Archive for November, 2007
Apple Leopard -2
இதன் முதல் பாகம்
புதுமைகள்
300 க்கும் மேற்பட்ட புதிய, முன்னேற்ற சமாச்சாரங்களை உள்ளடக்கியது என்று ஆப்பிள் விளம்பரித்தது. இதில் சாரளத்தின் மூலை கூர்மையாக இருப்பதற்குப் பதிலாக மழுங்கலாக இருப்பதெல்லாம் புதுமை என்பதைக் காற்றில் விட்டுவிட்டாலும்கூட கொஞ்சம் புதுமையான விஷயங்கள் நிச்சயம் உண்டு. தோற்றத்திலும் அமைப்பிலும் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார்கள். இவற்றில் சில நன்றாக இருக்கின்றன, சில அபத்தமாக இருக்கின்றன. நல்ல விஷயத்தில் மின்னஞ்சல் பொதியின் குறும்படத் தோற்றம், அபத்த விஷயத்தில் டாக் (Dock)-ன் முப்பரிமாண தோற்றம் போன்றவற்றைச் சொல்லலாம். [...]
Apple Leopard -1
{எழுதத்துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன, 75% எழுதி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஒருவழியாக இன்று வலையேற்றம்}
Click on the image to enlarge
சில காலம் முன்பு மைக்ரோஸாஃப்ட் விஸ்டாவை வெளியிட்டபொழுது நான் எழுதிய விமர்சனம் இங்கே கிடைக்கிறது:பகுதி 1, பகுதி 2, பகுதி 3
சென்றவாரம் ஆப்பிள் தனது அடுத்த இயக்குதளத்தை வெளியிட்டது. பெரும்பூனைகளின் வரிசையில் இந்தச் சிறுத்தை அடுத்த வெளியீடு. (Puma, Tiger, Leopard). மைக்ரோஸாஃப்டைப் போலில்லாமல் ஆப்பிள் விரைவாகவே தனது அடுத்தடுத்த இயக்குதளங்களை வெளியிடுகிறது. [...]
