ராமானுஜனின் ‘கடைசி தேற்றம்’ நிரூபிக்கப்பட்டது
by வெங்கட் • March 4, 2007 • அறிவியல்/நுட்பம் • 5 Comments
காசநோயின் பிடியில் மரணப்படுக்கையில் இருக்கும்பொழுது ராமானுஜன் பேராசிரியர் ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் (இதுவே கணிதம் குறித்து ராமானுஜன் எழுதிய இறுதிக் கடிதம்) ஒரு புதுவகையான எண் தொடர்களைப் பற்றி எழுதியிருந்தார். யக்கோபி தீட்டா பங்ஷன் (Jacobi Theta Function) என்று சொல்லப்படும் இன்னொரு எண்தொடரைப் போலவே இருக்கும் இந்தத் தொடர்கள் முதன்முறையாக ராமானுஜனால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து அவர் எழுதிய கடிதத்தின் முதல் சில பக்கங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால், பின்பகுதியில் மாக்-தீட்டா பங்ஷன் (Mock Theta [...]
Read more →