Archive for February, 2007

உம்மாச்சி செல்ஃபோன்

நான் நிறைய நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்த விஷயம் இது. இங்கே பாட்டு கேட்பதற்காக, படம் பார்ப்பதற்காக செல்பேசிகளை விற்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக கனடாவின் மூன்றாவது பெரிய செல்பேசி நிறுவனமான டெலஸ் செல்பேசிகளில் ஃபோர்னோ படங்களையும் விற்க முடிவெடுத்தது. அதற்கு கொஞ்சம் எதிர்ப்பு வரவே இப்பொழுது ஒத்திப் போட்டிருக்கிறது. பாட்டு, படம், ஃபோர்னோ இவை மூன்றுக்கும் அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகக் கூடிய சமாச்சாரம் ஆத்திகம். இதை இன்னும் செல்பேசிக்காரர்கள் பயன்படுத்தவில்லையே என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.


ஈராக்கிலிருந்து பிரிட்டன் படைகள் வெளியேற்றம்

பிபிஸி தளத்தில் வெளியான இந்தச் செய்தியின்படி இன்றைக்கு டோனி ப்ளேர் ஈராக்கிலிருந்து பிரிட்டனின் படைகள் வெளியேறுவது குறித்த கால அட்டவணையை அறிவிக்கவிருக்கிறார். இன்னும் இது அதிகார்வபூர்வமாக நடக்கவில்லை; எனினும் இதில் அதிகார்வபூர்வ அறிவிப்பு மாத்திரமே மீதமிருக்கிறது என்று நம்புகிறேன். எனவே இந்த அறிவிப்பு வெளியாகிவிட்டதாகவே கொள்ளலாம்.


பெண்களைக் கேவலப்படுத்தும் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை

இன்றைய Business Standard-ன் Devangshu Datta: Centrefolds and chuddies என்ற இந்தக் கருத்தங்கத்தை (OpEd) நண்பர் அபி-யின் ஆங்கில வலைப்பதிவு மூலம் படித்தேன். படித்தவுடன் தோன்றிய எரிச்சல்; What a jerk!
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக ட்ரு கில்பின் ஃபாஸௌட் (Drew Gilpin Faust) நியமிக்கப்பட்டிருப்பதை முன்னிருத்தி தேவங்ஷு தத்தா அபத்தக் களஞ்சியமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சமீபகாலத்தில் ஓரளவுக்கு மதிப்புள்ள எந்த பத்திரிக்கை/சஞ்சிகையிலும் இதுபோன்ற வெறுப்பை உமிழும், அறியாமையைப் பறைசாற்றும் கட்டுரையை நான் வாசிக்கவில்லை. [...]


ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது

2006 ஆம் ஆண்டிற்கான இயல்விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர், நடிகர் ஏ.சி.தாசீசியஸுக்கு 2006 இயல் விருதை வழங்க, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை உண்டாக்கியவர் திரு தாசீசியஸ். அது பலரின் வரவேற்பைப் பெற்றதுடன், நவீன நாடகத்தில் பலரை ஈடுபடவும் வைத்தது.
இதற்கு முன்னர் இயல்விருது பெற்றவர்களின் பட்டியல்
2001 : சுந்தர ராமசாமி [...]


Strapless Evening Gown

சென்ற வாரம் க்ராமி விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விரைவில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விழாக்களில் இசைக்கும் திரைக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவுக்கு விருந்தினர்களின் உடைகளுக்கும் கூட. இதுபோன்ற விழா உடைகளில் முக்கியமான ஒன்று strapless dress என்று சொல்லப்படும் பட்டியில்லா கவுன். கிட்டத்தட்ட நம்மூரில் பெண்டுகள் காவிரி, வாய்க்கால், ஏரி, குளம் இன்னபிற நீர்நிலைகளில் நீராடும் சமயத்தில் புடவை (அல்லது [...]


விரைவில் வருகிறது : சாணித் தரை

சிறுவயதில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டில் களிமண் தரைதான் உண்டு. வாரம்தோறும் இந்த மண் தரையைச் சுத்தமாக வைத்திருக்கவும் களிமண் பெயர்ந்துவிடாமல் இருக்கவும் பசுஞ்சாணி போட்டு என் அம்மா மொழுகுவார்கள். வீட்டில் மாடெல்லாம் வைத்திருக்கும் அளவிற்கு வசதி கிடையாது. பசுமாடு வைத்திருப்பவர்கள் வீட்டில் தினமும் அரிசி களைந்த கழுநீரைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவோம். வார இறுதியில் அதே கழுநீர் வாளியில் சாணியைப் பதிலாகத் தருவார்கள் சனிக்கிழமை காலை என் அம்மா விடியலிலே தொடங்கி [...]


விஸ்டா-வா வேண்டாமா - 1

{Click on the image to enlarge}
செந்தில்குமார் புச்சா லாப்டாப் வாங்கப்போறாராம். (கொடுத்துவச்சவரு). அதுல விஸ்டா இருந்தே ஆகனுமா? விஸ்டா புதுசு, கொஞ்சம் நாள் கழிச்சு அதுக்கு மாறிக்கலாமா? இப்படி அவருக்கு ஏகப்பட்ட விஸ்டேகங்கள்.
இதுக்குப் பதில் சொல்ல நான் சரியானா ஆளா இல்லியான்னு தெரியல. நான் தீவிர லினகஸ்வாதி-ங்கறது எல்லாருக்கும் தெரியும் (ஒரு காலத்துல லினக்ஸ் தீவிரவாதியாக்கூட இருந்தவன், இப்ப வேலை, பொண்டாட்டி புள்ளன்னு ஆனப்புறம் கொஞ்சம் அடங்கியிருக்கேன்). நான் மைக்ரோஸாஃப்ட் பத்தி என்ன சொன்னாலும் சந்தேகத்தோடத்தான் [...]


இந்தியாவில் இனவெறி

தெகல்ஹாவில் வெளியான ஷிவம் விஜ்-ஜின் The stain that just won’t wash கட்டுரையை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரை இது. ஷிவம் ஆப்பிரிக்க மாணவர்கள் இந்தியாவில் எதிர்கொள்ளும் இனவெறியைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். கறுப்பினத்தவர் தவிர தில்லியின் சீனர்களும், ஏன் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவரும் தங்கள் உடலமைப்பினால் நேரடியாக அனுபவிக்கும் இனப்பாகுபாட்டைப் பற்றிச் சொல்கிறது இந்தக் கட்டுரை.


பெருக்கல் கணக்கு

பெருக்கல், வகுத்தல் கணக்குகளை குழந்தைகளுக்குச் சொல்லித்தர பல செய்முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் Traditional Algorithm என்ற முறையில் பெருக்கக் கற்றுக் கொண்டவர்கள். இன்றளவும் நான் இதைத்தான் பயன்படுத்திவருகிறேன். என்னுடைய பையனுக்குச் சொல்லித்தரும்பொழுது செய்வழிகளுக்கு முன்னால் உள்ளுணர்வின் அடிப்படையில் அவனாக எப்படிச் செல்கிறான் என்பதை அவதானிப்பது என் வழக்கம். மேற்கொண்டு படிக்குமுன் இந்த வீடியோவைப் பாருங்கள்:


காவிரி நதிநீர்த் தீர்ப்பு

இன்று மத்திய காவிரி நீர் பிரச்சினைத் தீர்வாயம் கர்நாடகத்திற்கு 270 பில்லியன் சதுர அடி எனவும் தமிழகத்திற்கு 419 பில்லியன் சதுர அடி எனவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது கர்நாடகத்திற்குப் பேரிடியாக அமையும். 16 வருட நீண்ட வழக்காடல்களுக்குப் பிறகு தீர்வாயம் ஒட்டுமொத்தமாக இந்தத் தீர்ப்பை அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்படுவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. [...]