• Apple Leopard -1

    by  • November 20, 2007 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

    {எழுதத்துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன, 75% எழுதி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஒருவழியாக இன்று வலையேற்றம்}

    leopard_1.jpg

    Click on the image to enlarge

    சில காலம் முன்பு மைக்ரோஸாஃப்ட் விஸ்டாவை வெளியிட்டபொழுது நான் எழுதிய விமர்சனம் இங்கே கிடைக்கிறது:பகுதி 1, பகுதி 2, பகுதி 3

    சென்றவாரம் ஆப்பிள் தனது அடுத்த இயக்குதளத்தை வெளியிட்டது. பெரும்பூனைகளின் வரிசையில் இந்தச் சிறுத்தை அடுத்த வெளியீடு. (Puma, Tiger, Leopard). மைக்ரோஸாஃப்டைப் போலில்லாமல் ஆப்பிள் விரைவாகவே தனது அடுத்தடுத்த இயக்குதளங்களை வெளியிடுகிறது. (நான் தனிப்பட்ட பயன்பாடுகளுக்கு வீட்டில் லினக்ஸைப் பயன்படுத்துபவன். அலுவகத்தில் கட்டாயத்தின் காரணமாக மைக்ரோஸாப்ஃடைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவன். இப்பொழுது அலுவலில் ஆப்பிள் மாக்புக்-ப்ரோவைப் பயன்படுத்திவருகிறேன். எப்பொழுதாவது அத்தியாவசியம் ஏற்பட்டால் ஆப்பிளிலிருந்தே VMWare Fusion பயன்படுத்திவருகிறேன். ஆப்பிளுக்கு மாற விஸ்டா ஒரு முக்கிய காரணம். விஸ்டாவிற்கு எழுதியதைப் போலவே சிறுத்தைக்கும் எழுத உத்தேசம்.

    இதை நிறுவி சோதித்த கணினியின் அமைப்பு:

    MacBookPro 3.1
    Processor : Intel Core 2 Duo 2.2 GHz
    Memory : 2 GB
    Hard dirve : Fujitsu 160 GB SATA (Partitioned 100 GB for Mac, 60 GB for Vista, through BootCamp)
    Apple Superdrive dual layer DVD Burner
    Graphics: nVidia Geforce 8600, with 128 MB VRAM
    Apple Airport Wireless
    Firewire, USB, Bluetooth

    நிறுவல் :

    இந்தக் கணினியில் ஏற்கனவே ஆப்பிள் டைகர் இயக்குதளம் இருந்தது. சிறுத்தை (வர்த்தகச் சின்னம் என்ற வகையில் லெப்பட் என்றுதான் எழுதவேண்டும் என்றாலும் வசதிகருதி சிறுத்தை என்றே எழுதுகிறேன்) அடர்வட்டை கணினியில் போட்டு சிறுத்தையை நிறுவ உத்தேசம் என்று பதில் சொல்ல கணினியில் அடுத்தமுறை அடர்வட்டு மூலம் துவக்கத் தேவையான சிறு மாற்றத்தைச் செய்துவிட்டு தானாகத் துவங்கியது. முதலில் அடர்வட்டு பிழைகள் ஏதுமில்லாமல் சரியாக இருக்கிறதா என்று சோதித்தது (இதற்கு பத்து நிமிடங்களுக்கு மேலாக நேரம் பிடித்தது). பின்னர் இரண்டு மூன்று சாதாரண கேள்விகளைக் கேட்டது. இவற்றில் முக்கியமானது எப்படி நிறுவ வேண்டும் என்பது.

    1. முழுக்க காலி செய்துவிட்டு கணினியில் புதிதாகச் சிறுத்தையைப் போடுவது (தரவுகள் எல்லாம் அழிந்துபோகும்)
    2. பழையவற்றை ஒரு பொதியாகச் சேமித்துவிட்டு புலியை நீக்கிவிட்டு சிறுத்தையைப் போடுவது
    3. பழைய புலியின் மேலேயே சிறுத்தையைப் போடுவது. (கொஞ்சம் புலி சமாச்சாரங்கள் கணினியில் தேங்கியிருக்கூடும்).

    நான் இரண்டாவது முறையைத் தேர்ந்தெடுத்தேன். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்குப் பிறகு நிறுவல் வேலை முடிந்துவிட்டது என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு கணினி மறுதுவக்கம் செய்தது. இப்பொழுது எந்தப் பிரச்சினையும் இன்றி புது இயக்குதளம் தயாராகிவிட்டது. விஸ்டாவின் நிறுவல் கூட மைக்ரோஸாஃப்டின் பழைய இயக்குதளங்களைவிட மிகச் சுலபமாகத்தான் இருந்தது. ஆனால் சிறுத்தை அதைவிட மிகச்சுலபமாகத் தயாராகிவிட்டது.

    பொருளாதாரம்

    விஸ்டாவின் இயக்குதளங்கள் பின்வரும் அமைப்புகளில் கிடைக்கின்றன.

    Vista Home
    Vista Home Premium
    Vista Business
    Vista Business Premium
    Vista Ultimate

    ஆப்பிளில் இவ்வளவு வகையெல்லாம் கிடையாது. லெப்பார்ட் (OSX 10.5) என்று ஒன்றே ஒன்றுதான். இதை வெளியிடும்போது ஸ்டீவ் ஜாப் எல்லோருக்கும் Leopard Ultimate தான் என்று நக்கலடித்தார். விஸ்டா அல்டிமேட்டின் விலை $400; சிறுத்தை 125 டாலர்கள்தான். அதிலும் குடும்ப லைசென்ஸ் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். அதில் $195 கொடுத்து வாங்கினால் ஐந்து கணினிகளில் போட்டுக்கொள்ள முடியும். (எங்கள் ஆய்வகத்தில் எல்லோரும் ஒரு குடும்பம்தான்).

    தொடரும்…

    One Response to Apple Leopard -1

    1. Pingback:   Apple Leopard -2 by உள்ளும் புறமும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *