அமெரிக்க காங்கிரஸ் நூலகப் புகைப்படங்கள் ஃபிளிக்ரில்

lib_cong_flickr.jpg உலகத்தின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பல அரிய புத்தகங்களுடன் கூட பிற ஆவணங்களும் குவிந்து கிடக்கின்றன. இன்றைக்கு இந்த நூலகம் அவர்களுடைய மிகப் பழைய புகைப்படங்களை lib_cong_flickr.jpg உலகத்தின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பல அரிய புத்தகங்களுடன் கூட பிற ஆவணங்களும் குவிந்து கிடக்கின்றன. இன்றைக்கு இந்த நூலகம் அவர்களுடைய மிகப் பழைய புகைப்படங்களை ஃபிளிக்ர் மூலம் வெள்ளோட்டமாக வெளியிட்டிருக்கிறார்கள். மிக அற்புதமான பல படங்கள் இருக்கின்றன. நான் அவற்றில் அமிழ்ந்து போனதில் ஒரு மணி நேரம் காலி.

இதை ஃபிளிக்ர் மூலமாக வெளியிடுவதற்கு நூலகம் மூன்று முக்கிய காரணங்களை அறிவித்திருக்கிறது.

* To share photographs from the Library’s collections with people who enjoy images but might not visit the Library’s own Web site.
* To gain a better understanding of how social tagging and community input could benefit both the Library and users of the collections.
* To gain experience participating in Web communities that are interested in the kinds of materials in the Library’s collections.

இவற்றில் நான் தேடிய அளவிற்கு இந்தியா, தமிழ்நாடு, மெட்ராஸ் போன்ற வார்த்தைகளில் அதிகம் சிக்கவில்லை. இந்தியா என்ற வார்த்தைக்கு நான்கு படங்கள்தான் கிடைத்தன. கனடாவைப் பற்றிக்கூட அதிக படங்கள் இல்லை. வரும் நாட்களில் கிடைக்கலாம்.

இது ஒரு சுவாரசிமான திட்டம். மாபெரும் நிறுவனங்கள்கூட இப்பொழுது இணையத்தின் சமூகப்பிணை (Social Networks) பயன்படுத்தத் துவங்கியிருப்பது நல்ல விஷயம். இரண்டு வருடங்களுக்கு முன்னால் பிபிஸி இதைப் போல தனது பழைய இசைத் தொகுதிகளை இலவசமாகத் தந்தது. (ஆனால் உடனடியாக ரியா மாஃபியா தலையிட்டு இதை நிறுத்திவிட்டது). இது குறித்த என் பழைய பதிவு இங்கே.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)