ஈராக் பெட்ரோலிய சட்டம் - அமெரிக்காவால் எழுதப்படுகிறது

ஒருவழியாக சதாம் ஹுசேனைத் தூக்கில் தொங்கவிட்டாகியது. இன்னும் கொஞ்சம் சில்லரை உபதேவதைகளையும் கடந்த வாரத்தில் கழுவேற்றியாகிவிட்டது. ஜனநாயகக் காவலன் அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன?

சந்தேகமில்லாமல் எண்ணெய்க் கிணறுகளைக் காபந்து செய்துகொள்வதுதான். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இன்னும் 30,000 படைவீரர்களை ஈராக் அனுப்ப அனுமதி கேட்டிருக்கிறார். அமெரிக்க செனட் வெளியுறவுக் கொள்கைகள் குழு காண்டலீஸா ரைஸை வரவிருக்கும் ஈராக்கிய ஹைட்ரோகார்பன் சட்டங்கள் குறித்து துழாவியிருக்கிறது. ஈராகின் இந்தச் சட்ட வரைவு இரகசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ரைஸ் அம்மையார் அதுபற்றி எனக்கு எல்லாம் தெரியும்; அமெரிக்காவின் நலன்களுக்கு முற்றிலும் சாதகமாகவே இருக்கும் என்று செனட் கமிட்டியிடம் உறுதியளித்திருக்கிறார்.

முப்பது வருடங்களுக்குக் குறைவில்லாமல் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு ஈராக்கிய உற்பதியில் பங்களிக்க இந்தச் சட்டம் வழிவகுப்பதாக தி இண்டிபெண்டென்ட் நாளிதழ் எழுதியிருக்கிறது.

Now, unnoticed by most amid the furore over civil war in Iraq and the hanging of Saddam Hussein, the new oil law has quietly been going through several drafts, and is now on the point of being presented to the cabinet and then the parliament in Baghdad. Its provisions are a radical departure from the norm for developing countries: under a system known as “production-sharing agreements”, or PSAs, oil majors such as BP and Shell in Britain, and Exxon and Chevron in the US, would be able to sign deals of up to 30 years to extract Iraq’s oil.

PSAs allow a country to retain legal ownership of its oil, but gives a share of profits to the international companies that invest in infrastructure and operation of the wells, pipelines and refineries. Their introduction would be a first for a major Middle Eastern oil producer. Saudi Arabia and Iran, the world’s number one and two oil exporters, both tightly control their industries through state-owned companies with no appreciable foreign collaboration, as do most members of the Organisation of Petroleum Exporting Countries, Opec.

இனியென்ன கொண்டாட்டம்தான். வாழ்க ஜனநாயகம்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

வெங்கட்,

இது ஒன்றும் புதுசு இல்லை. ஆரம்பத்திலிருந்து இது தான் கதை. அரபு நாடுகள் அமெரிக்கா/ப்ரான்ஸ்/பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பெட்ரோல் எடுக்க காண்ட்ராக்ட் கொடுக்கும். ஒரு தொகை இத்தனை காலத்திற்கென்று ஒத்துக் கொள்ளபடும். முதன் முதலில் அமெரிக்க கம்பெனியான ஸ்டார் ஆயில் கம்பெனி (தற்போதைய மொபிலின் தாய்) ஆண்டிற்கு 1 ஏக்கருக்கு 1 டாலர் மற்றும் எண்ணெய் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் 30% மற்றும் 50% தொழிலாளர்கள் உள்நாட்டவர்களா இருக்க வேண்டும் என்பதே ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்த படி அமெரிக்கா போய் செட்டில் ஆனவுடன் சில வருடங்கள் கழித்து எல்லா அச்செட்களுக்கும் ஒரு விலைப் போட்டு வாங்கி எல்லா பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டது. இதைப்பார்த்து மற்ற நாடுகளும் செய்தன. இப்போது வெனிசுலாவும் செய்கிறது. அதன் பிறகு ஒபக் என்ற கொள்ளைக் கூட்டத்தை அமைத்து மொத்த உலகத்தையும் கொள்ளையடித்தனர் / அடிக்கின்றனர் இந்த எண்ணை வள நாடுகள். அவர்கள் ஜாடை காட்டினால் பெட்ரோல் விலை ஏறும் இறங்கும்.

தாரளயமாக்கல் வந்த பிறகு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவும் சீனாவும் எண்ணையை குடிக்க துவங்கின. இந்த ஒபெக் கொள்ளைக் கூட்டம் இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. 1970 அப்பால் சவூதியில் பெரிய எண்ணை வயல் கண்டுபிடிக்க படவில்லை. அமீரகத்தில் எண்ணை ப்ரஷர் கம்மியாக வருகிறது. முன்னாடி தானக வெளிவந்த எண்ணையை இப்பொது தண்ணீர் அடித்து எடுக்க வேண்டியுள்ளது.

எண்ணை எடுக்க சவூதியில் பீப்பாய்க்கு 1$ அமீரகத்தில் 4$ ஆகும். ஈரானில் ஆகும் செலவைப்பற்றி எனக்கு ஐடியா இல்லை. ஆனால் ஈரானிலும் ஈராக்கிலும் நவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் மிக குறைந்த எபிசியன்ஸியில் எண்ணை கிணறுகளும் ரிபைனரிகளும் இயங்குகின்றன.

இன்றைய எண்ணைவிலை சுமார் 50 $ கள். கட்ரீனா வந்த போது இருந்த விலை 70/80$கள்.

புயல் மழை காலங்களில் அமெரிக்கா அதிக எண்ணையை வாங்கி கொள்முதல் செய்தால் உலக சந்தையில் விலை ஏறும். இயற்கை அழிவுகள் எதுமில்லையென்றால் அமெரிக்கா கொள்முதல் செய்த எண்ணையை வெளியிட ஆரம்பிக்கும்.

ஆக அமெரிக்கா எண்ணை வாங்கி பதுக்கினால் உலகில் விலை ஏறும். வாங்க வில்லை என்றால் விலை குறையும்.

இன்றைய விலையிலும் ஒபெக் கொள்ளையர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அது பத்தாதாம் அதனால் உற்பத்தியை குறைத்து விலை ஏற்ற போகிறார்களாம் இந்த கொள்ளையர்கள்.

அமெரிக்கா இன்னும் கொள்முதல் செய்த எண்ணையை வெளியிடுகிறது அதனால் கொள்ளையர்கள் உற்பத்தியை குறைத்தும் விலை குறைகிறது. அடுத்த உற்பத்தி குறைவு பிப்ரவரியில்

நாளை ஈராக் எண்ணை மூழுவீச்சில் வெளிவந்தால் மற்றும் ஈராக் ஒபெக் ஐ விட்டு வெளியேறினால் எண்ணைவிலை குறையும்.

எண்ணைவிலை குறைந்தால் இந்தியா/சீனா போன்ற நாடுகளில் உற்பத்தி செலவு குறையும். ஏழை மக்களின் வாழ்வு முன்னேறும்.

சரி ஈராக் மக்களுக்கு என்னாகும். ஒரு சர்வாதிகாரி இல்லாததால் அமெரிக்க கொள்ளை அடித்தது போக மீதி உள்ள பணத்தில் அரசியல் வாதிகள் கொள்ளை அடித்து சிறிதளவேணும் நன்மை உண்டாகும். அந்த சிறிதளவு நன்மை ஒரு ஆரம்பமே. ஈராக் மக்கள் மற்ற அரபுகளை போல் இல்லாமல் நல்ல உழைப்பாளிகள். அவர்கள் உழைப்பால் நாடு முன்னேறும்.
சற்றே தங்கள் இன ப்ரச்னைகளை மறந்து நாட்டிற்காக உழைத்தால் அந்த பகுதியில் ஒரு எடுத்துக் காட்டாக இருப்பார்கள்.

இருப்பார்களா? ஜனநாயகம் அங்கே வாழுமா?

வாழ வேண்டும் ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம்

பி.கு. எண்ணைவிலை குறைந்தால் என் வருமானம் குறையும் :(

//இந்த ஒப்பந்த படி அமெரிக்கா போய் செட்டில் ஆனவுடன் சில வருடங்கள் கழித்து எல்லா அச்செட்களுக்கும் ஒரு விலைப் போட்டு வாங்கி எல்லா பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டது//

இதை கீழ்கண்டவாறு படிக்கவும்

இந்த ஒப்பந்த படி அமெரிக்கா போய் செட்டில் ஆனவுடன் சில வருடங்கள் கழித்து எல்லா அச்செட்களுக்கும் ஒரு விலைப் போட்டு வாங்கி எல்லா பொறுப்பையும் சவூதியே ஏற்றுக் கொண்டது

For the amount we’ve spent on Iraq, let’s at least get some cheap oil. adhilE enna ungaLukku? :)

சிவா - நன்றி. நீங்க பம்பு செட் போட்டு எடுக்கற எண்ணெ இல்லையே, மண்ணைப் புழிஞ்சு எடுக்கறதுதான! எங்க ஊர்லேந்து எல்லாரும் அங்கதான் வேலை கெடைக்குதுன்னு ஓடிக்கிட்டுருக்காங்க. உங்களுக்கு இன்னும் பல வருஷங்களுக்குக் கவலையில்லை :)

பாலாஜி - காசப் போடுங்க, எண்ணெயைத் தோண்டி எடுத்துக்குங்க. யாரும் வேணாங்கல. ஆனா ஜனநாயகம்னு எல்லாம் ஜல்லியடிக்க வேணாம்னுதான் சொல்ல வர்றேன்.

ஆமாம், போன வாரமும் புடிக்க முடியல்லயே!

Hello!!!!
Did you not read memo? democracy AND capitalism are being exported/spread. Capitalism expects a “return on investment” (a hefty one at that - 3000+ troop deaths and counting).
Don’t be unfair

Leave a comment

(required)

(required)