• Archive for January, 2008

    கிரிக்கெட்டைக் கடவுள் காப்பாற்றுவாராக

    by  • January 30, 2008 • விளையாட்டு • 2 Comments

    ஹர்பஜன் நிறவெறி விவகாரத்தின் முழுவிபரத்தில் [14] Mr Symonds appears to be saying that he finds it unacceptable that an opponent makes a gesture that recognises the skill of one of his own team mates. In the transcript he stated: “MR MANOHAR: You had any objection to that patting on the back? MR SYMONDS: Did I have [...]

    Read more →

    Second hand smoking

    by  • January 30, 2008 • விளம்பரம் • 0 Comments

    மனதைக் கவர்ந்த பொதுநல விளம்பரங்களில் இன்னொன்று. மாற்றார் புகையை சுவாசித்தல் (Second hand smoking) எந்த அளவிற்குத் தீங்கானது என்று இந்தப் படம் அழகாகக் காட்டுகிறது. எதிர்ப்புறத்திலிருந்து வரும் புகையைக் காட்ட சிகரெட்டைத் திருப்பி வாய்ப்பக்கம் புகையச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உறைந்து போன பெண்ணின் முகம் நீண்ட காலமாக மாற்றார் புகையைச் சுவாசித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மிகவும் அற்புதமான வடிவாக்கம். Client: Droits Des Non Fumeurs Agency: BDDP Unlimited, Paris Creative Director: Guillaume Ulrich Chifflot

    Read more →

    ஸைமண்ட்ஸ் குரங்குதான்; ஹர்பஜன் நிறவெறியாளர் இல்லை

    by  • January 29, 2008 • விளையாட்டு • 4 Comments

    ஒரு வழியாக ஹர்பஜன் விவகாரம் (தற்காலிக) முடிவுக்கு வந்திருக்கிறது. கூடுதல் சாட்சியங்களும் ஆதாரங்களும் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லி நீதிபதி விசாரனைக்கு முன்னால் கொஞ்சம் சூடு கிளப்பிவிட்டார். ஆனால் அவரைப் பார்ப்பதற்கு முன்னாலே இந்தியர்களும் ஆஸ்திரேலியர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஏற்கனவே சொல்லிவைத்தபடி ஹர்பஜன் குரங்கு என்று சொன்னது உண்மைதான் அதற்காக இரண்டரை நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒத்துக்கொண்டுவிட்டார். ஆஸ்திரேலியர்களும் “ஆமாம் நாங்கதான் அவரைக் குரங்குன்னு சொல்லத் தூண்டினோம்” என்றும் சொல்லிவிட்டார்கள். ஹர்பஜன் தலைக்கு [...]

    Read more →

    லெகோ-வுக்கு ஐம்பது வயது

    by  • January 29, 2008 • அறிவியல்/நுட்பம், விளையாட்டு • 11 Comments

    பல அதியற்புத கண்டுபிடிப்புகள் அமைப்பில் எளிமையானவை. இதற்கு முதன்மை உதாரணமாக நான் அடிக்கடிச் சொல்வது பேப்பர் கிளிப். ஒரு வெற்று கம்பியை எடுத்து சில முறை வளைத்துச் செய்யப்படுவது கிளிப். ஆனால் இன்றைய தினம் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், வீடுகளிலும் பயனில் இருக்கும் ஒரு சாதனம் கிளிப். இதைப் போல விளையாட்டு சாமான்களில் முதன்மை உதாரணமாக நான் கருதுவது லெகோ கட்டைகள். அமைப்பில் மிக எளிமையானது, ஆனால் உலகெங்கிலும் பல மில்லியன் சிறார்கள் (ஏன் [...]

    Read more →

    மு. தளையசிங்கம் படைப்புகள் – வெளியீட்டு விழா

    by  • January 25, 2008 • இலக்கியம் • 2 Comments

    தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கொள்ள வேண்டும். மு. தளையசிங்கத்தின் எழுத்துக்கள் மு.பொன்னம்பலத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தத் தொகுப்பு தமிழின் மைய நீரோட்டத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் புதிய சிந்தனையாக ஈழத்தில் கிளைத்தெழுந்த விதத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்பலாம். தனிப்பட்ட முறையில் நான் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். திரு. தளையசிங்கத்தின் சில எழுத்துக்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் நூலகம் தளத்தில் கிடைக்கின்றன. அவரைப்பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை நண்பர் டாம். சிவதாசன் [...]

    Read more →

    ஸ்ரீசந்த் – அபத்தத்தின் உச்சம்

    by  • January 23, 2008 • விளையாட்டு • 11 Comments

    இந்த அபத்தத்திற்கு யாராவது முடிவு கட்டினால் தேவலாம். “I love the spotlight. The Aussies should be worried I am coming.” Meet the quote-a-minute, bold and brash Sreesanth. He even refers to himself in the third person. “Sreesanth’s way is to be aggressive. Sreesanth will always remain Sreesanth.”

    Read more →

    ஃபிடல் காஸ்ட்ரோ நம்மாளுதான்

    by  • January 18, 2008 • நகைச்சுவை • 3 Comments

    ஒரு அல்ப சந்தோஷம். இன்றைக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும் நீக்கான் காமெரா பயன்படுத்துகிறார் என்று தெரிய வந்தது. என் அபிமான காமெரா நீக்கான். சமீபத்தில் ஹவானா வந்த பிரேஸில் குடியரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா-வை காஸ்ட்ரோ படம் எடுக்கிறார்.

    Read more →

    அமெரிக்க காங்கிரஸ் நூலகப் புகைப்படங்கள் ஃபிளிக்ரில்

    by  • January 17, 2008 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    உலகத்தின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பல அரிய புத்தகங்களுடன் கூட பிற ஆவணங்களும் குவிந்து கிடக்கின்றன. இன்றைக்கு இந்த நூலகம் அவர்களுடைய மிகப் பழைய புகைப்படங்களை ஃபிளிக்ர் மூலம் வெள்ளோட்டமாக வெளியிட்டிருக்கிறார்கள். மிக அற்புதமான பல படங்கள் இருக்கின்றன. நான் அவற்றில் அமிழ்ந்து போனதில் ஒரு மணி நேரம் காலி.

    Read more →

    பொங்கல் நினைவுகள்

    by  • January 15, 2008 • சமூகம் • 6 Comments

    நினைவுகளைச் சுவையோடு சொல்லி நம்மையும் பின்னுக்கு இழுத்துச் செல்வதில் செல்வராஜ்-க்கு இணை தமிழ் வலைப்பதிவுலகில் யாரும் இல்லை. அவருடைய புண்ணியத்தில் நானும் கொஞ்சம் அசைபோடுகிறேன். நான் வளர்ந்தது முழுக்க தஞ்சை மாவட்டம். அறுவடைத் திருநா கொண்டாட்டம் அங்க கொஞ்சம் அமக்களமாகவே இருக்கும். எங்க ஊர்ப்பக்கம் போகிக்கு பழச எல்லாம் போட்டுக் கொளுத்தும் பழக்கம் கெடயாது. அதேமாரி தம்பட்டம் அடிக்கற வழக்கமெல்லாமும் இல்ல. இத நான் மொத தடவையா சென்னை வந்தப்பதான் பாத்துருக்கேன். செவுத்துல காவிப்பட்டை சுன்னாம்புப்பட்டை அடிப்போம். [...]

    Read more →

    கிரிக்கெட் – நடுவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டிய நேரம்

    by  • January 13, 2008 • விளையாட்டு • 0 Comments

    இந்திய -ஆஸ்திரேலிய சிட்னி டெஸ்ட் போட்டி அபத்தத்தின் உச்சகட்டமாக நடந்து முடிந்து கூச்சல்கள் தணிந்திருக்கும் வேளை. இது குறித்த என்னுடைய முந்தைய பதிவில் நடுவர் ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். பத்ரி இதைப்பற்றி எழுதும்பொழுது நடுவர்மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நான் மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. என்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து என் முந்தைய பதிவின் கருத்துப்பகுதியில் பத்ரி இதையே வலியுறுத்தி; ஓர் [...]

    Read more →