Condoms for your mobile phone

cell_condom.jpgஆணுறைகளுக்கு ஆயிரம் பயன்கள் உண்டு. அவற்றுடன் கூட இது புதிதாக.

செல்பேசிகள் நீரில் விழுந்து செயலிழந்து போகின்றன. (என்னுடைய நண்பன் ஒருவன் புத்தம் புது செல்பேசியை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு டூபாத் ரூம் போக, எல்லாவற்றையும் முடித்துவிட்டு கையை எட்டி தண்ணீர் பாய்ச்ச முயன்றபொழுது சட்டையிலிருந்த போன் உள்ளே விழ, அதே நொடியில் அவன் கைப்பிடியை இயக்க…) இன்னும் கடற்கரையில் மணல் தரையில் செல்பேசிகள் விழுந்து பொத்தான்களுக்கு இடையில் மண் புகுந்து செயலிழந்து போகின்றன. இதுபோல செல்பேசியை சரியாகப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவற்களுக்காக இந்த செல்பேசியுறைகள் வந்திருக்கின்றன.

கொஞ்சம் நாட்களுக்கு முன் என் நண்பன் ஒருவன் ஆப்பிரிக்கக் கரையோரங்களில் கடலில் சிப்பியெடுப்பது தடை செய்யப்பட்ட இடங்களில் தடையை மீறி உள்ளே குதிக்கும்பொழுது கடற்கரையில் இருக்கும் கையாட்கள் செல்பேசியில் ஒருவரி செய்தி அனுப்புவார்களாம். ஆணுறை இழுத்துக் கட்டப்பட்ட செல்பேசியில் நீர் உள்ளே புகாமல் செய்தியைப் படித்துவிட்டு போலீஸ் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் கரையேறிவிடுவார்களாம்.

இப்பொழுது திருட்டுச் சிப்பியெடுப்ப்வர்களுக்கு மாத்திரமல்லாது அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

:)))))))))) நல்ல தகவல்…!!!!!

Leave a comment

(required)

(required)