1. சென்ற வருடத்தில் (2007) நீங்கள் எடுத்த ஒரு படத்தை இட வேண்டும்
2. பிடித்ததற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (செய்நேர்த்தி, கலையம்சம், சுயவிருப்பம்…)
3. ஏன் பிடித்தது என்று நாலு வரி எழுதவேண்டும்
இழுத்துவிட்டார் என்று சொன்னாலும் இதைப் பற்றி எழுதக்கூடிய மனநிலையில்தான் இப்பொழுது. எனவே இல்லாவிட்டாலும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் புகைப்படம் குறித்து எழுதியிருக்கக்கூடும்.
கடந்த மூன்று வருடங்களில் நிறைய சாதனங்கள் வாங்கிக் குவித்தாகிவிட்டது. 1 கிகா iPod Shuffle, 4 கிகா iPod Nano, 30 கிகா iPod Video, 80 கிகா iPod Video (இவற்றில் 80 கிகா ஒன்றுதான் சொந்தமாகக் காசுகொடுத்து வாங்கியது, மற்றவை வங்கியில் கணக்கு திறந்ததற்காக, புதிய MacBook Pro வாங்கியதற்காக என்று ஓசியில் சேர்ந்தவை) 40 அங்குல சாம்ஸங்
LCD TV, சோனி இல்லரங்கம் (home theatre), Sony Ericsson W810i Walkman Phone, Nokia E50 Smartphone என்று… இவற்றில் மனதுக்குப் பிடித்தது 2005 கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது வாங்கிய Nikon D50 Digital SLR காமெரா-தான். சென்ற வருடம் ஏழைகளுக்காக நிக்கான் வெளியிட்ட 70-300 பெருக்கி லென்சு ஒன்றையும் வாங்கிவிட்டேன்.
என் நண்பர் ஒருவர் வாங்கிய Nikon D70-ல் இருக்கும் சிக்கல்கள் பிடிபடாமல் அதிகம் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தார். இந்தக் கோடையின்போது என்னுடைய D50ஐ வாங்கிக் கொண்டு அவருடைய D70ஐ என்னிடம் கொடுத்துவிட்டார். D70 வந்தது முதல் அதிலிருக்கும் அற்புதங்களைக் கண்டெடுப்பதில் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வருடம் ஸாண்டா தாத்தா பேரில் எனக்கு ஒரு SB-600 Speedlite Flash-ம் கிடைத்திருக்கிறது. அந்த ஆர்வத்தில் பல நாட்களாக செயல்படாமல் இருந்த என்னுடைய Photoblog-ஐயும் நேற்றுதான் தூசி தட்டி, வேறு சட்டை போட்டு எழுப்பியிருக்கிறேன். இந்த வருடம் கோடை விடுமுறையின்போது அமெரிக்காவின் வட டக்கோட்டா, தென் டக்கோட்டா, வயோமிங், மொண்டானா மாநிலங்களுக்குச் சென்றிருந்தோம். அந்த விடுமுறையின்போது பல நல்ல படங்களை எடுக்க முடிந்தது. அவற்றில் ஒன்றைத்தான் இங்கே எனக்குப் பிடித்ததாகத் தந்திருக்கிறேன். இதன் பெரிய வடிவத்தை என் புகைப்படப் பதிவில் இட்டிருக்கிறேன்.
இந்தப்பறவை அமெரிக்க வழுக்கைக்கழுகு (American Bald Eagle). இது அமெரிக்காவின் தேசியப் பறவை. இதன் எண்ணிக்கை மிகக் குறைந்துபோய் இது இனமழியும் நிலையில் இருந்தது. சட்டம் மற்றும் விழிப்புணர்வின் உதவியுடன் இதன் எண்ணிக்கை இப்பொழுது வளர்ந்திருக்கிறது. இன்னும் இது “பாதுகாப்பற்ற விலங்கினமாகத்தான்” கருதப்படுகிறது. ஒரு புறம் சாந்தமும் மறுபுறம் கம்பீரமும் தொனிக்கும் அற்புதமான கண்கள்.
* * *
இந்தப் படம் தென் டக்கோட்டா மாநில மவுண்ட் ரஷ்மோரில் எடுத்தது. இது பழக்கப்படுத்தப்பட்ட பறவைதான். என்றாலும் காட்சியின் போது கிடைக்கும் இரண்டு நிமிடந்தான் பறக்க முடியும் என்பதாலும், பார்வையாளர்கள் எழுப்பும் பேரிரைச்சலாலும் மிகுந்த பரபரப்பாக எந்த ஒரு இடத்திலும் உட்காராமல் பறந்துகொண்டே இருந்ததால் படமெடுப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சக்தி வாய்ந்த 70-300 ஜூம் லென்ஸின் முழுவீச்சில் எடுத்திருப்பதால் படத்தில் விழைந்ததுபோல பின்புலத்தை மங்கலாக்கி முழுத் தெளிவையும் கழுகின்மீதே காட்ட முடிந்தது குறித்து எனக்கு முழுத் திருப்தி.
இனி தொடருக்கு்:
எப்பா… மிரட்டுது!! உங்களுக்கு அசாத்திய பொறுமை
படத்தை பெரிய அளவில் பார்க்கும் போது அந்த கேமிராவின் வீச்சு தெரிகிறது,அதுவும் அதன்(கழுகின்) கண்கள் செம சூப்பர்.
என்னை கூப்பிட்டதற்கு நன்றி.இனிமேல் தான் தேடனும் ஏதாவது தேறுகிறதா என்று.
3.2 MP என்ன பெரிதாக வந்துவிடபோகிறது? என்னுடைய கேமிரா பற்றி சொன்னேன். 🙂
http://madavillagam.blogspot.com/2008/01/blog-post.html
இங்கு போட்டிருக்கேன்.
பாபாவும் நம்மளை கூப்பிட்டு இருக்காரு. இன்னும் ரெண்டு மூணு நாளிலில் போட்டுடறேன். ஆனா நீங்க போட்டு இருக்கும் படத்தைப் பார்த்தா ரொம்ப பயமாத்தான் இருக்கு. நம்ம படமெல்லாம் ரொம்ப சாதாரணமாத்தானிருக்கும். பரவாயில்லையா?
Awesome capture!!
Sema professional quality picture!
எந்தன் பதிவு இங்கே!
🙂
Ooops!
wrong link!
The correct link is
this
🙂
கழுகிடம் எனக்கொரு பிடித்தம் உண்டு. அதன் கம்பீரமா இல்லை கூர்மையான பார்வையா எது என்று தெரியாமல் ஒரு ஈர்ப்பு உண்டு. அந்த பார்வை நீங்கள் எடுத்திருக்கும் புகைப்படத்திலும் வந்திருக்கிறது. அருமை.
உங்களுடைய அடுத்த பதிவு IE இல் திறக்க முடியவில்லை. ஏனென்று பார்க்க முடியுமா?
சி.வி.ஆர் – நன்றி!
பத்மா – இதே கழுகை நான் எடுத்த வேறு சில படங்களில் மிகச் சாந்தமான முகம் தென்படுகிறது. ஒரு வகையில் கம்பீரமான பல விஷயங்கள் அமைதியைக் கொண்டிருப்பத்தைப் பார்க்க முடிகிறது.
IE ஐச் சோதித்துப் பார்க்கிறேன். என்னிடம் ஒரே ஒரு கணினியில்தான் அது உண்டு; இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் ஆப்பிள் என்பதால் ஐ.எ மறந்தே போய்விட்டது.
உங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு என் நிழற்படப் பதிவை போட்டுவிட்டேன். அழைத்ததிற்கு நன்றி.