கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக  என் வழங்கியில் கேளாறுகள் போன்ற பல காரணங்களினால் என் வலைப்பதிவு செயலிழந்து போக நேரிட்டது. இதைச் சரி செய்யப் போக வழங்கி இயங்கும் உபுண்டுவின் புது வடிவத்திற்கு மாற வேண்டியிருந்தது. அப்படி மாறப்போக தரவுத்தளம் (mysql)  கோபித்துக் கொண்டுவிட்டது. இடையில் வேலை நிமித்தமாக ஐரோப்பியப் பயணமும் சேர்ந்துகொள்ள  “ஆவின மழைபொழிய இல்லம்வீழ…” கதைதான்.

ஒரு வழியாக இப்பொழுது கொஞ்சம் சரி செய்திருக்கிறேன். இனி பதிவுகளைத் தொடர்ந்து எழுதமுடியும்.  தற்பொழுது பழைய பதிவுகளின் வரிசை எண்கள் மாறிப்போயிருக்கின்றன.  எனவே பழைய இணைப்புகளில் சில சரிவரச் செயற்படா.  இயன்ற அளவிற்கு இதைச் சரிசெய்ய முயற்சிக்கிறேன். இசைப்பதிவுகளில் பாடல்களுக்கான இணைப்புகள் சரியாக இல்லை என்று தெரிகிறது. இதையும் சரி செய்கிறேன். வேறு ஏதாவது சிக்கல்கள் இருந்தால் தெரியப்படுத்துபவர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.

வரும் நாட்களில் உங்களுடன் மீண்டும் உரையாட முடியும் என்பதில் மகிழ்ச்சி.