நடிகை நிகோல் கிட்மனின் நீச்சலுடை இந்தியாவில் ஏழைக்குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறது.

சுவீடன் நாட்டு நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை அங்கே ஏலம் விடப்பட்டது. கிடைத்த தொகை 16,200 ஸ்வீடிஷ் க்ரோனர்கள் (கிட்டத்தட்ட $3,270). இதை வைத்துக்கொண்டு ஒன்பது பசுமாடுகள் வாங்கி இந்தியாவில் ஏழைக்குடும்பங்களுக்குத் தானமாக வழங்கப்படவிருக்கிறது.

தவறு செய்துவிட்டார்கள். இதே நீச்சலுடையை இந்தியாவில் ஏலம் விட்டிருந்தால் கட்டாயம் இதைவிட அதிக பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு இன்னும் நிறைய பசுமாடுகளை வாங்கி, இன்னும் நிறைய குடும்பங்களைக் காப்பாறியிருக்கலாம். (அந்நியச் செலாவணி நாணய மாற்றில்கூட கொஞ்சம் பணம் மிச்சம் பிடித்திருக்கமுடியும்).

அம்மணி நீச்சலில் ரொம்ப ஆர்வமுள்ளவராம் (படத்துக்குக் கீழ அப்படித்தான் சொல்லியிருக்காங்க). இன்னும் நிறைய நீஞ்சி, நெறய துணியைத் தொலைச்சு இந்தியாவைக் காப்பாற்ற ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.