இந்திய வின்வெளி ஆராய்ச்சித்துறையின் பொன்னாள்
இந்திய விண்ணாராய்சிக் கழகத்தின் மகுடத்தில் இன்னொரு மணி வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு முதன்முதலாக இந்தியா மீள்நுழை செயற்கைக்கோளை (Re-entry Satellite) வெற்றிகரமாகப் பரிசோதித்திருக்கிறது. The Space Capsule Recovery Experiment (SRE-1) என்று பெயரிடப்பட்ட இந்த சோதனையில் ஜனவரி 10, 2007 ஆம் தினத்தன்று பிஎஸ்எல்வி-சி7 ஏவுகலத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டு 12 தினங்களாக புவியைச் சுற்றிவந்த ஒரு சோதனைக்கலம் இன்று வங்காளவிரிகுடாவில் வெற்றிகரமாக இறக்கப்பட்டிருக்கிறது.
ஏவப்பட்ட தினத்திலிருந்து பூமிக்கு மேலே 637 கி.மீ உயரத்தில் வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்த இந்தக் கலத்தை மீள்நுழை கட்டத்திற்கு ஆயப்படுத்த நேற்று நீள்வட்டப் பாதைக்கு மாற்றினார்கள். பின்னர் பெங்களூரில் உள்ள ஆராய்சிக்கூடத்தின் தலைமைக் கட்டுப்பாட்டிலும், லக்னோ, மௌரிஷியஸ், ஸ்ரீஹரிகோட்டா, இந்தோனேஷியா, கனடா, நார்வே நாடுகளில் இருக்கும் துணைக்கட்டுப்பாட்டு மையங்களின் உதவியுடனும் இதன் பாதையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தும் மாற்றியமைத்தும், பல்வேறு கட்டங்களாக இதன் வேகத்தைக் குறைத்தும் பூமியில் இறக்கியிருக்கிறார்கள். இது விண்கலன் கட்டுப்பாட்டுத் துறையின் அற்புத சாதனை. பூமியின் ஈர்ப்பு மண்டலத்தினுள்ளே நுழையும்போது இதன் வேகம் மணிக்கு 29,000 கி.மீ ஆகவும் (100 கி.மீ உயரத்தில்) பின்னர் இது தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு 5 கி.மீ உயரத்தில் இருக்கும்பொழுது மணிக்கு 363 கி.மீ ஆக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் பாராசூட்கள் இயக்கப்பட்டு அதன் வேகம் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது (மணிக்கு 43 கிமீ).
விண்ணிலிருந்த 12 நாட்களில் இந்தக் கலத்தில் இரண்டு முக்கிய சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science) உலோகவியல் பேராசிரியர் கமானியோ சட்டோபாத்யாய் மற்றும் விக்ரம் ஸாராபாய் விண்ணாராய்சிக் கழகமும் சேர்ந்து நடத்திய நுண் ஈர்ப்பு வெளியில் உலோகங்களை உருக்கும் சோதனை (Melting metals under microgravity). மற்றது ஜாம்ஷெட்பூர் தேசிய உலோகவியல் ஆய்வகத்தின் நுண் ஈர்ப்பு வெளியில் நானோபடிகங்கள் உற்பத்தி சோதனை (Nanocrystal synthesis under microgravity). இந்தச் சோதனையின் பொருள்கள் பத்திரமாக தரைசேர்ந்திருக்கின்ற்ன; விரைவில் இவை பரிசோதிக்கப்படும்.
இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் சட்டோபாத்தியாய-வின் ஆய்வுகள் குறித்த மேலதிகத் தகவல்களைப் பேராசிரியர் அபினந்தனனின் வலைப்பதிவில் காணலாம்.
இந்த வெற்றிகரமான சோதனை விண்கலன் ஏவுதல், பாதை கட்டுப்படுத்தல், மீள் நுழைவைக் கண்காணித்தல் மற்றும் மீள் நுழைவின்பொழுது கலத்திற்கு உள்ளாகும் அதீத வெப்பத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற துறைகளில் இந்தியாவின் அபரிமித முன்னேற்றதை உறுதிப்படுத்துகின்றன.
* * *
நான் இந்த வலைப்பதில் பல முறை முன்னே எழுதியதைப்போல இந்தியாவின் மிகத் திறமையான ஆய்வுத்துறை விண்வெளித்துறைதான். இது விக்ரம் சாராபாய், சதீஷ் தாவன் தொட்ங்கி அப்துல்கலாம் ஈறாக இன்றைய நிர்வாகிகளின் அற்புத திட்டமிடலிலும், இவர்களின் தலைமையின் கீழ் உருவான அற்ப்த அறிவியல், நுட்பக் குழுக்களின் அர்ப்பணிப்பினாலும் சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவிலேயே மிகத் திறமையாக நடக்கும் அறிவியல் துறை விண்ணாராய்ச்சித் துறைதான்.
இந்தச் சோதனையில் பங்கேற்ற ஒவ்வொரு குழுவுக்கும் நம் பாராட்டுகள்.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
ஆமாம்,மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
ஒரு சந்தேகம்.இதை இதுவரை யாரும் செய்யவில்லையா?
இப்படி செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
கூடுதல் தகவல் இருந்த கொடுங்க.
Thanks, Venkat, for this nice write up. Thanks for the link, too.
The SRE capability is only the first step for taking man/woman/people to space (and later, to moon) and bring them back safely. The editorial in today’s Hindu cites a figure of Rs. 10,000 crore over eight years for developing this capability. I’m not a supporter of such plans.

சமீபத்தில் பதிவுலகில் மீள்நிகழ்வு செய்த நீங்கள் இந்த செய்தியினைத் தந்தது பொருத்தமானதுதான்!
நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்!