தி ஹிந்து நாளிதழ் நிறுவனம் சிறுபான்மை பங்குகளை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு விற்கவிருப்பதாக மிண்ட் தெரிவிக்கிறது (ஹிந்துஸ்தான் டைம்ஸ் – வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இரண்டும் இணைந்து மிண்ட்-டை வழங்குகின்றன.) டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னை வருகை, டெக்கான் க்ரானிக்கிளின் அதிகரித்து வரும் போட்டி இரண்டையும் சமாளிக்க ஹிந்து ஆஸ்திரேலிய நிறுவனத்தின் உதவியை நாடுகிறது. ஃபேர்ஃபாக்ஸ் மீடியா ஆஸ்திரேலியாவின் மிகப் புகழ் பெற்ற ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழை நடத்தும் நிறுவனம்.

இந்தியாவில் நாளிதழ்களின் சமீபத்திய சந்தை நிலவரத்தைப் பற்றிய தகவல்களைத் தேடினேன், நம்பகமான, புதிய தகவல் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

இந்தக்கூட்டு நிறைவேறினால் இந்தியாவில் நாளிதழ்களின் போக்கில் பெரும் மாறுதல்கள் வரும் என்று தோன்றுகிறது. உலகின் பல (ஆங்கிலம் பேசும்) நாடுகளில் நாளிதழ்கள் கடுமையான போட்டியையும் சந்தையையும் இழந்து வரும் நேரத்தில் இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக நாளிதழ்களின் சந்தை வளர்ந்து வருகிறது. பல இராட்சத செய்தி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய இடைவெளிக்குக் காத்துக் கொண்டிருக்கிறன.