விளம்பர உத்தி : மறைமுக விளம்பரம்
by வெங்கட் • December 19, 2007 • விளம்பரம் • 4 Comments

நேரடியாக நெத்தியடியாகச் சொல்லும் விளம்பரங்களைக் காட்டிலும் மறைமுகமாகச் சுட்டிச் செல்லும் விளம்பரங்கள் சுவாரசியமானவை. இதற்கு அற்புதமான உதாரணம் இங்கே. இது ஜெர்மனியின் டுஸெல்டார்ஃப் நகரின் வீதியில் வைக்கப்பட்ட விளம்பரம். வயிற்றுப் போக்கிற்கு கழிவறைக் காகிதம் மாத்திரம் போதாது எங்கள் மாத்திரை தேவை என்று சுட்டிச் செல்கிறது.
மலம் நிறுத்தும் மாத்திரைக்கு சுவாரசியமாக விளம்பரம் செய்வது கடினம். இந்த விளம்பரம் சுவாரசியமானது மாத்திரமில்லாமல், விற்கப்படும் பொருளின்மீது நிர்வாகத்திற்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. இது 2007 ஆம் ஆண்டிற்கான எபிகா விருதைப் (Epica Award) பெற்ற விளம்பரம்.
மறைமுகமாகக் காட்டப்படும் எதற்குமே எப்போதும் சுவாரசியமாவைதான்.
அருமையான விளம்பரம். எப்படித்தான் தோணுது. பாரம்பரியமா சொல்லணுமுன்னா – ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!
)
//ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!
)//
ஆமா.. இத பாத் ‘ரூம்’ போட்டு யோசிச்சிருப்பாங்க..
பாத்ரூமில் யோசிச்சாலும் ஆர்க்கிமீடிஸ் மாதிரி கத்தி சொல்லாமல் காத்திரமா சொல்லியிருக்காங்களே