சீனாவில் என் வலைப்பதிவு தடை
வெள்ளிக்கிழமையும் அதுவுமா என் நண்பன் ஒருத்தன் ஒரு நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறான். சீனாவில் என் தளம் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். காரணம் - யாருக்குத் தெரியும்? ஒரே ஒரு தடவை கம்யூனிஸமும் கத்தோலிக்கமும் கை கோர்த்துக் கொள்கின்றன என்று எழுதியிருந்தேன். ஒரு வேளை அதை யாராவது படித்துச் சொல்லிவிட்டார்களோ? (படத்தில் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்). சிரிப்புத்தான் வருகிறது.
உங்களுக்கும் இந்தத் தடை இருக்கிறதா என்று http://greatfirewallofchina.org/ போய் பார்த்துக் கொள்ளுங்கள்.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
நான் 7 வேறு வேறு URL கொடுத்துப் பார்த்தேன். எல்லாமே blocked என்று தான் வந்தன. இது நம்பத்தகுந்த வலைப்பதிவு தானா?
வாழ்த்துகள் வெங்கட்
ப்ளாக்ஸ்பாட், வோர்ட்பிரெஸ்.காம் தளங்கள் மொத்தமே தடுக்கப்படும் என்று படித்த ஞாபகம்
என் வலைப்பதிவையும் தடை செய்து விட்டார்கள்…. :-)) கிட்டதட்ட நான் கொடுத்த எல்லா url ம் தடை செய்யப்பட்டுள்ளன http://english.people.com.cn ஐ தவிர :-))))
The success of your site can be directly measured by the number of firewalls that block it
Congratulations !

Dude, the great wall site seems like a fake site. It says http://www.google.cn is blocked which is not true.