• Archive for March, 2007

    சீனாவில் என் வலைப்பதிவு தடை

    by  • March 30, 2007 • அறிவிப்புகள், நகைச்சுவை • 6 Comments

    வெள்ளிக்கிழமையும் அதுவுமா என் நண்பன் ஒருத்தன் ஒரு நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறான். சீனாவில் என் தளம் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். காரணம் – யாருக்குத் தெரியும்? ஒரே ஒரு தடவை கம்யூனிஸமும் கத்தோலிக்கமும் கை கோர்த்துக் கொள்கின்றன என்று எழுதியிருந்தேன். ஒரு வேளை அதை யாராவது படித்துச் சொல்லிவிட்டார்களோ? (படத்தில் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்). சிரிப்புத்தான் வருகிறது. உங்களுக்கும் இந்தத் தடை இருக்கிறதா என்று http://greatfirewallofchina.org/ போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

    Read more →

    பேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு

    by  • March 26, 2007 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    இன்றைக்கு அலுவலகத்துக்கு வந்தவுடன் என் சீன நண்பன் சொல்லித் தெரியவந்த விஷயம் இது. நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீநிவாஸ வரதனுக்கு இந்த ஆண்டின் ஏபெல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. நோபெல் பரிசுகள் ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் உடற்கூறியல், பொருளியல் மற்றும் சமாதானம் என்ற ஐந்து துறைகளிலும் வழங்கப்படுகின்றன. இதில் கணிதம் கிடையாது; இந்தக் குறையைப் போக்க 2001 ஆம் ஆண்டு நார்வே நாட்டின் அறிவியல் கழகம் புகழ்பெற்ற நார்வீஜிய கணிதவியலாளர் ஹெந்ரிக் ஏபெல் (Henrik [...]

    Read more →

    அறிவியல் கோட்பாட்டின் வளர்நிலைகள்

    by  • March 21, 2007 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    ஒரு முழுமையான அறிவியல் கோட்பாடு எப்படி உருவாகிறது என்பது குறித்த அருமையான விளக்கம் இங்கே கிடைக்கிறது. அவசியம் படிக்கும்படி எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்தக் கட்டுரையின் சாரத்தைத்தான் என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தின் முதல் கட்டுரையான ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’-வில் நானும் கையாண்டிருக்கிறேன். டைஹோ ப்ராஹே காலத்தில் உலகத்தின் மையம் பூமி என்று கருதப்பட்டது (தாலமியின் புவிமையக் கருதுகோள்). ப்ராஹே இதைத் துல்லியமாக வரையறுக்கப் பொறுமையாக கோள்களின் நாளாந்த இடத்தையும் அவற்றின் பாதைகளையும் தொலைநோக்கி கொண்டு அளவிட்டு [...]

    Read more →

    வேசித்தனத்தின் கணிதச் சமன்பாடு

    by  • March 21, 2007 • அறிவியல்/நுட்பம், நகைச்சுவை • 0 Comments

    மனித வரலாற்றில் எல்லா சமூகங்களிலும் காணக்கிடைக்ககூடிய ஒரே விஷயமாக பரத்தமை இருக்கிறது. இந்த பண்பாட்டு சமாச்சாரத்திற்கு சமன்பாடு எழுதினால் எப்படியிருக்கும்? இந்த விஷயம் இன்றைக்குக் காணக்கிடைத்தது. மூன்று பொருளியலாளர்கள் – மரீனா டெல்லா கியூஸ்டா (ஐக்கியக் குடியரசு), மரியா லாரா டி தொமாஸோ (இத்தாலி) மற்றும் ஸ்டெய்னர் ஸ்ட்ரோம் (நார்வே) பொருளாதரக் கோட்பாடுகளின் அடிப்படியில் வேசித்தனத்தை விளக்க முற்படுகிறார்கள். இவர்களது ஆய்வறிக்கையின்படி பரத்தமையின் விலைபொருள் அவர்களது உடல். அது மாத்திரமே விலைபோவதற்குப் போதுமானதல்ல. துய்ப்பவரின் சுகானுபவம், சந்தையில் [...]

    Read more →

    ஐய்யோ பத்திக்கிச்சு : சுடர்

    by  • March 20, 2007 • பொது • 7 Comments

    சன்னாசி ஸார்தான் பத்தவச்சார். 1. உங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா? நியாயமா? நான் உங்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது . என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. காரணம் எதிலுமே பெரிதாக ஒன்றும் சாதித்ததில்லை. நிரந்தரமாக என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒரே ஒரு வரையறைதான் சாத்தியம் என்று நினைக்கிறேன்: எல்லாவற்றிலும் ஆர்வமும் எதிலும் சொல்லிக்கொள்ளத்தக்க அறிவும் இல்லாத ஒரு அற்ப ஜீவன்.

    Read more →

    உலகக் கோப்பையின் அதிவிரைவு ஐம்பது

    by  • March 16, 2007 • விளையாட்டு • 1 Comment

    தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை நாசம் செய்துகொண்டிருக்கிறது. கிப்ஸ் அவுட்டானதற்குப் பிறகு உள்ளே வந்த பௌஷ்ஷர் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருக்கிறார். இது லாராவின் 23 பந்துகள் சாதனையை முறியடிக்கிறது. கடந்த பதினைந்து ஓவர்களில் நான்கு அல்லது ஐந்து பந்துகள்தான் ரன்கள் எடுக்கப்படாமல் வீசப்பட்டிருக்கின்றன. இதுவும் ஒரு சாதனையாக இருக்கலாம்.

    Read more →

    ஆறுபந்துகளிலும் சிக்ஸர்கள்

    by  • March 16, 2007 • விளையாட்டு • 0 Comments

    சற்று முன் நடந்த விஷயம் இது. ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் இது ஒரு சாதனை. தென்னாப்பிரிக்க அணியின் ஹெர்ஷெல் கிப்ஸ் நெதர்லாந்து வீரர் வான் பஞ்ஜியின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்திருக்கிறார். 29.6 van Bunge to Gibbs, SIX, He has done it! One-day record. No one has hit six sixes in a row. GIbbs stands alone in that zone. And the minnow [...]

    Read more →

    LaTeX test

    by  • March 16, 2007 • அறிவிப்புகள் • 2 Comments

    [tex]e^{i\pi}=-1[/tex] [tex] \displaystyle\int_{-\infty}^t\delta(\tau)d\tau = u(t) [/tex] கொஞ்சம் நாட்களாக யோசனை செய்து வைத்திருந்த விஷயம்; வேர்ட்பிரஸ்க்கு லேட்டெக் [tex] \LaTeX [/tex] பொருத்தி கிடைக்கிறது. இதை நம் தளத்தில் நிறுவிப் பார்த்தாலென்ன என்ற ஆசை இருந்தது. இன்றைக்குப் பின் மதியத்தில் எழுதப்போகும் ஒரு விஷயத்திற்கு இது உதவியாக இருக்கும் என்பதால் உடனடியாக முயற்சி செய்து பார்க்கிறேன். அடிக்கடி சமன்பாடுகளெல்லாம் எழுதி உங்களைப் பயமுறுத்தப் போவதில்லை. ஆனால் எப்பொழுதாவது ஒரு முறை தேவைப்பட்டால் இருக்கட்டுமே என்றுதான். அடுத்ததாக [...]

    Read more →

    கிரிக்கெட் உலகக்கோப்பையும் சிறுநாடுகளும்

    by  • March 15, 2007 • கனடா, விளையாட்டு • 8 Comments

    மணிகண்டனின் இந்தப் பதிவைப் பார்த்தபிறகு எழுதத் தோன்றியது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏழெட்டு சோதா அணிகள் இருக்கின்றன. இது ஆட்டத்தின் சுவாரசியத்தைக் குறைக்கிறது என்று சொல்கிறார் மணி. சென்ற உலக்கோப்பையில் அரையிறுதி ஆட்டம் வரைக்கு கென்யா வந்தது என்பதை மனதில் கொண்டால் அவரது ஆதங்கம் எவ்வளவு தேவையற்றது என்பது புரியும். இருக்கிற ஏழெட்டு நாடுகளே விளையாடி தங்களுக்குள்ளே ஒரு கோப்பையைக் கொடுத்துக் கொண்டால் அதற்கு உலகக் கோப்பை என்று பெயரில்லை. (அதுதான் அடிக்கடி சாம்பியன் [...]

    Read more →

    பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம்

    by  • March 5, 2007 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    யுனெஸ்கோ – லோ’ரெல் பரிசு – பலருக்கும் இப்படி ஒரு பரிசு இருப்பதே தெரியாது. அறிவியலில் பெண்களின் பங்கை ஊக்குவிக்க அழகு சாதன நிறுவனமான லோ’ரெல் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து வருடந்தோறும் ஐந்து பரிசுகளை வழங்குகிறது. வழக்கமாக பல அறிவியல் பரிசுகள் பெண்களுக்குக் கிடைப்பதேயில்லை. இதுவரை 516 அறிவியல் நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டிருகின்றன. இவற்றுள் 12 மாத்திரமே பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் 7 மருத்துவ நோபெல் பரிசுகளையும், 3 வேதியியல் பரிசுகளையும் 2 இயற்பியல் பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள். [...]

    Read more →