• Archive for May, 2007

    இந்தியன் எக்ஸ்பிரஸ் : இளையராஜா பேட்டி

    by  • May 31, 2007 • இசை • 2 Comments

    இன்றைய NewIndPress -ல் இளையராஜாவின் பேட்டி வெளியாகியிருக்கிறது. இப்படியாகத் தலையுமில்லாமல் வாலுமில்லாமல் நோக்கமும் இல்லாமல் தெளிவுமில்லாமல் ஏன்தான் பேட்டியெடுத்துத் தொலைகிறார்களோ என்று தெரியவில்லை. அச்சுப்பதிப்பில் இது எப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை. முப்பெத்தெட்டாம் பக்கத்து மூலை கணக்காக ஏதாவது வரிவிளம்பரங்களுக்கிடையே மிஞ்சிப்போன வெற்றிடத்தை நிரப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். * * * சீனி கம் பாடல்கள் கம்போஸிங்க் பற்றி நேரம் கிடைக்கையில் கொஞ்சம் எழுத வேண்டும்.

    Read more →

    Discovery Channel : Daily Planet : India Week

    by  • May 30, 2007 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 0 Comments

    நம்மூர் சன், ராஜ் வகையறாக்களில் தங்கச்சி வாரம், ஓர்ப்படியாள் வாரம், கத்தரிக்காய் வாரம் என்று வருவது போல (டிஸ்கவரி சேனல் கனடாவில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான) டெய்லி ப்ளானெட் இந்த வாரம் முழுவது இந்தியாவைப் பற்றியது. திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. நேற்றைய நிகழ்ச்சியில் ஜெய்ப்பூர் கால்கள் தயாரிக்கப்படும் விபரம் குறித்து மிக நல்ல பகுதி ஒன்று வந்தது. அதற்கு முன்னால் பாடல்பெற்ற மும்பை டப்பாவாலாக்களைப் பற்றிய பகுதி (ஆகக் கூடி இரண்டு நாட்களில் [...]

    Read more →

    அடிமை ஒழிப்பு : விளம்பரம்

    by  • May 30, 2007 • சமூகம், விளம்பரம் • 3 Comments

    சமீபத்தில் பார்த்த அற்புதமான விளம்பரங்களில் ஒன்று. பிரேசில் நாட்டில் அடிமை ஒழிப்புக்காகப் பாடுபடும் தன்னார்வக் குழு ஒன்றினால் வெளியிடப்பட்டது. விரியும் புத்தகமும் உடையும் விலங்கும் பல விஷயங்களைச் சொல்லாமால் சொல்கின்றன. (பெரிதாகப் பார்க்க படத்தில் சொடுக்கவும்)

    Read more →

    பேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும

    by  • May 25, 2007 • அறிவிப்புகள், இலக்கியம் • 0 Comments

    புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில் காலம் சஞ்சிகையின் பேராசிரியன் பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும் தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம் சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்) இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர், டொராண்டோ, ஜூன் 9 2007 மாலை 5;.30 சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும் சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில் மாலை 3 மணி [...]

    Read more →

    கணினியும் இசையும் – 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்

    by  • May 24, 2007 • Uncategorized, இசை, கணினியும்-இசையும் • 5 Comments

    சென்ற பகுதியில் ஒலிநாடாவிலிருந்து எப்படி கணினிக்கு மாற்றுதல் என்று பார்த்தோம். ஒலிநாடாவை கணினியில் பதிவு செய்யும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். தொடரின் இந்தப் பகுதியில் அவற்றை எப்படித் தனித்தனி பாடல்களாக வெட்டியெடுக்கலாம் என்பதையும், கோப்புகளை எப்படி எம்பி3 ஆக மாற்றலாம் என்பதையும் பார்க்கலாம்.

    Read more →

    Sue me first, Microsoft

    by  • May 23, 2007 • அறிவியல்/நுட்பம் • 4 Comments

    இல்லாத (சொத்து)உரிமையை நிலைநாட்ட வழக்குபோடமாட்டோம் என்று சொல்கிறது மைக்ரோஸாஃப்ட். இது என்ன அபத்தமான வாக்கியமாக இருக்கிறதே என்று வரும் சிரிப்பை ஒத்திப்போட்டுவிட்டு மேலே படியுங்கள். இது சிரிப்பதற்கான விஷயமில்லை, மிகவும் சிக்கலானது. ஃபார்ச்சூன் சஞ்சிகையின் கடந்த இதழில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் லினக்ஸ் இயக்குதளம் தங்கள் அறியுரிமைகள் பலவற்றை மீறியிருக்கிறது, எனவே எந்த ஒரு லினக்ஸ் பயனர்மீதும், சேவை வழங்குநர்கள்மீதும் தங்களால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயமுறுத்தியது.

    Read more →

    பழையன தொகுப்பும் பிறவும்

    by  • May 20, 2007 • அறிவிப்புகள் • 5 Comments

    என்னுடைய பழைய இடுகைகள் அனைத்தின் தலைப்பும் இங்கே கிடைக்கிறது. வலைப்பதிவு எழுதத் துவங்கி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகப்போகின்றன. எழுதிய சில கருத்துக்கள் இன்றைய என் சிந்தனைக்கு ஒவ்வாதனவாகத் தோன்றினாலும் ஓடி ஒளியும் உத்தேசமில்லை. தமிழ்த்திரையிசையில் ஜாஸ் வடிவம் என்று தலைப்பிட்டு எழுதியவற்றை ஒரே பக்கத்தில் தொகுத்திருக்கிறேன். சிலருக்குப் பயன்படலாம். எழுதும்பொழுது ரியல் ஆடியோ வடிவில் குறைந்த ஒலித்தரத்தில் வெளியிட்டிருந்தவற்றை இப்பொழுது எம்பி3 வடிவில் தந்திருக்கிறேன். என்னுடைய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு குவாண்டம் கணினி என்ற பெயரில் [...]

    Read more →

    பேராசிரியர் பசுபதி பணி ஓய்வு

    by  • May 12, 2007 • அறிவியல்/நுட்பம், கனடா • 0 Comments

    தமிழ் இலக்கியம், இசை கருத்தாடல் குழுக்களில் பங்கேற்பவர்களுக்குப் பேரா. பசுபதியைத் தெரிந்திருக்கும், குறிப்பாக செவ்வியல் இலக்கியக் குழுக்களில். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னால் எங்களில் பலர் செவ்வியல் இலக்கியங்கள், தமிழ் இலக்கணம் போன்றவற்றைக் குறித்து நிறைய கருத்தாடல்களில் ஈடுபட்டிடுக்கிறோம். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உருவான பெரும் இடைவெளிக்குப் பிறகு தமிழ் இலக்கணம் குறித்த பல சந்தேகங்களை பசுபதி தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால் பசுபதி தமிழ்ப் பேராசிரியர் கிடையாது. அவர் தகவல் நுட்பத் துறையில் விற்பன்னர். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் [...]

    Read more →

    திரை (மறைவு) ஊடக அரசியல் – இன்னும் கொஞ்சம்

    by  • May 11, 2007 • சமூகம் • 1 Comment

    ஜெகத் -திரை (மறைவு) அரசியல் நான் – திரை (மறைவு) ஊடக அரசியல் ஜெகத் – வெங்கட்டின் எதிர்வினையை முன்வைத்து ஜெகத் – உங்கள் பதிலுக்கு நன்றி! கொஞ்சம் பெரிதாக எழுதினால் ப்ளாகர் பெட்டி சாப்பிட்டுவிடும் என்பதால் இங்கேயே எழுதுகிறேன். வீட்டில் வார இறுதிக்காக ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் நண்பர், வேலைப்பளு இரண்டுக்கும் இடையில் இப்பொழுது நான் சொல்லவிரும்புவதைத் தெளிவாக எழுதமுடியும் என்று தோன்றவில்லை.

    Read more →