• பில்லி, சூன்யம், தொலைக்காட்சி

  by  • March 18, 2008 • சமூகம் • 8 Comments

  sanal_edamaruku.jpg விட்டு விடு கறுப்பு, விடாதே செருப்பு, என்று அபத்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடையே இப்படியொரு உருப்படியான (கல்வி) நிகழ்ச்சி இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் வந்திருப்பது வியப்பான விஷயம்.

  India TV தொலைக்காட்சியில் சனல் எடமருகு என்பவர் பில்லி சூன்யம் வைக்கும் சாமியார் ஒருவருடன் நேரடியாக மோதியிருக்கிறார். சனல் எடமருகு Indian Rationalists Association-ன் தலைவர். போட்டியில் சாமியார் தன் மந்திர பலத்தைப் பயன்படுத்தி எடமருக்குவைத் பலத்த முயற்சிகளுக்கும் பின்னர் சடமருக்குவைக் கொல்ல முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார். போட்டியில் சனல் மீது நீர் தெளிக்கப்பட்டிருக்கிறது, மயிற்பீலியால் அவர் வருடப்பட்டிருக்கிறார். இன்னும் சாமியார் மாவு பிசைந்து அதை ஊசியால் குத்தியிருக்கிறார்; கத்தியால் வெட்டியிருக்கிறார். தீ வளர்த்து வெட்டப்பட்ட மாவைப் பலி கொடுத்திருக்கிறார். இறுதியாக சாமியார் தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  நிகழ்ச்சி எங்காவது இணையத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நல்ல தமாசாக இருந்திருக்கும். எப்பொழுதாவது ஒருமுறைதான் தொலைக்காட்சியில் இதுமாதிரி நல்ல நிகழ்ச்சிகள் சாத்தியம். சனல்-க்குப் பாராட்டுகள்.

  தகவல்: Nanopolitan

  8 Responses to பில்லி, சூன்யம், தொலைக்காட்சி

  1. March 18, 2008 at 4:16 pm

   பாராட்டத்தக்க தைரியம் ;)

  2. March 18, 2008 at 4:28 pm

   தைரியம் வேணும். எனக்கென்ன தோணுதுன்னா அந்தாளு வச்ச பில்லி சூனியம் அப்படியே தவறிப்போயி தமிழ் வலைப்பதிவுலக ஆட்டிப்படைக்குதோ என்னவோ தெரியல. :)

   இந்த ப்ரோக்ராம் ஏசியாநெட்ல நடந்துச்சுண்ணா விளைவு வேற மாதிரி ஆயிருக்கும்.

  3. Sridhar Narayanan
   March 18, 2008 at 4:48 pm

   தமிழிலே இந்த மாதிரி நிகழ்ச்சி வந்திருக்கிறதே. விஜய் டீவியில் வரும் 'நீயா? நானா?'வில் ஒரு முறை ஒரு பேராசிரியர் வெளிப்படையாக சவால் விட்டார். பில்லி சூனியம் வைப்பது உண்மையாக இருந்தால் தனக்கு வைக்கவும். ஒரு மாந்திரீகரும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு பேராசிரியரின் கைக்குட்டை ஒன்றைப் பெற்றுக் கொண்டார். ஒரு வாரம் கழித்து முடிவு தெரியும் என்றார்கள். அடுத்த வாரம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. ஏனோ மீடியா இந்த நிகழ்ச்சியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. :-)

  4. March 18, 2008 at 9:36 pm

   ஒரு வேளை இந்தச் சாமியார் சரியாக் கத்துக்கலையோ என்னவோ!

  5. Karthik
   March 18, 2008 at 11:50 pm

   You can request for the video here info_desk@rationalistinternational.net

  6. March 19, 2008 at 6:17 am

   Idhu pol vijay Tv yin neeya naanavil um oru muyarchi nadandhdadhu adhilum mandhravadhigal thotranar. oru velai keralavula pannirundha work out agirkumo

  7. Jai
   January 24, 2011 at 6:08 am

   இதை போல் நிகழ்ச்சியில் பில்லி சூன்யம் வைப்பவர் உண்மையானவரா அல்லது பெயர் எடுக்க நினைப்பவர் செய்யும் மாயையா?

   ஏன் என்றால் விஜய் டீவியில் வரும் 90% நிகழ்ச்சி பொய்யை மட்டுமே சொல்லும்(எ.கா : யார் மனசுல யாரு? உங்க மனசுல யாரு?)

   எல்லாம் எங்கோ உள்ளது அது மட்டும் உன்மை. அதனால் தான். தஞ்சை கோவிலில் கருணாநிதி தலை வாசல் வழியாக செல்லவில்லை. வாசன் அவர்கள் சிலரை தஞ்சை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வில்லை. யாரும் கன்னீயாகுமரியில் இரூந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்குவதில்லை

  8. palani
   August 24, 2012 at 9:26 am

   பில்லி சூனியம் வைப்பது உன்மை

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *