Archive for October, 2007

அல் கோர் மற்றும் அரசிடை பருவமாறுபாட்டுக் குழுவுக்கு சமாதான நோபெல் பரிசு

சற்றும் முன் வெளியான செய்தியில் அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் (சர்வதேச) அரசிடை பருவமாறுபாட்டுக் குழுவுடன் 2007 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபெல் பரிசைப் பகிரிந்து கொள்கிறார்.
மனித சமுதாயத்தால் துரிதப்படுத்தப்படும் உலகளாவிய பருவநிலை மாறுபாடு (சூடேற்றம்) குறித்த விழிப்புணர்வைப் பரப்பியதற்காக இந்த நோபெல் பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்த என் கருத்துக்களை வரும் நாட்களில் எழுத உத்தேசம்.
வீரமுள்ள ஆண்மகன் போர்க்களத்தில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்; தோற்றோடிய கோழை சமாதானம் பேசி பரிசில் [...]


2007 நோபெல் பரிசுகள்

எல்லோரும் சிவாஜி பற்றி மும்முரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில் கையில் சரக்கில்லாமல் காணமல் போன அதே நான் தான். யாரும் கண்டுகொள்ளாத வருடாந்திர விஷயம் வந்திருப்பதால் கொஞ்சம் எழுதலாமே என்று….
* * *
இந்த வருடத்திற்கான மருத்துவம்/உடற்கூறியல், இயற்பியல் மற்றும் வேதியியல் நோபெல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த வருடம் இந்த மூன்று துறைகளிலும் இந்த வருடம் மிக சுவாரசியமான கண்டுபிடிப்புகள் கவனம் பெற்றிருக்கின்றன. கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் இவை ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன்.