ஒரு வழியாக ஹர்பஜன் விவகாரம் (தற்காலிக) முடிவுக்கு வந்திருக்கிறது.

கூடுதல் சாட்சியங்களும் ஆதாரங்களும் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லி நீதிபதி விசாரனைக்கு முன்னால் கொஞ்சம் சூடு கிளப்பிவிட்டார். ஆனால் அவரைப் பார்ப்பதற்கு முன்னாலே இந்தியர்களும் ஆஸ்திரேலியர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஏற்கனவே சொல்லிவைத்தபடி ஹர்பஜன் குரங்கு என்று சொன்னது உண்மைதான் அதற்காக இரண்டரை நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒத்துக்கொண்டுவிட்டார். ஆஸ்திரேலியர்களும் “ஆமாம் நாங்கதான் அவரைக் குரங்குன்னு சொல்லத் தூண்டினோம்” என்றும் சொல்லிவிட்டார்கள். ஹர்பஜன் தலைக்கு வந்தது டர்பனைக்கூட சாய்க்காமல் போய்விட்டது.

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் மடத்தனமாகக் கையாண்டுவிட்டது. (For once…). கும்ளே எப்பொழுது ப்ராட் ஹாக் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெறுகிறேன் என்று சொன்னாரோ உடனே ஆஸ்திரேலியா சரி, ஹர்பஜன் தவறையும் மறந்துவிடுவோம் என்று சொல்லியிருக்க வேண்டும் (தீர்ப்பு வழங்கப்பட்டு ஏற்கனவே மறுபரிசீலனையில் இருக்கிறது என்பதெல்லாம் வெற்று. ஆஸ்திரேலிய நிர்வாகம் தீர்மானமாக இதையெல்லாம் மறந்துவிடலாம் என்று சொல்லியிருந்தால் ஐஐசியும் கும்ளே, பாண்டிங், பெருந்தன்மைக்கு மதிப்பு கொடுக்கிறோம் என்று அவர்களது பெருந்தன்மையை நிலைநாட்டியிருப்பார்கள். அதைவிட்டுவிட்டு கடைசிவரை நின்று, பிறகு வழிந்திருப்பது முட்டாள்தனம்.

* * *

இந்த ஹர்பஜன் குரங்குக் கதையின் பாத்திரதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு:

  • மைக் ப்ராக்டர் = -10
  • பென்ஸன், பக்னர் = -8
  • ஹர்பஜன் சிங் = -7
  • ஆண்ட்ரூ ஸைமன்ஸ் = -6.85
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் = -6
  • ரிக்கி பாண்டிங் = -5
  • மைக்கெல் கிளார்க், மாத்யூ ஹைடன் = -2
  • சச்சின் டெண்டுல்கர் = 0
  • இந்திய கிரிக்கெட் நிர்வாகம் = +5
  • அணில் கும்ளே = +10