adhami_srinivasan.jpg இரு நாட்களுக்கு முன்னர் டொராண்டோ இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல்விருது விழா குறித்து எழுதியிருந்தேன். இந்த வருடம் பல புதிய விருதுகள் துவக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஒன்று தமிழ்க் கணிமைக்கான பங்களிப்பிற்கான சுந்தர ராமசாமி விருது. இவ்விருதிற்கான பணம் காலச்சுவடு அறக்கட்டளையால் வழங்கப்பட்டிருக்கிறது. இலக்கியத் தோட்ட விருதுகளில் பணம் தருபவர்களின் எந்தவிதத் தலையீடும் கிடையாது. விருது பெறுபவரைத் தீர்மானிக்கும் முழுப்பொறுப்பும் இலக்கியத் தோட்டத்தையே சேரும். அவர்களும் சுயேச்சையான நடுவர் குழுவை அமைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். விருதைத் தீர்மானித்தவுடன், அதை அறிவிப்பது மாத்திரமே இ.தோ நிர்வகிக்கிறது.

தமிழ்க் கணிமைக்கென இதுவரை எந்த விருதும் கிடையாது. எனவே இந்த இலக்கியத் தோட்ட விருது மிகவும் முக்கியமானது. இந்த முதலாவது விருதைப் பெற திரு. ஸ்ரீநிவாஸன் முற்றிலும் தகுதியானவர். விழாவில் அவருடன் அதிகம் பேச நேரம் கிடைக்கவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் பொறுமையாக உட்கார்ந்து CP/M-80, DOS போன்ற பழைய இயக்குதளங்களில் தமிழ் எழுதிய அனுபவங்களைக் கேட்க வேண்டும். இங்கே அவருக்கு வாசிக்கப்பட்ட பாராட்டு பத்திரம்;

Sundara Ramasamy Memorial Award for Contributions to Information Technology in Tamil

Toronto Literary Garden is pleased to announce the first Sundara Ramasamy Memorial Award for Contributions to Information Technology in Tamil to Dr. K. Srinivasan of Quebec, Canada. The award carries a cash prize of 1,000 Canadian Dollars and a plaque and will be presented in a function at the University of Toronto, on the 3rd June 2007, concurrent with the Tamil Literary Garden’s annual ‘iyal virudhu’ presentation.

Dr. Srinivasan was born in New Delhi, India in 1943 and had his early education there. Srinivasan studied Tamil in school from eminent Tamil writer Prof. Indra Parthasarathy. He received his Bachelor of Engineering degree in Electrical Engineering from the Indian Institute of Science, Bangalore and PhD from University of Waterloo, Canada. He has been living in Canada since 1965.

Srinivasan created the first ever Indic language font in Tamil in one of oldest operating systems, CPM-80. He then created the first Indian True Type Font and a transliteration based editor, Adhami in Microsoft DOS. This pioneering transliteration scheme for typing in Tamil using Roman keyboard is still the most popular scheme (with progressive modifications and standardization). As the Operating Systems evolve, Srinivasan continues to create modern Tamil editing programs. In the true community spirit, Dr. Srinivasan has always been distributing his fonts and editors free of cost. Dr. Srinivasan has also made significant contributions to Tamil font encoding and transliteration schemes through his scholarly contributions in Tamil Internet Conferences.

It is worth noting that Dr. Srinivasan is also the first person to create a True type font for the Inuktitut, the language of the indigenous people of Nunavut and Inuvik region of Quebec. “Modern technology is the savior of minority languages and cultures” opines Dr. Srinivasan. “It was a single language domination in Radio on Indian airwaves – before cassette tape recorders enabled people record, redistribute and preserve their spoken word. Revolutions in information technology empower people similarly”.

Toronto Tamil Literary Garden acknowledges trailblazing contributions of Dr. Srinivasan in Tamil Computing and is proud to honour him with the first su.rA Memorial Award.

டொராண்டோ இலக்கியத் தோட்டத்தின் முதலாவது தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி நினைவு விருது கனடாவின், க்யூபெக் மாநிலத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்ரீநிவாசனுக்கு வழங்கப்படுகிறது. ஜூன் 3, 2007 அன்று டொராண்டோ பல்கலைக்கழத்தில் நடைபெறும் இயல்விருது விழாவில் ஆயிரம் கனேடிய டாலர்களும், விருதுப்பட்டயமும் திரு ஸ்ரீநிவாசனுக்கு வழங்கப்படவிருக்கிறன.

முனைவர் ஸ்ரீநிவாசன் 1943 ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்தார். புது தில்லியில் தமிழ் வழி ஆரம்பக் கல்வியில், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் திரு. இந்திரா பார்த்தசாரதியிடம் தமிழ் பயின்றிருக்கிறார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் பொறியியல் இளையர் பட்டம் பெற்ற ஸ்ரீநிவாசன், கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழத்தில் மின்னணுவியல் ஆராய்சிக்காக முனைவர் பட்டம் பெற்றார். 1965 ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவில் வசித்து வருகிறார்.

ஸ்ரீநிவாசன் இந்திய மொழிகளிலேயே முதலாவதான தமிழ் எழுத்துருவை சிபிஎம்-80 இயக்கு தளத்திற்காக வடிவமைத்தார். தொடர்ந்து மைக்ரோஸாஃப்ட் டாஸ் இயக்குதளத்திற்காக, மீண்டும் இந்திய மொழிகளில் முதலாவதான ட்ரூடைப் எழுத்துருவையும், ரோமன் விசைப்பலகை வழியே தமிழை உள்ளீடு செய்யும் ஆதமி என்ற நிரலியையும் உருவாக்கினார். அவர் வடிவமைத்த முன்னோடி ஆங்கிலவழி தமிழ் உள்ளீட்டு முறை இன்றளவும் இணையத் தகவல்பரிமாற்றங்களுக்கு (சிற்சில மாறுதல்களுடனும், தகுதரமாக்கலுடனும்) தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீநிவாசன் நவீன கணினிகளுக்கான தமிழ் உள்ளீட்டு நிரலிகளைத் தொடர்ந்தும் உருவாக்கிவருகிறார். பரந்துபட்ட சமூகப் பயன்பாட்டுக்கென அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து இலவசமாகவே அளித்து வருகிறார். முனைவர் ஸ்ரீநிவாசன், தமிழ் எழுத்துத் தரக்குறியீடு, தமிழ் உள்ளீட்டு வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழ் இணைய மாநாடுகள் வழியே பங்களித்திருக்கிறார்.

கனடாவின் நுனாவட் மற்றும் இனுவிக் பிரதேசப் பூர்வகுடிகளின் எழுத்துக்களையும் முதன்முதலாக கணினிக்கென வடிவமைத்த பெருமை ஸ்ரீநிவாசனைச் சேரும். “நவீன நுட்பம் சிறுபான்மை மொழிகளையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்க உதவுகிறது” என்று சொல்லும் ஸ்ரீநிவாஸன், “இந்திய வானொலிகளில் ஒருக்காலத்தில் ஒற்றை மொழி ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. ஒலிநாடாவில் பதிவு செய்யும் வழிமுறை கிடைத்தவுடன் இது மாறியது. சிறுபான்மை மொழிகளைப் பதிவு செய்ய, பரவலாகப் பகிர்ந்துகொள்ள, சேமிக்க அனைவருக்கும் ஒரு வழி கிடைத்தது. தகவல் நுட்பப் புரட்சி அதைப் போல சிறுபான்மை மக்களுக்கு சக்தியளிக்கிறது” என்று நம்புகிறார்.

திரு ஸ்ரீநிவாசனின் தமிழ்க் கணிமைக்கான முன்னொடி பங்களிப்பைப் பாராட்டும் டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் முதலாவது சுந்தர ராமசாமி விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகிறது.