• இல்ல நூலகம் பட்டியலிடுதல்

    by  • January 5, 2008 • அறிவிப்புகள் • 11 Comments

    என் ஆங்கில வலைப்பதிவில் இன்றைக்கு இல்ல நூலகத்தை ஒழுங்கமைத்தல் குறித்த ஒரு பதிவை எழுதியிருக்கிறேன். இந்தப் பதிவில் என் வீட்டிலிருக்கும் புத்தகங்களை எப்படிப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன், இதற்குத் தெரிந்தெடுத்த மென்கலன் என்ன, கூட்டாகப் பலரும் சேர்ந்து புத்தகங்களைப் பட்டியலிடுதல் போன்ற பல விஷயங்களை எழுதியிருக்கிறேன்.

    இன்னும் இரண்டொரு நாளில் தமிழ் – ஆங்கிலப் புத்தகங்களைப் பட்டியலிடுவதற்கிடையே உள்ள வேறுபாடுகள், சிக்கல்கள், தீர்வுகள் குறித்து எழுதவிருக்கிறேன். அந்தப் பதிவின் முதல் பாகமாக என் இன்றைய பதிவைக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் Home Library Organization என்ற இந்தப் பதிவைப் பார்க்கவும். நீங்களும் இதைப் போலப் பட்டியலிட முயன்றிருந்தால் உங்கள் அனுபவங்களை அறியத் தரவும்.

    11 Responses to இல்ல நூலகம் பட்டியலிடுதல்

    1. January 5, 2008 at 11:47 pm

      வெங்கட்,

      தமிழப்புத்தகங்களையும் அங்கு நாம் பட்டியலிட முடியும்.

      ஒரு வருடத்திற்கு முன்னரே மேற்கொண்ட சிறு முயற்ச்சியை இங்கு பார்கலாம். என்ன தமிழ்ப்புத்தகங்களை நாம்தான் இணைக்கவேண்டியுள்ளது.

    2. January 6, 2008 at 5:41 am

      வஎங்கட்,

      2006 அக்டோபரில் இத்தளத்தை ஒரு வலைப்பதிவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.

    3. January 7, 2008 at 12:00 pm

      இடுகைக்குத் தொடர்பில்லாத மறுமொழிக்குப் பொறுக்கவும் !

      ஓரிரு நாள் முன்னர் news portal styleல் ஒரு வார்ப்புரு வைச்சிருந்தீங்களே..அதோட பெயர், இணைப்பு தர முடியுமா?

      subscribe to comments நீட்சி சேர்த்துக்கிட்டீங்கன்னாலும் உதவியா இருக்கும். நன்றி

    4. வெங்கட்
      January 7, 2008 at 3:57 pm

      குமரேசன் – 200 புத்தகங்களுக்கு மேலே போனால், library thing பயனில்லாமல் போய்விடுகிறது. என்னுடைய நோக்கம் என் நூலகத்தைப் பட்டியலிடுவது மாத்திரமில்லாமல் அதைப் பிறருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்து கொள்வது. அதற்கான வழிகளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

    5. வெங்கட்
      January 7, 2008 at 4:00 pm

      ரவிசங்கர் – அந்த வார்ப்புருவின் பெயர் Structure அதை இங்கே பெறலாம்:
      http://justintadlock.com/archives/2007/12/09/structure-wordpress-theme

      அதன் அமைப்பு மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது, ஆனால் அதில் சில குறைபாடுகள் இருக்கின்றன. எனவே, அதை வைத்துக்கொண்டு கொஞ்சம் கனமான விஷயங்களைச் செய்ய முயற்சித்தால் மெதுவாகச் செல்கிறது. (YouTube, Flicker RSS, my other site’s RSS போன்றவற்றை எல்லாம் சேர்த்தால் அது ஆமை வேகத்தில் செல்கிற்து. எனவேதான் அதை எடுத்துவிட்டேன்.

    6. வெங்கட்
      January 7, 2008 at 4:02 pm

      Oh. Ravi,forgot to add. I cannot do Subscribe to Comments here. I run this server from home and as such do not want to run a mail server (it is more painful than web server), esp. SMTP. My email is outsourced to google (for free). The top subscribe to email comment in this page will also be removed soon.

    7. January 7, 2008 at 10:04 pm

      நன்றி வெங்கட். உங்க வார்ப்புருத் தெரிவுகள் எல்லாமே நல்லா இருக்கு.

    8. January 8, 2008 at 2:16 am

      வெங்கட்,

      உங்களுடைய நோக்கம் சிறப்பானது. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம். இது எமது இரண்டாண்டு அனுபவம். இங்குள்ள பதிப்பாளர்கள், நூலகங்களின் எதையுமே இலவசமாகப் பெற்றுக்கொள்ளும், மன நிலையில் மாற்றம் வந்தால்தான் உண்டு.

      நாம் தாராவுக்கு http://www.librarything.com ஐ 2006.10.06 இல் அறிமுகப்படுத்தும்போது librarything இல் 48 தளங்கள்தான் Sources ஆக இருத்தது, அன்றைக்கே Urudu மொழியும் Pakistan நாடும் அப்பட்டியலில் இருந்ததை நான் அவதானித்திருக்கிறேன். இன்று அவர்களின் பட்டியல் விரிவடைந்து 29 நாடுகளில் இருந்து 183 தளங்கள் librarything இன் Sources ஆக பெருகியுள்ளன. ஆனாலும் இன்று இந்தியாவும் இல்லை எந்தவொரு இந்திய மொழியும் இல்லை. இதற்கு அடிப்படைக்காரணம் இந்தியாவில் ஒரு மொழி ஆட்சி இல்லை என்பதேயாகும். இணைக்கப்ட்ட 29 நாடுகளிலும் பெரும்பான்மையாக ஆட்சிமொழி என்று ஒரு மொழி உள்ளதால் அவர்கள் தங்கள் மொழிகளில் வெளியாகும் படைப்புகளைத் தரவுதளமாக வைத்திருப்பதுதான். அப்படியான தரவுதளங்களின் துணையுடன்தான் librarything தகவல்களைத் திரட்டுகிறது. அதன்பின் பொதுமக்கள் நூல்களைப் பட்டியலிட உதவுகிறது.

      இந்தியாவில் தென்னகம் தகவல் தொழில் நுட்பத்தின் தொட்டில் என்று பெருமிதமாகக் கூறினாலும் இங்கு செய்யப்படுவது என்னவோ வெள்ளைக்காரனுக்கு கூலி வேலைதான். அடுத்தாக தமிழன் ஒருவன் திரட்டி செய்தால் அவனைத் திரத்தி அடிக்க மற்றைய தமிழர்கள் தயாராக இருக்கும்போது எப்படி வரும் இப்படியான முயற்சிகள்?

      இம்முயற்சி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அல்லது சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற ஆளணி, நிதி வசதிகள் நிறைந்த அமைப்புகள் நினைத்தால் மட்டும் சாத்தியமாகும். எம்மைப் போன்ற தனிமனித உழைப்புக்களுக்கு ஏளனம்தான் மிஞ்சும்.

    9. ஜெ. உமா மகேஸ்வரன்
      January 8, 2008 at 11:58 am

      வெங்கட்,

      இல்ல நூலகம் பட்டியலிடுதல் பற்றிய பதிவை ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன். நான் OpenOffice SpreadSheet மென்கலனைப் பயன்படுத்துகிறேன். எளிதாக இருக்கிறது என்னும் காரணத்தால் வேறு எந்த மென்கலனைத் தேடவும் பயன்படுத்தவும் முயற்சிக்கவில்லை. முன்பெல்லாம் புத்தகம் வாங்கியவுடன் OpenOffice SpreadSheet-ல் பதிந்து வைப்பது வழக்கமாக இருந்தது. தற்பொழுது நிறுத்தி விட்டேன். லினக்ஸில் இருக்கும் மென்கலனாக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

      Software என்னும் வார்த்தைக்கு மென்கலன் அல்லது மென்பொருள் – இதில் எந்த வார்த்தை சரியானது? மென்பொருள் எனும் வார்த்தை தான் நிறையப் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. தாங்கள் மென்கலன் எனும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். விளக்கம் தர வேண்டுகிறேன்.

    10. வெங்கட்
      January 8, 2008 at 5:35 pm

      குமரேசன் – இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். திறமூலத்திலிருந்து கிடைக்கும் கருவிகளை மாற்றியமைத்து நமதாக்கிக் கொள்வதுதான் ஒரே வழி.

    11. வெங்கட்
      January 8, 2008 at 5:39 pm

      உமா -

      உங்களுக்குத் தனியஞ்சல் ஒன்றும் அனுப்பியிருக்கிறேன்.

      விரிதாள் முறையெல்லாம் ஓரளவுக்கு மேல் பலன் தராது, ஒருவர் அட்டவனையை இன்னொருவர் பயன்படுத்தவும் முடியாது. ஏதாவது தரவு தளத்தின் மேல் கட்டியெழுப்பியிருந்தால்தான் அளவில் பெரிய பட்டியல்களும் அவற்றில் தேடலும் சாத்தியமாகும். விரைவில் தமிழ்ப் புத்தகப்பட்டியலிடுவதில் என் அனுபவத்தை எழுதுகிறேன்.

      மென்கலன் என்பதுதான் சரி. Ware என்பதற்குக் கலம் என்றுதான் கொள்ள வேண்டும். மென்கலன், வன்கலன், பகிர்கலன், வெறுங்கலன் என்பவை முறையே Software, hardware, shareware, vapourware போன்றவற்றைக் குறிக்கும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *