Archive for February, 2008

அதிகுறை வெப்பநிலை - தரவிறக்கக் கிடைக்கிறது

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருந்தேன். வடஅமெரிக்காவிற்கு வெளியே வசிக்கும் பலருக்கும் இந்த இரண்டு வாரத் தொடரை பார்க்க முடிந்திருக்காது. இப்பொழுது நோவா-வின் இணையம் வழியே இது இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது.
அதிகுறை வெப்பநிலையை அடைவதில் இயல்பியல் கண்டிருக்கும் முன்னேற்றங்களையும், அந்தக் குறைந்த வெப்ப நிலையில் பருப்பொருள்கள் அடையும் புதிய பண்புகளையும் குறித்து விளக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி இது. தவறாமல் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.


ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

சற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.
ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.
என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் [...]


தொழில்முறை கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம். நாளதுவரை நாடுகளுக்கிடையேயாக மட்டுமே இருந்துவந்த இந்த விளையாட்டு இன்றைய தினம் தன்னுடைய போலி வர்த்தகப் போர்வையை உதறிவிட்டு நிஜ வர்த்தகப் போர்வையைப் பூண்டிருக்கிறத்து. முதன் முறையாக கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல கிரிக்கெட்டும் தனிநபர் வர்த்தகத்தைத் தழுவியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை இதை ஒரு தவிர்க்கமுடியாத, அதேசமயத்தில் அத்தியாவசியமான பரிணாம வளர்ச்சியாகத்தான் கருதுகிறேன். பல நாடுகளைச் [...]


திறந்த அணுக்க அறிவியல் சஞ்சிகைகள்

நேற்று முன்தினம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆராய்ச்சியாளர்களுக்குத் திறந்த அணுக்க சஞ்சிகைகளில் பதிப்பிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. அது என்ன திறந்த அணுக்க சஞ்சிகைகள்? கண்டுபிடிப்புகளைத் திறந்த வகையில் பகிர்ந்துகொள்வது அறிவியல் துறையில் (பொதுவில் எந்த அறிவுத் துறைகளிலும், இந்தப் பதிவில் அறிவியல் என்ற இடங்களிலெலாம் பொதுவில் அறிவுத் துறைகள் என்று கொள்ளவும்)) முக்கியமான ஒன்று. அறிவியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி துறைசார் சஞ்சிகைகளுக்கு அனுப்புவார்கள். அங்கே அது தகைவுள்ள [...]


அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கு லாரென்ஸ் லெஸிக்

சான்ஃப்ரான்ஸிஸ்கோ பகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாம் லாந்டோஸ் சமீபத்தில் காலமானார். இந்த இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் லாரென்ஸ் லெஸிக் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி நடந்து லெஸிஸ் அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
லாரென்ஸ் லெஸிக் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பச் சட்டத்துறை பேராசிரியராக இருக்கிறார். Creative Commons என்ற அமைப்பைத் துவங்கியவர். தளையறு மென்கலன் கழகத்தின் இயக்குநர்களில் ஒருவர். தொழில்நுட்பம், காப்புரிமை, பகிர்தல், மென்கலன் போன்ற துறைகளில் செயற்பாட்டு விதங்களில் [...]


13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு

(வயதுவந்தவர்களுக்கு மட்டும்)
புகழ்பெற்ற பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் கவிதை (கண்டுபிடிப்பு) சமீபத்திய மருத்துவ சஞ்சிகைகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. Archives of Sexual Behavior என்ற மருத்துவ சஞ்சிகையில் பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மானிய மருத்துவர் ஒருவர் பெண்களின் கஷ்டத்தைப் போக்க கண்டுபிடித்த வழியைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
Kompanje, E. J. O. (2006). Painful sexual intercourse caused by a disproportionately long penis: An historical note on a remarkable [...]


நிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு

நடிகை நிகோல் கிட்மனின் நீச்சலுடை இந்தியாவில் ஏழைக்குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறது.
சுவீடன் நாட்டு நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை அங்கே ஏலம் விடப்பட்டது. கிடைத்த தொகை 16,200 ஸ்வீடிஷ் க்ரோனர்கள் (கிட்டத்தட்ட $3,270). இதை வைத்துக்கொண்டு ஒன்பது பசுமாடுகள் வாங்கி இந்தியாவில் ஏழைக்குடும்பங்களுக்குத் தானமாக வழங்கப்படவிருக்கிறது.
தவறு செய்துவிட்டார்கள். இதே நீச்சலுடையை இந்தியாவில் ஏலம் விட்டிருந்தால் கட்டாயம் இதைவிட அதிக பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு இன்னும் நிறைய பசுமாடுகளை வாங்கி, இன்னும் நிறைய குடும்பங்களைக் காப்பாறியிருக்கலாம். (அந்நியச் [...]


அமெரிக்கத் தேர்தல் புதிய கூட்டு வலைப்பதிவு

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யவும் விவாதிக்கவும் ஒரு கூட்டு வலைப்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நான் எழுதிய ஒபாமா வெல்லட்டும் என்ற பதிவு தூண்டிய ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களின்பொழுது நண்பர்கள் பலருக்குத் தேர்தல் குறித்து எழுத ஆர்வம் இருப்பதாகத் தெரியவந்தது. இவற்றை ஒரே இடத்தில் பதிவு செய்ய வசதியாகக் கூட்டுப்பதிவு ஒன்றைத் துவங்கலாம் என்ற யோசனையில் இருந்தபொழுது சுந்தரமூர்த்தியும் இதே கருத்தைச் சொன்னர்.


அனுபம் கேர் துணையுடன் ஆறுபரிமாணப்படம்

வழக்கமாக நமது திரைப்படங்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், ஆறு பரிமாணத்தில் இது கொஞ்சம் ஓவராகவே தோன்றுகிறது.
மொஹஞ்சதாரோவைப் பற்றிய இந்தப் படத்தில் வழக்கமான கட்புல, செவிப்புல உணர்வுகளுடன் கூடவே நாசி, தொடுகை உணர்ச்சிகளுக்கும் உண்டாம். “People can not only see but feel, smell and touch all the images and visuals in this film.”
smell, touch புரிகிறது. பீலிங்க்ஸ்தான் வழக்கமாக இந்தியப்படத்தில் எப்பொழுதும் உண்டே, இங்கே என்ன விசேஷம்?
தகவல் [...]


மஹரிஷி மஹேஷ் யோகி

உலக அளவில் இந்து மதத்தின் மிகப் பிரபலமான முகங்களில் ஒருவரான மஹரிஷி மஹேஷ் யோகி நேற்று காலமானார். 1950 தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு காலகட்டங்களில் பல பிரபலங்களுக்கு நெருக்கமானவராக இருந்தவர் யோகி. இந்த வருட ஆரம்பத்தில், தான் இந்தப் பூவுலகில் அவதரித்து செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் முடிந்துவிட்டதாகவும் இனி வரும் நாட்களை பண்டைய ஹிந்து நூல்களைப் படிப்பதில் செலவிட்டால் போதும் என்று முடிவு செய்துவிட்டதாகவும் சொன்னார். தான் [...]