில் என்ன குறை கண்டீர்கள் (அவருடைய white female, blond tall image தவிர்த்து).இவற்றில் எல்லாம் ஓபாமாவின் கொள்கை என்ன என்று சரியாக (தெளிவாக) தெரியவில்லை.//
பத்மா – தெளிவாகச் சொல்லாதது என் தவறாக இருக்கலாம் – white female, blonde, tall என்றது அந்த குணாம்சங்களை மூலதனமாக வைத்து தனது திரிப்புக்களை ஊடகத்தில் பரப்பும் Ann Coulter குறித்துச் சொன்னது – ஹில்லரி குறித்து அல்ல. மற்றபடி, white, blonde, tall எவை குறித்தும் எனக்கு ஆட்சேபணை இல்லை என்பது (அனுபவத்தில் கண்ட) உண்மை
ஹில்லரியின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்தும் விமர்சனங்கள் இருப்பதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் – மிகவும் தாமதமாக, எட்வர்ட்ஸ், ஒபாமா இருவரும் தங்களது திட்டங்களை முன்வைத்த பின்னர் அறிவிக்கப்பட்டது அது. ஜனநாயகக் கட்சியினரே ஹில்லரியிடம் காணும் ஒரு பெரிய குறை இதுதான் – way too orchestrated, way too cold, way too defensive. மற்றபடி, ஒரு வேட்பாளராக ஹில்லரி (நான் பார்த்தவரையில், புரிந்துகொண்டவரையில்) என்னை வசீகரிக்கவில்லை என்பதுதான் நிஜம். மீடியாக்களின் கைங்கர்யமாகவும் இருக்கலாம் – ஆனால், விரும்பியோ விரும்பாமலோ நான் (பொதுவாக இந்தியர்கள், எனக்குத் தெரிந்தவரை) தொடர்ந்து பார்க்கும்/படிக்கும் ஊடகங்களனைத்தும் லிபரல் சார்புடையதாக இருப்பதால், இது ஏதோ வலதுசாரி ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் என்றும் சொல்லிவிட முடியாது.
—————-
பின்னூட்டத்தை ஸ்பாம் கரும(ம்) விழுங்குகிறதென்று நினைக்கிறேன்!!
வெங்கட்
ஒரு தகவலுக்காக ( மக்கள்தொகை குறைவான நியு மெக்சிக்கோ அழுத்தமான எடுத்துக்காட்டாகாது என்பது தெரிந்தும்)
இந்த மாநிலம் வெள்ளையர்களை பெரும்பான்மையாக கொள்ளவில்லை ( 44%)
நேற்று நடந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளர் தேர்வில் ஹில்லரி & ஒபாமா இருவரும் சம அளவில் வாக்குகள் பெற்றுள்ளனர். ஹிஸ்பேனிக்ஸ்-ல் பெரும்பான்மையினர் ஹில்லரிக்கு வாக்களித்துள்ளனர்.
வெள்ளை ஆண்களில் 60% மேல் ஒபாமாவுக்கும், பெண்களில் 55% என்றளவில் ஒபாமாவுக்கும் வாக்கு போட்டுள்ளனர். செவ்விந்திய ஓட்டுகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை ;(
பத்மா – யார் வென்றாலும் நிர்வாக இயந்திரம் அதன் போக்கில்தான் அவரையும் செலுத்தும் என்பது உண்மை. ஒபாமா வந்தால் கறுப்பர்களுக்கு விடிவுவரும் என்று நாம் நம்பவில்லை. மாறாக, அமெரிக்கா என்ற பெருங்கனவுக்கோட்டையின் கண்ணாடிக்கூறை உடைக்கப்படும் என்பது நிச்சயம். (ஹில்லரி வந்தால் வேறுவகையில் என்பதும் உண்மை).
இவர்களில் யார் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நின்றாலும் அமெரிக்காவின் ஒரு கோர முகம் வெளிப்படும் என்பதும் உண்மை. ஆனால் இந்த அறுவைசிகிச்சைக்கு அமெரிக்கா இப்பொழுது தயார் என்றுதான் தோன்றுகிறது.
சன்னாசி சொன்னதைப் போல ஹில்லரி பல சமயங்களில் எதிர்வினையாகவே செயல்படுகிறார். ஒரு தலைமுறைக்கும் மேலாக பொதுமருத்துவக் கொள்கைகளில் தீவிரமாக ஈடுபடும் ஹில்லரி, ஒபாமா, எட்வர்ட்ஸ் இருவருடைய மருத்துவ நிலைப்பாடுகளையும் அவதானித்தபின் அவற்றை உள்வாங்கிக்கொண்டு அவைகளை மழுங்கடிக்கும் விதமாக தன் மருத்துவக் கொள்கையை வெளியிட்டது மதிபீட்டைக் குறைத்திருக்கிறது (கவனிக்கவும், ஆரம்பத்தில் நான் ஹில்லரியைத்தான் திறமையான நிர்வாகத்தைத் தரக்கூடியவர் என்று நம்பினேன்). உங்கள் கருத்துக்களை விரிவாக எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன்.
பத்மா – மெக்கெய்னுக்கு இருக்கும் காக்கேசிய, கத்தோலிக்க ஆதரவை மழுங்கடிக்க எட்வர்ட்ஸ் துணை ஜனாதிபதியாக நின்றால் ஓரளவுக்குச் சாத்தியமாகும். ஒபாமா என்றால் அவர் சேரக்கூடும் என்று நம்புகிறேன்.
சன்னாசி – உங்கள் கருத்துக்கள் எரிதப் பிடியில் சிக்கிவிட்டன. ஒரே பெயரில் பல மின்னஞ்சல் முகவரிகளுடனோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தள அடையாளங்களுடனோ கருத்துகள் வந்தால் அவை வேர்ட்பிரஸின் அகிஸ்மெட் வலையில் தேங்கிவிடுகின்றன.
எனவே எந்த மின்னஞ்சல் முகவரி என்றில்லை அதையே தொடர்ந்து பாவித்தால் உங்கள் கருத்துக்கள் தாமாக உள்வர ஏதுவாயிருக்கும்.
வாசன், கவனித்தேன். நியூ மெக்ஸிகோ நெடுநேரம் வரை இழுபறியாகவே இருக்கிறது. ஹிஸ்பானிக்ஸ் எல்லோரும் ஹில்லரிக்குப் போடுவார்கள் என்பதாலேயே வெள்ளைக்காரர்கள் ஒபாமாவுக்குப் போட்டுவிட்டார்களோ?
Ag – கருத்துக்களுக்கு நன்றி.
புஷ்ஷின் மீது வெறுப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்று யாராவது எழுதுங்களேன். (வேறுவகையில் கேட்டால், இதே தேர்தலில் புஷ் மீண்டும் போட்டியிடமுயற்சித்தால் எப்படியிருக்கும்?)
வெங்கட்
மருத்துவக் கொள்கை பற்றி கூடிய சீக்கிரம் எழுதுகிறேன்.ஹிலரி மருத்துவ அறிக்கை முன்பைவிட தீவிரம் குறந்திருக்கிறது என்றால் அதற்கு பில்லின் காலத்தில் அதற்கு குடியரசு கட்சி தந்த எதிர்ப்பு, இப்போது கூடுதல் கவனமாக்க நினைத்து இருக்கலாம். ஆனால், கீழைநாடுகள், ஆப்பிரிக்க நாடுகளின் சில அடிப்படை பிரச்சினைகள் (நல்ல குடிநீர், underground sewage, AIDS, immunization) போன்ற திட்டங்களில் அவருக்கும் பில் கிளிண்டன் போலவே ஆர்வம் உண்டு என்பதால் அந்நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் பயனாகும். மெக்கெயின் மீது மக்களுக்கு war hero என்ற மரியாதையும், மூன்று தலைமுறையாக இராணுவத்தில் அவர் குடும்பம் இருந்து வருவதும், war strategy நன்கு தெரிந்தவர் என்றும் சில மிக உத்வேக ஜனநாயக உறுப்பினர்களே நம்புகிறார்கள். அதனால் இராக் போரை நிறுத்தவோ அங்கிருந்து இராணுவத்தை மீட்கவும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறார்கள்.மேலும் சில பொதுநல திட்டங்கள் பில் கிளிண்டன் காலத்தில் மற்ற குடியரசு உறுப்பினர்களின் எதிர்த்த போதும், மெக்கெய்ன் ஆதரவு ஓட்டளித்ததும் மக்களுக்கு நினைவில் இருக்கிறது. இது சில நியுஜெர்சி (கிளிண்டன் வராமல் இருந்தாலே ஜெயிக்க கூடிய மாநிலம்) அடிப்படை உறுப்பினர்கள் பேசிக்கொள்வது. எட்வர்ட்ஸ் உதவி ஜனாதிபதியாக வருவாரா என்பதும் கேள்விக்குறியே. வந்தால் பில் கிளிண்டனுக்கு அல்கோர் போல நன்றாகவே இருக்கும்.
இந்த தேர்தலில் புஷ் போட்டி இட்டால், ஒரு கட்டிடடம் வெடி வைத்து தகர்ப்பட்டு நாட்டுப் பற்று போதை ஏற்றப்பட்டு பல ஆயிரக்கணக்கில் ஓட்டுக்கள் கைபற்றப்பட்டு ஜெயிப்பார். கார்களில் ” dont shoot me, I voted for Obama” என்ற ஸ்டிக்கர்களை பார்க்கலாம்:))ஜனநாயக கட்ட்சி, குடியரசு கட்சி எல்லா உறுப்பினர்களும் we are behind you, united we stand என்று சொல்லி, இன்னும் patriotic law போல பல சட்டங்கள் வரும். ஹிஸ்பானியர்கள் செய்யும் சின்ன தவறுகளும் தொலைகாட்சிகளில் இன்னும் தீவிரமாக அலசப்பட்டு, immigration law அமுலுக்கு வரும். நாங்களும் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் இறந்து போன மக்களுக்காக பிராத்தித்து விட்டு அடுத்த கூட்டத்திற்கு போவோம்.
நான் இந்த அரசியலுக்குப் புதுசு என்ற ஆர்வத்தில் கவனிப்பு மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். இங்கு பேசப்படும் விஷயங்கள் பல வகைகளில் சிறப்பாக இருக்கின்றன.
குடியரசுக் கட்சியினரை எடுத்துக் கொண்டால் மெக்கெயின் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. போர்களில் பங்கேற்றவர், கேத்தலிக் பிரிவைச் சார்ந்தவர், பழுத்த அரசியல் அனுபவம் என பலவும் இவருக்கு சாதகமாக இருந்தாலும் கோபமும் பிடிவாத குணமும் இவருக்கு எதிராக இருக்கின்றன. எல்லோரையும் அணைத்துச் செல்லக்கூடிய ஒருவரைத் துணை அதிபர் பதவிக்கு தெரிவு செய்து கொண்டால் இவர்கள் வலிமையான ஒரு கூட்டணியாவது நிச்சயம்.
ஜனநாயகக் கட்சியில் இழுபறியாக இருக்கிறது. ஹிலாரியா ஒபாமாவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த கடுமையான போட்டி இருவரையுமே பாதிக்கிறது. இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது பிந்நாளில் குடியரசுக் கட்சியினரால் பயன்படுத்தப்படும். கடற்கரை ஓரங்களில் இவர்களுக்கு பலம் இருந்தாலும் மத்திய மாகாணங்களில் இவர்களுக்கு ஆதரவு குறைவாகத்தான் இருக்கிறது. இந்த மாகாணங்களின் ஆதரவில்தான் புஷ் இரண்டாவது முறை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிலாரிக்கு பில்தான் பலமும் பலவீனமும். அவரது அனுபவமும், மக்களிடையே இருக்கும் மதிப்பும் ஒரு பெரிய பலம்தான். ஆனால் ஹிலாரி அதிபரானால் இவரது குறுக்கீடு இருக்கும் என்பதும் பில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நியமிக்கப்படும் சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுவது பலகீனமே.
கடைசி நிமிடத்தில் ஒபாமாவிற்கு ஆதரவு கூடி வரும் நிலை இருந்தாலும், அவருக்கு ஆதரவு பரவலாக இல்லை என்பதே நிஜமாகத் தெரிகிறது. ஆனால் குடியரசுக் கட்சி போல் அல்லாது ஒவ்வொரு மாகாணத்திலும் அவர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் கடைசி நிமிடம் வரை போட்டி இருக்கும்.
என்னளவில் இவ்வளவு கடுமையான போட்டி இருந்தாலும் கடைசியில் ஹிலாரிக்குத்தான் வாய்ப்பு அதிகம் எனத் தோன்றுகிறது. ஹிலாரியா மெக்கெயினா என தேர்தல் வரும் பொழுது சன்னாசி சொல்வது போல் மெக்கெயின் வென்றிடும் வாய்ப்பு அதிகமே.
அமெரிக்க ஜனாதிபதியக வரும் தனி மனிதரின் அதிகாரம் என்ன?
அவரால் எந்தளவுக்கு அமெரிக்காவின் அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும்?
—் ஹிலாரி அதிபரானால் பில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நியமிக்கப்படும் சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுவது—
அச்சச்சோ… அப்படியா!!!
—மெக்கெய்னுக்கு இருக்கும் காக்கேசிய, கத்தோலிக்க ஆதரவை மழுங்கடிக்க எட்வர்ட்ஸ் துணை ஜனாதிபதியாக நின்றால் ஓரளவுக்குச் சாத்தியமாகும். ஒபாமா என்றால் அவர் சேரக்கூடும்—
எட்வர்ட்ஸ் துணையாக இருப்பதை இருவருமே விரும்ப மாட்டார்கள். உதவி ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர்களுக்கு இரண்டு லட்சணங்களைப் பார்க்கிறார்கள்:
1. அவரால் எத்தனை மாகாணங்களில் வெற்றி வாய்ப்பு பலமடையும்?
2. எவ்வளவு தூரம் கீழிறங்கி ஒண்டிக்கு ஒண்டி சண்டையில் குதித்து, எதிர்க்கட்சி வேட்பாளரை அலற வைப்பார்??
சென்ற தேர்தலில் ‘அடுத்த முறை நமக்கு வாய்ப்பு வரலாம்’ என்று ஜான் எட்வர்ட்ஸ் அடக்கி வாசித்து நேர்மறையாக பட்டும் படாமலும் பிரச்சாரம் செய்ததை ஜான் கெர்ரி மறந்தாலும் க்ளின்டன் மறந்திருக்க மாட்டார்.
மேலும் ஜான் எட்வர்ட்சால் தனது பிறந்த மாநிலத்தையே வெற்றி கொள்ள இயலவில்லை. இவரால் எப்படி ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமப் போகிறது என்றும் தள்ளுபடியாவார்.
—மெக்கெய்ன் ஒரு அசைக்க முடியாத நபர் என்று நம்புவதாகத் தெரிகிறது.—
ஊடகங்கள் அப்படித்தான் கட்டமைக்கிறது. மேலும் சமயத்துக்கு தக்கவாறு மாறிக் கொள்வதில் மெக்கெயின் வல்லவர்.
இன்றைய தேதியில் ஒரு பழமைவாதிக்கும் ஒரு மிதவாதிக்கும் இடையேதான் குடியரசு கட்சியில் போட்டி நிலவும் வாய்ப்பு. ரீகனுக்கும் அப்பா புஷ்ஷுக்கும் நடந்த போட்டி போன்றவற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இருந்தே மெக்கெயின் மிதவாதியாக தோற்றம் காண்பித்து போட்டியிட, எதிரணியில் பழமைவாதியாக சித்தரிக்கப்பட மிட் ராம்னி மட்டும் போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருந்தார். மாஸசூஸ்ட்சுக்கு ஒரு நிலை, ஜனாதிபதியாக இன்னொரு நிலை என்று ராம்னி அவதாரம் எடுத்ததை விரும்பாத குடியரசு கட்சி வாக்காளர்கள், மைக் ஹக்கபீ பக்கம் சாய்ந்துள்ளனர்.
மிதவாதிகள் பக்கம் இருந்த ரூடி ஜியுலீயானியும் விலகிக்கொள்ள தனிக்காட்டு ராஜாவாக மெக்கெயின் உள்ளார்.
நாளைய தேதியில் குடியரசு கட்சி வேட்பாளராகி விட்டால், தன் ‘கொள்கை’களை (?!) கட்சி விருப்பதிற்கேற்ப தளர்த்திக் கொள்ள தயங்கக் கூடாது என்பதுதான் ஆன் கூல்டர், ரஷ் லிம்பா போன்றவர்களின் விருப்பம்.
வெங்கட்,
முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் விருப்பங்களை பலரும் அறிவிக்கும் முன்னர், ஓராண்டுக்கு முன்னர், 2008 தேர்தலில் போட்டி ஹில்லாரி க்ளிண்டனுக்கும், காண்டெலிஸா ரைஸுக்கும் இடையே இருக்கும் என்று அரசியல் பண்டிதர்கள் எழுதி/பேசிக்கொண்டிருந்தார்கள். நம்மூர் ஹிண்டுவில் ‘President’ என்ற சொல்லைக் கொண்ட ஒரு செய்தியைச் சொடுக்கினால் கூட இவ்விருவரின் படங்களோடு இணைய வாக்கெடுப்பு விளம்பரம் பல்லிளித்துக்கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
அந்தப் பரபரப்பு அடங்கிய பின்னர் இன்னொரு சுவாரசியமான வாதம் வைக்கப்பட்டது. தற்போதைய (அப்போதைய) சூழ்நிலையில் இரண்டு கட்சிகளிலுமே வலுவான, மக்கள் விரும்பும் வேட்பாளர்கள் இல்லை. இரு கட்சிகளிலுமே அதிபிரபலமாக உள்ள இருவர் துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் போட்டியிடமுடியாது. அந்த இருவர் ஜனநாயகக் கட்சியின் பில் க்ளிண்டன், குடியரசுக் கட்சியில் ஆர்னால்ட் ஸ்வார்ஷ்னெக்கர். அமெரிக்க அரசியல் சட்டம் 22வது திருத்தம் ஒருவரை இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது. அதனால் பில் போட்டியிட முடியாது. அரசியல் சட்டத்தின்படி அமெரிக்க மண்ணில் பிறந்தவர் மட்டுமே அதிபராக முடியும். ஆகவே வெளிநாட்டில் பிறந்து குடியுரிமை பெற்ற ஆர்னால்ட் போட்டியிட முடியாது. 2000 ஆண்டு தேர்தலின் போதே “Repeal 22nd Amendment; Elect Bill Clinton again” என்று கார்களில் பம்பர் ஸ்டிக்கர்கள் தென்பட்டன. அதே போன்று ஆர்னால்ட் கலிஃபோர்னிய ஆளுநர் தேர்தலில் வென்று பிரபலமான பிறகு “Amend for Arnold” என்ற இயக்கம் அரசியல் சட்டத்தைத் திருத்தி ஆர்னால்டை அதிபராக்கும் ஆசைப் பிரச்சாரம் மேற்கொண்டது.
இந்த ஆருடங்ககள், கனவுகள் அடங்கிய பின் ஒவ்வொருவராக Exploratory Committee அமைத்து களத்தில் இறங்கிக்கொண்டிருந்தபோது சிலர் தங்களை மக்களே இழுத்து போட்டியிடச் செய்து அதிபராக்கி விடுவார்கள் என்று பெருங்கனவோடு ஆர அமர மெதுவாக களமிறங்கினார்கள் (அப்படி இன்னும் யோசித்துக்கொண்டிருப்பவர் பெரும்செல்வந்தரான நியூ யார்க் மேயர் ப்லூம்பர்க்). இரு கட்சிகளிலும் களத்தில் இறங்கி தற்போது காணாமல் போனவர்களில் குடியரசுக் கட்சியினர் பிரபலமானவர்கள், ஜனநாயகக் கட்சியினர் பிரபலங்களில்லை. அடுத்த ரொனால்ட் ரீகன் என்று உசுப்பேற்றப்பட்டு, குடியரசுக் கட்சியின் அதிகபட்ச கன்சர்வேடிவ் என்ற அடையாளத்துடன் களமிறங்கிய ஃப்ரெட் தாம்சன் கடைசியாக வந்து முதலில் போய்விட்டார். முன்னாள் நியூ யார்க் மேயர் ரூடி ஜூலியானி 9/11 பிம்பத்தையும், கணிசமாகத் திரட்டிய தேர்தல் நிதியையும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாமல் ஒதுங்கிக்கொண்டார். இவர்கள் போனதில் எனக்கு வருத்தமேதுமில்லை. ஆனால் ஜனநாயகக் கட்சியில் காணாமல் போனவர்கள் என்னுடைய விருப்பத்திற்குரியவர்களாகவே இருந்தார்கள்.
நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சன், ஒஹையோ காங்கிரஸ் உறுப்பினர் டென்னிஸ் க்யுசினிச், முன்னாள் வடகரோலினா செனட்டர் ஜான் எட்வர்ட்ஸ் மூவரும் களத்தில் இறங்கி காணாமல் போன அல்லது ஒதுங்கிக்கொண்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள். இம்மூவருமே தற்போது பிரபலமாக களத்தில் நிற்கும் ஹிலரி, பராக் ஒபாமா இருவரையும் விடச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து.
ஹிலரி, ஒபாமா இருவருக்கும் இடையில் உள்ள மிக முக்கியமான வேறுபாடாக வைக்கப்படுவது ஹிலரி அனுபவம் மிக்கவர், ஒபாமா அனுபவமற்றவர் என்பது. இவ்விருவரை மட்டுமே ஒப்பிட்டால் அது சரியே. ஆனால் ஒதுங்கிவிட்ட மூன்று பேரையும் சேர்த்துக்கொண்டால் ஹிலரியின் அனுபவம் அப்படியொன்றும் பெரிதாக இல்லை.
இங்கு அனுபவம் குறிப்பிடப்படுவது என்பது அரசியல் அனுபவம் அல்ல. நிர்வாக அனுபவம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோனோர் மாநில ஆளுநராக அல்லது துணை அதிபராக இருந்து நிர்வாக அனுபவம் கொண்டவர்களாக இருப்பர். சட்டமியற்றும் அனுபவம் கொண்ட செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்தவர்களின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருந்திருக்கிறது.
இவ்வடிப்படையில், ஹிலரி, ஒபாமா, 25 ஆண்டுகளாக செனட்டராக இருக்கும் ஜான் மெக்கெய்ன் மூவருமே நிர்வாக அனுபவமற்றவர்கள். இதில் ஒபாமோவோடு ஒப்பிடுகையில் ஹிலரியின் கூடுதல் ‘அனுபவம்’ 12 ஆண்டுகள் அர்க்கன்ஸா ஆளுநராகவும், 8 ஆண்டுகள் அமெரிக்க அதிபராகவும் இருந்த பில் க்ளிண்டனின் மனைவியாக நிர்வாகத்தை கவனித்த அனுபவம் மட்டுமே.
அனுபவம் என்பது முக்கியமான தகுதி என்றால் அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டியது, நியூ மெக்ஸிக்கோ ஆளுநர் பில் ரிச்சர்ட்ஸனுக்குத் தான்; அனுபவத்தில் மட்டுமில்லை, ஆளுமையிலும். ஹிலரியும், ஒபாமாவும் இடதுசாரிகளிடம் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் முன்னவர் பெண் என்பதும், பின்னவர் கறுப்பர் என்பதற்காகவும். பில் ரிச்சர்ட்சன் ஹிஸ்பானிக் பின்னணி கொண்டவர். ஒபாமாவின் தந்தை ஆப்ரிக்கர் என்றால் ரிச்சர்ட்சனின் தாய் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். பிறப்பு அடையாளத்துக்கு அப்பால் அவருடைய அனுபவம் மிகவும் பரவலானது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினாராக இருந்தவர். ராஜதந்திரியாக பல நாடுகளில், குறிப்பாக வடகொரியா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்க பிரச்சினைகளில் செயல்பட்டவர். இதன் காரணமாக இவரை பில் க்ளிண்டன் ஐ.நா. சபையின் அமெரிக்கத் தூதராக நியமித்தார். பிறகு பில் கிளிண்டனின் அமைச்சரவையில் ஆற்றல் துறை அமைச்சராக (Energy Secretary) இருந்தவர். தற்போது நியூ மெக்ஸிகோவின் ஆளுநராக இருக்கிறார்.
இத்தகைய பரவலாக சட்டசபை, நிர்வாக, ராஜதந்திர, அமைச்சரவை அனுபவங்களைக் கொண்ட சிறுபான்மையினப் பின்னணி கொண்டவர் என்ற வகையில் ஹிலரியோடு ஒப்பிடுகையில் நல்ல வேட்பாளராக இருந்திருப்பார். ஒபாமாவை ரிச்சர்ட்சனோடு ஒப்பிடக்கூடத் தேவையில்லை (‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் மீது நேரடி நடவடிக்கை எடுப்பேன்’ என்ற சிறுபிள்ளைத்தனமான ஒபாமாவின் பேச்சை நினைவில் கொள்க) . தற்போதைய அரசியல் சூழலில் முக்கியமாக முன்னிறுத்தப்படும் பொருளாதாரம், ஈராக் போர், குடிபுகல் பிரச்சினை, புவிவெப்பமடைதல், எரிபொருள் விலை, மாற்று எரிபொருள் போன்று எல்லாவற்றிலும் ரிச்சர்ட்சனின் அனுபவம் பயன்பட்டிருக்கும்.
ஹிலரிக்கும், ஒபாமாவுக்கும் இருந்த ‘நட்சத்திர’ அந்தஸ்தும், அதன் மூலம் திரட்டமுடிந்த தேர்தல் நிதியும் அவர்களை முன்னணியில் நிறுத்தியிருக்கிறது. தற்போதைய நிலையில் ஹிலரி, ஒபாமா இருவருக்குமே சமவாய்ப்புள்ளது. ஹிலரி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால் பில் ரிச்சர்ட்சனை துணை அதிபர் வேட்பாளராக தெரிவுசெய்துக்கொண்டால் வெற்றி வாய்ப்பு நிச்சயம். நியூ மெக்ஸிகோ வாசனின் ஓட்டும் கிடைக்கும்
. அதுமட்டுமில்லை நிர்வாகமும் சிறப்பாக இருக்கும். ஒபாமா தெரிவு செய்யப்படும் பட்சத்தில் வெள்ளை ஆண் ஒருவரை துணை அதிபர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதே வெற்றியை நோக்கி இட்டுச்செல்லும். நீங்கள் சொன்னது போல் ஜான் எட்வர்ட்ஸ் ஒரு நல்ல தெரிவாக இருப்பினும் அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே. ஒபாமாவின் பெரிய வலு இளம் வாக்காளர்கள். இந்த முதல்கட்டத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெருமளவு வாக்களிப்பதைப் பார்த்தால், இதே போக்கு பொதுத் தேர்தலிலும் தொடர்ந்தால் அடுத்த அதிபர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு.
இப்போதைய போர் எதிர்ப்புச் சூழலில் குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெயின் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. ஏற்கனவே சில குடியரசுக் கட்சியினர் அவரை “பாப் டோல் போன்ற இன்னொரு பழைய போர்க் குதிரை” என்று வர்ணித்துக்கொண்டிருக்கிறார்கள். இவஞ்சலிகல் கிறிஸ்தவர்களுக்கு பிடித்தவரான மைக் ஹக்கபி தெரிவு செய்யப்பட்டால் விஷயம் வேறு மாதிரி போகும். ஆனால் கன்சர்வேடிவ்களுக்கு அவரிடம் பிடிக்காத ஒரே பிரச்சினை அவர் பொருளாதார கன்சர்வேடிவ் இல்லை என்பது(எனக்கு அவரிடம் பிடித்தது அவரது நகைச்சுவை).
வெங்கட்,
திங்களன்று எனது பதிவில், தற்போது போட்டியிலிருக்கும் முக்கிய குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பற்றியும், முதனிலைத் தேர்தல் பற்றியும் எழுதியிருக்கிறேன்.
http://vaigaraivaanam.blogspot.com
ஒபாமா வெல்வது அமெரிக்காவின் கறுப்பர்களுக்கு மட்டுமல்ல, உலகின் அமைதிக்கும் நல்லது, அதிகார வர்க்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், கடந்த 7 ஆண்டுகளாக புஷ்ஷின் வீரியம் அமெரிக்காவின் போக்கை மாற்றியது போல், ஒபாமாவின் வீச்சு நிச்சயம் மக்கள்போக்கையும், நாட்டின் போக்கையும் பெரிதும் மாற்றுமென்றே நம்புகிறேன். பெண் அதிபர் வருவதும் வரலாற்று நிகழ்வாக இருக்குமென்றாலும், கிளிண்டன் வருவது பெரிய மாற்றமாக இருக்காது, ஒருபுறம் ஹிலாரியும் மறுபுறம் பில் கிளிண்டனும் ஆண்டு கொண்டிருப்பார்கள், இதற்கான வாய்ப்பு் பெரிதாக உள்ளது.
மெக்கெயின் குடியரசுக் கட்சி வேட்பாளரானாலும், வெல்லுவது பெருங்கடினம், பயத்தையும், அழிவுச்சூழ்நிலையையும் தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
இதில் எவர் வந்தாலும், புஷ்ஷைவிட நல்ல ஆட்சி கிடைக்கும், உலக நாடுகளுடன் நட்புறவு மேம்படும், ஒபாமா வரவேண்டுமென்பது எனது எண்ணமாக இருந்தாலும், நேற்றைய தேர்தல் முடிவுகள், கிளிண்டனை நோக்கியே வெள்ளை மற்றும் ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் பார்ப்பதாகக் காட்டுகிறது! எனினும் இந்த சனிக்கிழமைத் தேர்தல்களும், மார்ச்சில் நடைபெறவுள்ள டெக்ஸாஸ் தேர்தலும் யார் வரப்போகிறார் என்பதை தெளிவாய்க் காட்டிவிடும்.
-நம்பி. பா.
ஒரு சில விஷயங்கள் விட்டுப் போய்விட்டன.
1) ரான் பால் அவர்களின் நிலைப்பாடுகள் பல எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர் முன்னணி வேட்பாளராக இல்லை.
2) மெக்கெயினின் வயது அவருக்கு சாதகம் இல்லை.
3) இந்த முன் தேர்தலுக்கே இவர்கள் செலவு செய்யும் தொகையைப் பார்த்தால் கண்ணைக் கட்டுகிறது. ஆனால் அதற்கு அவர்கள் வைத்திருக்க வேண்டிய கணக்கு மற்றும் யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்க முடியும் என்பது பிரமிக்க வைக்கிறது
//ரான் பால் அவர்களின் நிலைப்பாடுகள் பல எனக்குப் பிடித்திருக்கிறது.//
எந்தெந்த நிலைப்பாடுகள்?
//ஆனால் அவர் முன்னணி வேட்பாளராக இல்லை.//
ரொம்ப நல்லது. ரான் பால் ஒரு ரேசிஸ்ட் என்பது ஊரறிந்த உண்மை. இந்த கன்சர்வேடிவ் பத்திரிகையே அவருடைய பழைய வரலாற்றைக் கிழித்துக்கொண்டிருக்கிறது.
http://www.tnr.com/politics/story.html?id=e2f15397-a3c7-4720-ac15-4532a7da84ca
ஒபாமாவை ரிச்சர்ட்சனோடு ஒப்பிடக்கூடத் தேவையில்லை (’பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் மீது நேரடி நடவடிக்கை எடுப்பேன்’ என்ற சிறுபிள்ளைத்தனமான ஒபாமாவின் பேச்சை நினைவில் கொள்க)
****
I will ask Mushraff to step aside என்று ஒரு விவாதத்தில் ரிட்சர்ட்சன் கூறினார் (ABC News Debate). அதற்கு ஒபாமா கூறியது எவ்வளவோ மேல்.
பொதுவாகவே இங்கே அனைத்து வேட்பாளர்களும் பாக்கிஸ்தானை தங்களது 51வது மாநிலமாக நினைத்துக் கொள்கின்றனர். அமெரிக்காவின் பணம் அதிகளவில் பாக்கிஸ்தானில் பாய்வதால் தங்களின் ஒரு மாநிலமாக பாக்கிஸ்தானை நினைத்துக் கொண்டார்களோ என்னவோ
மயூரன்
>அமெரிக்க ஜனாதிபதியக வரும் தனி மனிதரின் அதிகாரம் என்ன?
அவரால் எந்தளவுக்கு அமெரிக்காவின் அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும்?
இந்தக் கேள்விக்கு “புஷ் அப்பாவி ஈராக்கில் நடப்பதற்றுக்கும் அவருக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை” என்ற எதிர் வாசகத்தை வைக்கலாமா?
தனி நிகழ்வுகளை ஒருவர் மாற்றியமைத்துவிட முடியாது என்றாலும் பெரும்போக்கை நடத்திச் செல்வதாகத் தலைவர் தேர்தல் இருக்கும். மைக் ஹக்கபீயின் ஆட்சிக்கும் ஜான் எட்வர்ட்ஸ் ஆட்சிக்கும் கட்டாயம் வித்தியாசம் இருக்கும்.
பாலாஜி,
எட்வர்ட்ஸ் இப்பொழுது களத்திலிருந்தால் ஒபாமா-கிளிண்டன் சதவீதங்கள் வேறுவிதமாக இருந்திருகக்கூடும். பல மாநிலங்களில் இரண்டாம் தெரிவாக அவர் இருந்த்திருப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க ஆட்பலத்தைச் சேகரித்திருப்பார்.
எனக்கென்னமோ அவர் விரைவாக களத்திலிருந்து விலகியது துணைஜனாதிபதி வாய்ப்பை நாடித்தான் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் கடைசிவரை நின்று கழுத்தறுத்தால் அவர்மீது வெறுப்பு மிஞ்சிப் போகக்கூடும்.
>மேலும் ஜான் எட்வர்ட்சால் தனது பிறந்த மாநிலத்தையே வெற்றி கொள்ள இயலவில்லை. இவரால் எப்படி ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமப் போகிறது என்றும் தள்ளுபடியாவார்.
பில் கிளிண்டன் ஜனாதிபதியானபோது ஆர்க்கான்ஸா மாநிலத்தில் வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.
சுந்தமூர்த்தி
உங்கள் கருத்துக்களுக்கு மிகமிக நன்றி. நீங்கள் இந்த முன்னோட்டத் தேர்தல்களின் போக்கை முழுமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஜனநாயகக் கட்சியிலோ, குடியரசுக் கட்சியிலோ ஆகச் சிறந்த நிர்வாகிகள் ஜனாதிபதியாக நிறுத்தப்படுவதில்லை. அதனால் வருபவர்கள் எல்லோரும் மோசம் என்று சொல்லமாட்டேன். அமெரிக்க ஜனநாயகம் மிகத் திறமையான ஒன்று என்றே நம்புகிறேன். – புஷ் இளையர் போன்ற நிர்வாக ஞானசூன்ய அபத்தங்கள் விலக்குகள்தாம், விதியல்ல.
ரூடி ஜுல்லியானியைப் பார்க்கும் பொழுது என் கல்லூரிக்காலத் தோழர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். “அவ ஒன்னத்தான் பாக்குறாடா” என்று உசுப்பிவிட்டே காதலை வரவழத்துவிடுவார்கள். அந்த முட்டாளும் காதல் கடிதம் என்று கிறுக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்கள்.
>இப்போதைய போர் எதிர்ப்புச் சூழலில் குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெயின் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. ஏற்கனவே சில குடியரசுக் கட்சியினர் அவரை “பாப் டோல் போன்ற இன்னொரு பழைய போர்க் குதிரை” என்று வர்ணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய கணிப்புடன் மிகச் சரியாக ஒத்துப்போகிறது.
நம்பி – உங்கள் கருத்துக்கள் பல ஆதங்கங்களாகத்தான் வெளிப்பட்டிருக்கின்றன.
உலகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதெல்லாம் அமெரிக்கத் தேர்தலில் ஒரு முக்கியமான விஷயமே கிடையாது.
தமிழ் சசி,
>பொதுவாகவே இங்கே அனைத்து வேட்பாளர்களும் பாக்கிஸ்தானை தங்களது 51வது மாநிலமாக நினைத்துக் கொள்கின்றனர். அமெரிக்காவின் பணம் அதிகளவில் பாக்கிஸ்தானில் பாய்வதால் தங்களின் ஒரு மாநிலமாக பாக்கிஸ்தானை நினைத்துக் கொண்டார்களோ என்னவோ.
52 ஆக வேண்டுமானால் இருக்கலாம். 51 ஆக அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது வடக்கேயிருக்கும் எங்களைத்தான்.
தமிழ் சசி…
—இங்கே அனைத்து வேட்பாளர்களும் பாக்கிஸ்தானை தங்களது 51வது மாநிலமாக நினைத்துக் கொள்கின்றனர்—
கனடாவைத்தானே இப்படி செல்லமாக கொஞ்சுவார்கள்
(வெங்கட்… திசைதிருப்பலுக்கு மன்னிக்க
சுந்தரமூர்த்தி…
கலக்கல்!!!
—அப்படி இன்னும் யோசித்துக்கொண்டிருப்பவர் பெரும்செல்வந்தரான நியூ யார்க் மேயர் ப்லூம்பர்க்—
இவர் ஜனாதிபதி வேட்பாளராக உள்ளே நுழைந்தால் அல்லது ஒபாமவிற்கு/மெகெயினுடன் துணை ஜனாதிபதியாக நுழைந்தால்… என்று பல அனுமானங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.
இவரும் நியு யார்க் சார்பாக போட்டியிட்டு வென்றவர் என்பதால், ஹில்லரி க்ளின்டனுடன் ஜோடி கட்ட முடியாது. ஒபாமாவுடன் மட்டுமே துணை ஜனாதிபதியாக சேர முடியும்.
ப்ளூம்பெர்க் போட்டியிட்டால் யாருடைய வாக்குகள் அதிகமாக சிதறும்?
1) நியு யார்க் செனேட்டர் ஹில்லரி – சென்ற முறை குடியரசு கட்சி எளிதில் வென்ற நியு ஜெர்சி, நியு யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் தோல்வியைத் தழுவலாம்.
2) முன்னாள் சக குடியரசு கட்சி வேட்பாளர் மெக்கெயின் – மதில் மேல் பூனைகள் நிறைந்த ஒஹாயோ, மிச்சிகன் போன்ற இடங்களில் குடியரசு கட்சி வாக்காளர்கள் சிதறலாம்.
3) புது இரத்தங்களை வாக்குசாவடிக்கு வரவழைக்கும் ஒபாமா?
கூடவே ரால்ஃப் நாடர் கூட களத்தில் குதிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். அவரும் வந்துவிட்டால் குடியரசு கட்சிக்கு டபுள் போனசாக அமையலாம்.
வெங்கட்
—மேலும் ஜான் எட்வர்ட்சால் தனது பிறந்த மாநிலத்தையே வெற்றி கொள்ள இயலவில்லை. இவரால் எப்படி ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமடையப் போகிறது என்றும் தள்ளுபடியாவார்.
பில் கிளிண்டன் ஜனாதிபதியானபோது ஆர்க்கான்ஸா மாநிலத்தில் வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.—
சென்ற முறை கெர்ரியுடன் நின்ற போது தெற்கு மாகாணங்கள் ஒன்றைக் கூட (பிறந்த தெற்கு கரோலினா, செனேட்டராக இருந்த வடக்கு கரோலினா) இவரால் வெற்றியடைய செய்ய முடியவில்லை என்பதற்காக சொல்லியிருந்தேன்.
—எட்வர்ட்ஸ் இப்பொழுது களத்திலிருந்தால் ஒபாமா-கிளிண்டன் சதவீதங்கள் வேறுவிதமாக இருந்திருகக்கூடும். பல மாநிலங்களில் இரண்டாம் தெரிவாக அவர் இருந்த்திருப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க ஆட்பலத்தைச் சேகரித்திருப்பார்.—
தெற்கு கரோலினா ப்ரைமரியில் கூட குறிப்பிடத்தக்க அளவு வக்குகளை வெல்லாத நிலையில்தான் அவர் போட்டியில் இருந்து கழன்று கொண்டார். சென்ற முறை ஜான் கெர்ரியை விட அதிக வோட்டுகள் கிடைத்து முதலாவதாக வந்த இடத்தில்,் இரண்டாம் இடம் பெற்றிந்தாலோ அல்லது சொற்ப வாக்குகள் பெறாமல் இருந்திருந்தாலோ தொடர்ந்திருக்கக் கூடும்.
கனடாவைத்தானே இப்படி செல்லமாக கொஞ்சுவார்கள்
***
பாக்கிஸ்தானை செல்லமாக மிரட்டுகிறார்கள். இந்தியாவின் மைய அரசு தலைவர்கள் மாநில அரசை டிஸ்மிஸ் செய்வேன் என
மிரட்டுவது போல…
கனடாவைத்தானே இப்படி செல்லமாக கொஞ்சுவார்கள்
***
பாக்கிஸ்தானை செல்லமாக மிரட்டுகிறார்கள். இந்தியாவின் மைய அரசு தலைவர்கள் மாநில அரசை டிஸ்மிஸ் செய்வேன் என
மிரட்டுவது போல…
Venkat,
Dont publish this comment…
When i open your website, it is throwing some error in IE.
It says the site could not be opened. But the site still opens without any problem
The same problem when i try to submit a comment
I fully agree with Balaji’s comments regarding Edwards. He could not carry his own state the last time… The main criterion for choosing the running mate he should be capable of taking atleast 1 or 2 (adjoining battle ground states]. Edwards failed miserably. The outcome would not be any different if he continued the contest. Based on CNN’s poll his votes have been split equally btw Obama and Clinton.
Bloomberg is a Newyorke; currently a republican but was in Democratic party before. However I don’t think he can do any damage to Democratic party in the election. Democratic party is extremely strong in NY. One candidate who could do damage is Ralph Nadar (to democratic party}.
I do have a feeling that lots of republicans are simply getting to democratic poll and vote for Obama just to stop Clinton getting the party nomination, wherever the state rules allow open admission of independent voters. I don’t find Obama that impressive, nor he has any solid plans and couldn’t convince the so called “surge”, specially in the last few days….
The party of conservatives, {republicans} can’t tolerate her.[three words that scare them is President Hillary Clinton... they could be simply voting in blocks to prevent her. They could be thinking it will be easy to take Obama later on].
I strongly think Mccain has very good chances of taking the presidency against Clinton or Obama. Mccain is a prisoner of war and some kind of “hero” to many Americans. He also belong to anti Bush group and in this case he does not incur the public wrath against Bush. To cement his winning he may have to accommodate some one from Conservative group as his running mate.(Huccabe could be one). He is NOT a catholic ; he is methodist. Catholics form relatively smaller group compared to protestants. It is extremely difficult for a catholic to win. [the only one to win is JF Kennedy to date).
Hillary has a trait of our Jayalalitha… either people like her extremity or hate her extremely. In a close contest it matters more.
Unfortunately this was an election Democrats could have won easily but simply loose because of poor choice of the candidate.
//பில் கிளிண்டன் ஜனாதிபதியானபோது ஆர்க்கான்ஸா மாநிலத்தில் வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்//.—– In correct. Clinton took not only Arkansas but several other key south states. That was possible because there was a third candidate Ross Perot who siphoned several republican votes.
Its possible you could be thinking about Al Gore who failed to carry his own state of Tennesse and aslo Clinton’s state of Arkansas.
//ப்ளூம்பெர்க் போட்டியிட்டால் யாருடைய வாக்குகள் அதிகமாக சிதறும்?
1) நியு யார்க் செனேட்டர் ஹில்லரி – சென்ற முறை குடியரசு கட்சி எளிதில் வென்ற நியு ஜெர்சி, நியு யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் தோல்வியைத் தழுவலாம்.// incorrect.
குடியரசு கட்சி means Republican party. they did not win;Democrats took control of NY and california last time.
வெங்கட், பாபா,
டாக்டர் ரைஸ் பற்றி எழுதிவிட்டு அதை எழுதிய நோக்கத்தை நிறைவு செய்யாமலே விட்டிருக்கிறேன். இப்போது முதன்மை கட்டத் தேர்தலில் ஹிலரி (பெண்) – ஒபாமா (கறுப்பர்) போட்டியே இவ்வளவு ஆவலைத் தூண்டுகிறதென்றால், அரசியல் பண்டிதர்கள் கணித்தமாதிரி இறுதித் தேர்தல் ஹிலரி vs காண்டி என்றிருக்குமானால் கன்சர்வேடிவ் வெள்ளைக்கார ஆண்களுக்கு எவ்வளவு பெரிய சிக்கல்? வெள்ளைக்கார லிபரல் பெண்ணை ஆதரிப்பதா அல்லது கறுப்பு கன்சர்வேடிவ் பெண்ணை ஆதரிப்பதா?
கொத்தனார் குறிப்பிட்ட ஹிலரி பில் ஐ உச்சநீதிமன்ற நீதிபதியாக (தலைமை நீதிபதியாக அல்ல) நியமிக்கக்கூடிய சாத்தியத்தைப் பற்றி யாரோ குறிப்பிட்டதை நானும் கேள்விபட்டேன். ஆனால் நீதிபதி நியமனம் வாழ்நாள் நியமனம். யாராவது இடத்தை காலிசெய்தால் (மரணம், ராஜினாமா, காங்கிரஸில் பதவியிறக்கம், மாதிரி நடந்தால்) மட்டுமே அந்த விபரீதம் நடக்கும்.
சுந்தரமூர்த்தி சொல்வது போல் பில் ரிச்சர்ட்சன் என்னைக் கவர்ந்திருந்தார். அமெரிக்காவின் நலன் பாதிக்கப்படலாம் என்றிருந்தாலும் உலகில் மனித உரிமைகளுக்கு முதன்மைத்துவம் தரவேண்டும் என்று அவர் கூறியதைக் கேட்டேன். அதோடு, அவரது கொள்கைகளும், கல்விக்கு அளித்த முக்கியத்துவமும் எனக்குப் பிடித்திருந்தன. அவர் கூடத் துணை அதிபர் வேட்பாளராக முனையலாம் என்று அவர் விலகியபோது பேச்சு அடிபட்டது. (சசி சொல்வது போல் பாகிஸ்தான் பிரச்சினையில் எவர் என்ன கருத்து கூறினாலும், அதெல்லாம் சும்மா பேச்சுக்குத் தான் என்று விட்டுவிட்டுப் போய்விடலாம்). ரிட்டர்ன் ஆப் டாலிபான் என்று பி.பி.எஸ்ஸில் ஒரு நிகழ்ச்சி வந்தது பார்த்தேன். அது வேறு பல சிக்கல் நிறைந்த சூழல் என்பது இவர்களுக்கு எப்போது முழுமையாகப் புரியும் என்று தெரியவில்லை.
மெக்கெயினை மிக்க பலம் மிக்கவர் என்பதற்காகக் கூறவில்லை. ஆனால், ஹில்லரிக்கு ஓட்டுப் போடவே மாட்டேன் என்றிருப்பவர்களுக்கு மெக்கெயின் ஒரு பலமான மாற்றாகத் தோன்றலாம். ஒபாமா என்றால் கட்சி-சார்பற்றவர்கள் வாக்கை அவரும் மெக்கெயினும் பிரித்துக் கொள்வார்கள் என்று ஒரு கணிப்பு இருக்கிறது. ஆக, மெக்கெயின் தவிர வேறு யாராவது வந்தால் சனநாயகக் கட்சிக்காரர்களுக்கு இன்னும் கொஞ்சம் பலம் கூடலாம் என்று தோன்றியது.
One of my journalist friend put it this way..
In a nutshell; Obama – non-mandatory Health + mandatory Health = Hillary – (Bushism + Clintonism + “Third Way”)
[...] மிட் ராம்னி இடைவிலகியதால் குடியரசு கட்சிக்கான போட்டியில் தற்போது ஜான் மெகெயின், மைக் ஹக்கபீ, ரான் பால் ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். கடந்த செவ்வாய் நடந்த தேர்தலில் ஜான் மெக்கெயின் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், யார் வேட்பாளர் என்று அறுதியிட்டு சொல்ல இயலாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதே நிலை பின்வரும் மாகாணங்களிலும் தொடர்ந்தால், மிட் ராம்னியின் பிரதிநிதிகள் (delegates) முக்கியத்துவம் அடைவார்கள். இப்பொழுது சில மேற்கோள்கள்: விவாதம், கருத்து, தற்போதைய நிலை: ஒபாமா வெல்லட்டும் [...]
Venkat & Balaji,
Can one you of start a group blog on this subject, (I mean “US Presidential Election ‘08″, not “Change we can believe in”
)?
sundaramoorthy,
And so it is said, and so it will be done.
I was already thinking about this. Started to build one. Will get back on it soon.
[...] à®à®¾à®°à®£à®®à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤ வà¯à®à¯à®à®à¯à®à®¿à®©à¯Â à®à®¨à¯à®¤à®ªà¯ பதிவà¯à®¯à¯à®®à¯ ஠தறà¯à®à®¾à®© மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯à… வாà®à®¿à®ªà¯à®ªà®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®¨à¯à®¤à®¤à¯ தளதà¯à®¤à®¿à®²à¯ [...]
Barack Hussein Obama – இதில் நடுவுல இருக்கறத இன்னும் பெரிசா யாரு கண்லயும் படாத மாதிரியில்ல இருக்கு.
ஓபாமாவுடைய தற்போதைய நம்பிக்கைகள் எப்படியிருந்தாலும். இந்த ‘ஹுசேன’் வந்து அவரின் தூக்கத்தைக் கெடுக்கும் என்றே தோன்றுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இது நடவாமல் போகக்கூடிய சாத்தியங்கள் குறைவே என்று நினைக்கிறேன்.
எனக்கு அமெரிக்க தேர்தல், ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் முறை பற்றி அறிந்து கொள்ள ஆசை.
உங்கள் பின்னூட்டங்கள் ஓரளவு அறிந்து கொள்ள உதவியது.
இருந்தாலும்,
1. ஒரே கட்சிக்குள்ள வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நடத்தி அதில் சாதாரண கட்சி உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுபார்களா?
2. அப்படி தேர்ந்தெடுப்பது சட்டப்பூர்வமானதா அல்லது அங்குள்ள அரசியல் வழக்கமா? ஏன் இவ்வளவு
3. கட்சிக்குள்ளே இப்படி நடப்பதால் அவர்களிக்கிடையில் பிளவு ஏற்படாதா?
4. எத்தனைக்கட்சிகள் அங்குண்டு.
5. ஒரே நேரத்திலா உட்கட்சி தேர்தல் நடைபெறும்?
நான் என்னமோ மாநிலத்தேர்தல் என்று தான் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். (செய்திகளை முழுமையாகப் படிக்கவில்லை). ஏன் இவ்வளவு அல்லோலகல்லோலப்படுது.
இது போன்ற அடிப்படைக்கேள்விகள் பற்றி அறிந்து கொள்ள தொடுப்புகளை சிபாரிசு செய்யவும்.
நன்றி.
[...] அதிகளவு சொடுக்குகள் thoughtsintamil.blogspot.…tamilonline.com/thendral/…blog.printf.net/articles/…npr.org/templates/story/s…domesticatedonion.net/tam…lessig.org/blogdomesticatedonion.net/tam…bsubra.wordpress.com- [...]
[...] அதிகளவு சொடுக்குகள் thoughtsintamil.blogspot.…domesticatedonion.net/tam…tamilonline.com/thendral/…newsweek.com/id/110803npr.org/templates/story/s…projects.washingtonpost.c…betfair.comthendral2007.wordpress.co…dashboard.wordpress.combsubra.wordpress.com [...]












//பதிவாளர்களில் பலர் அமெரிக்காவில் வசிப்பவர்கள். இவர்கள் இன்னும் தேர்தலைப் பற்றி எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. //
அதற்குள் நாலு வருடம் ஓடிவிட்டதா என்று என்னைப்போன்று கவலைப்படுபவர்களும் இருக்கலாம் வெங்கட்
. போன தேர்தல் சமயத்தில் அவ்வப்போது கிறுக்கிக்கொண்டிருந்தேன். அருகிலிருந்து பார்க்க வாய்ப்புக் கிடைத்த இரண்டாவது தேர்தல் என்பதால், முதல் தடவைக்கும் இப்போதைக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் (நாம் பார்த்துக் கணிக்கும் முறையில் கூட)!!
வலதுசாரிகளுக்கு மெக்கேய்ன் முன்னிலையில் இருப்பதே எரிகிறது! எனக்கும் எட்வர்ட்ஸுக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருந்திருக்குமென்று தோன்றியது – ஒபாமாவின் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை போல – என்ன செய்ய முடியும்? ஒபாமா விஷயத்தில் பராக் ஹூசைன் ஒபாமாவின் பெயரிலிருக்கும் ‘மத்திப் பெயர்’ இன்னும் முழு அளவில் வலதுசாரி மீடியாக்களால் வம்பிழுக்கப்படவில்லை. ஜனநாயகக் கட்சியின் நாமினேஷன் கிடைத்தால் முழு வீச்சில் இது இறங்குமென்று நினைக்கிறேன். ஆன் கூல்டர்!!!!!!! Fast talking, venom spewing, tall, skinny, boo(b/t)ylicious intellectual right wing conservative blonde என்பது அமெரிக்க மீடியாவில் சுடச்சுட வியாபாரமாகும் இமேஜ் என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபித்த ஊடக மா(மூ அல்ல)தேவி! வாழ்க அவர்தம் புகழ்.
//என் கணிப்பில் ஒபாமா ஜனாதிபதியாகவும், ஜான் எட்வர்ட்ஸ் அவருக்குத் துணையாகவும் வந்தால்//
ஜான் எட்வர்ட்ஸ் இதற்கு ஒத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை – நடந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஹூசேன்/மெக்கேய்ன் ஹில்லரி/மெக்கேய்ன் என்று வந்தால் மெக்கேய்ன் எளிதில் வெற்றி பெறுவார் என்பது எனது கணிப்பு – மெக்கேய்ன் குடியரசுக் கட்சி நாமினேஷனை முதலில் பெற வேண்டும் – கிடைத்தால் இதுதான் நடக்கும் என்று தோன்றுகிறது – ஆனாலும், இடையில் இருக்கும் ஒரு வருடத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், யாருக்குத் தெரியும்? இந்த வருடமும் swift boat veterans ‘for truth’ கள் மறுபடி வரலாம், அல்லது ஒசாமாவிடமிருந்து தேர்தல் நேரத்தில் ஒரு வீடியோ வரலாம்.