சூரியக் குடும்பம் - பெரியதும் சிறியதும்

solarsystem.jpg

மிக அற்புதமான படம் இது. படத்தில் சொடுக்கினால் பெரிய அளவில் விரியும் (எச்சரிக்கை! பெரிய படம் ஒரு மெகாபைட் அளவுக்கும் அதிகம். திறக்க நிறைய நேரமாகலாம். பெரிய படத்தை மூடிவிட்டி இங்கே திரும்ப வலப்புறம், கீழே இருக்கும் x குறியில் சொடுக்கவும்). சூரியக் குடும்பத்தில் 200 மைல் விட்டத்திற்கு மேற்பட்ட எல்லா கோள்கள், உபகோள்கள் இன்னபிறவற்றை அவற்றின் படங்களைக் கொண்டு அளவு வரிசைப்படி தொகுத்திருக்கிறார்கள்.

இதில் புளூட்டோவைப் பாருங்கள். ஏன் புளூட்டோ ஒரு கோள் இல்லை என்பதற்கான ஆதாரம் எளிதில் விளங்கும்.

மேற்கொண்டு தகவலுக்கு

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

What is a dwarf planet??

வெங்கட், நல்ல படம். என் பையனின் தற்போதைய பித்து என்பதால் இன்று அவன் பள்ளியில் இருந்து வந்த உடன் போனஸ்தான். பாலா கேள்வியைப் பார்த்தால் அடுத்த விக்கி பதிவு நீங்க என்ன எழுதணமுன்னு தெரிஞ்சு போச்சு போல இருக்கே!

பாலா, கொத்ஸ் சொல்லிட்டார் - விடையை விரைவில் விக்கிப்பசங்க பதிவில் காணலாம்.

சுருக்கமாகச் சொல்லனும்னா, குறுங்கோள்கள் சூரியனைச் சுற்ற வேண்டும் (கோள்களைப் போலவே), எந்தக் கோள் ஒன்றுக்கும் உபக்கிரகமாக இருக்கக் கூடாது, கோள வடிவில் இருக்க வேண்டும் (விண்கற்கள் போல கூர்முனை, அம்மிக்குழவி வடிவம் எல்லாம் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது.

மூன்று உபகோளங்கள் இருக்கின்றன; புளூட்டோ (ஐயோ பாவம்), செரஸ் மற்றும் ஈரிஸ்.

பிற பின்னர்.

இ.கொ. பையன் எந்த வகுப்பில்?

கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் $25 சூரியக்குடும்பம் மாதிர் ஒன்று (நல்ல விளக்கப் புத்தகத்தின் கூட) இரண்டு டாலருக்குக் கிடைத்தது. கடையில் மீதமிருந்த நாலு பிரதிகளையும் வாங்கி ஒன்று நம்ம வால்களுக்குக் கொடுத்துவிட்டு மற்றவற்றை நண்பர்கள் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். மூன்று நாட்களுக்கு வைத்துக் கொண்டு விளையாடினார்கள். அடுத்தது எங்கோ போய் யாரிடமோ கேட்டுக் கொண்டு வந்து நிசமான விண்கல் கடையில் விற்கிறதாம் (உண்மைதான், ஆனால் என் சம்பளம் போதாது) அதுல ஒன்னு வாங்கிக் கொடு என்று படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதைக்கு Rainforest பித்து பிடித்து அலைகிறார்கள். :)

ஐந்தரை வயது - கிண்டர்கார்டன். ஸ்பேஸ் மற்றும் புவியியல்தான் இப்போதைக்கு பேச்சு மூச்சு எல்லாம். படிக்கு புத்தகங்கள் எல்லாமே
இவை பற்றிதான். 100 டாலர் புவியுருண்டைதான் இந்த கிறுத்துமஸ் பரிசு! சனி கிரகத்துக்கு குறைந்தபட்சம் 56 நிலாக்களாமே. அவர்தான் சொல்லிக் குடுத்தார். :)

விக்கிப்பசங்களா… சூப்பர் :)

ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டு போகும் போது மலைப்பாக இருக்கிறது.
நல்ல படம்.
மகனுக்கு அனுப்பனும்.
நன்றி

உங்கள் பெயரை சிங்கை நாதன்,பிளாக்கர் மீட்டிங்கில் சொல்லியிருந்தார்.இன்று உங்கள் பதிவை பார்த்துவிட்டேன்.

உங்கள் பெயரும் போன சனிக்கிழமை நடந்த பிளாக்கர் மீட்டிங்கில் ஒலித்தது.
ஒலித்தவர்- சிங்கைநாதன்.

குமார் - நம்மைப்பற்றியும் யாரோ ஒருவர் பேசினாரா? :)

அது வேறு யாரும் அல்ல,சிங்கை நாதன் என்பவர்.
பல பதிவுகளை படித்து தான் ஒன்றும் எழுதாமல் இருப்பவர்.ஏன் எழுதுவதில்லை என்று கேட்ட போது “என்ன எழுதுவது?” என்று என்னிடம் திருப்பிக்கேட்டார்.
நான் திரு ஜெயபாரதனின் வின்வெளிக் கட்டுரைகளை பிரமாதப்படுத்தி சொன்ன போது அவர் உங்கள் பெயரை முன்மொழிந்தார்.
நான் உங்கள் பக்கத்துக்கு முன்பே வந்திருந்தாலும் அப்போது சரியாக ஞாபகம் இல்லாமல் இருந்தேன்.
நடந்த 2 நாட்களில் உங்கள் பதிவு வந்தவுடன் இங்கு குறிப்பிட்டேன்.

Leave a comment

(required)

(required)