• Archive for January, 2008

    அதிகுறை வெப்பநிலை – இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி

    by  • January 8, 2008 • அறிவியல்/நுட்பம் • 9 Comments

    அமெரிக்காவின் பொதுச்சேவை ஒலி(ளி)பரப்புக் கழகத்தின் PBS தொலைக்காட்சியில் இன்று இரவு ஒரு நல்ல அறிவியல் நிகழ்ச்சி வரவிருக்கிறது. இந்த வாரமும் அடுத்தவாரமும் ஒளிபரப்பாகவிருக்கும் இது கட்டாயம் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அறிவியலில் குறைந்தபட்ச ஆர்வமுள்ளவர்களுக்கு இதை முழுமனதாகப் பரிந்துரைக்கிறேன்.

    Read more →

    Pregnancy Test : Twin Pack

    by  • January 8, 2008 • நகைச்சுவை • 2 Comments

    ஆன்லைனில் Pregnancy Test – Twin Pack என்று விற்கிறார்களே, இதைக் கொண்டு இரட்டைக் குழந்தை இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி? இரண்டு சோதனைகளிலுமே பாஸிட்டிவ் வர வேண்டுமா, இல்லை ஒன்றில் வந்தால் போதுமா?

    Read more →

    ரிக்கி பாண்டிங் நீக்கப்பட வேண்டும் – பீட்டர் ரோபக்

    by  • January 7, 2008 • விளையாட்டு • 13 Comments

    இதைவிட யாரும் நேரடியாகச் சொல்ல முடியாது. இந்த வார்த்தைகள் பீட்டர் ரோபக்கிடமிருந்து ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. ரோபக் தன் கருத்துரையை இப்படித் துவங்குகிறார். RICKY PONTING must be sacked as captain of the Australian cricket team. If Cricket Australia cares a fig for the tattered reputation of our national team in our national sport, it will not for a moment [...]

    Read more →

    இல்ல நூலகம் பட்டியலிடுதல்

    by  • January 5, 2008 • அறிவிப்புகள் • 11 Comments

    என் ஆங்கில வலைப்பதிவில் இன்றைக்கு இல்ல நூலகத்தை ஒழுங்கமைத்தல் குறித்த ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். இந்தப் பதிவில் என் வீட்டிலிருக்கும் புத்தகங்களை எப்படிப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன், இதற்குத் தெரிந்தெடுத்த மென்கலன் என்ன, கூட்டாகப் பலரும் சேர்ந்து புத்தகங்களைப் பட்டியலிடுதல் போன்ற பல விஷயங்களை எழுதியிருக்கிறேன். இன்னும் இரண்டொரு நாளில் தமிழ் – ஆங்கிலப் புத்தகங்களைப் பட்டியலிடுவதற்கிடையே உள்ள வேறுபாடுகள், சிக்கல்கள், தீர்வுகள் குறித்து எழுதவிருக்கிறேன். அந்தப் பதிவின் முதல் பாகமாக என் இன்றைய பதிவைக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் [...]

    Read more →

    வாளினும் வலிய பேனா

    by  • January 4, 2008 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    கணினிகளின் வருகைக்குப் பிறகு அச்சிட்ட தகவல் அழிந்துபோகும் என்று பலரும் ஆரூடம் சொல்லத்தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை அச்சிட்ட நாளிதழுக்கான சந்தை வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. கணினிகளின் கோப்புகளாக்கிவிட்டால் காகிதத்திற்குத் தேவையிருக்காது என்று நம்பப்பட்டது; ஆனாலும் நிறுவனங்களில் காகிதத்திற்கான செலவு சில சமயங்களில் கணினிகளுக்கான செலவைவிட இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது. இணையத்தில் எல்லா தகவலும் கொட்டிக்கிடந்தாலும் மாலை அலுவலிலிருந்து வீடு திரும்பும்பொழுது இரயிலில் வரும் சகபிரயாணிகள் அன்றைய செய்தித்தாள் விமர்சனக் கட்டுரையை அச்செடுத்து வந்து படிப்பதைப் [...]

    Read more →

    படத்தொடர்

    by  • January 2, 2008 • கலைகள் • 10 Comments

    பாலாஜி இழுத்துவிட்டது. 1. சென்ற வருடத்தில் (2007) நீங்கள் எடுத்த ஒரு படத்தை இட வேண்டும் 2. பிடித்ததற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (செய்நேர்த்தி, கலையம்சம், சுயவிருப்பம்…) 3. ஏன் பிடித்தது என்று நாலு வரி எழுதவேண்டும் இழுத்துவிட்டார் என்று சொன்னாலும் இதைப் பற்றி எழுதக்கூடிய மனநிலையில்தான் இப்பொழுது. எனவே இல்லாவிட்டாலும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் புகைப்படம் குறித்து எழுதியிருக்கக்கூடும்.

    Read more →