• விரைவில் வருகிறது : சாணித் தரை

    by  • February 12, 2007 • அறிவியல்/நுட்பம் • 14 Comments

    சிறுவயதில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டில் களிமண் தரைதான் உண்டு. வாரம்தோறும் இந்த மண் தரையைச் சுத்தமாக வைத்திருக்கவும் களிமண் பெயர்ந்துவிடாமல் இருக்கவும் பசுஞ்சாணி போட்டு என் அம்மா மொழுகுவார்கள். வீட்டில் மாடெல்லாம் வைத்திருக்கும் அளவிற்கு வசதி கிடையாது. பசுமாடு வைத்திருப்பவர்கள் வீட்டில் தினமும் அரிசி களைந்த கழுநீரைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவோம். வார இறுதியில் அதே கழுநீர் வாளியில் சாணியைப் பதிலாகத் தருவார்கள் சனிக்கிழமை காலை என் அம்மா விடியலிலே தொடங்கி வீட்டு முழுவதும் கரைத்த சாணி கொண்டு மொழுகுவார்கள்.

    இப்பொழுது இதே சாணித் தரை வேறு உருவம் பெற்று திரும்ப வரவிருக்கிறது. மிச்சிகன் மாநிலப் பல்கலைகழகத்தில் பசுஞ்சாணியைப் பதப்படுத்தி அதிலிருக்கும் நார்ப்பொருள்களைக் கொண்டு தரைகளுக்கான மர அட்டைகளை (Wood Board) செய்ய முனைகிறார்கள்.

    Scientists at Michigan State in East Lansing and at the USDA’s Forest Products Laboratory in Madison, Wis., are conducting tests on various types of fiberboard made with the “digester solids.”

    As with the wood-based original, the manure-based product is made by combining fibers with a chemical resin, then subjecting the mixture to heat and pressure.

    So far, fiberboard made with digester solids seems to match or beat the quality of wood-based products.

    “It appears that the fibers interlock with each other better than wood,” said Charles Gould at Michigan State’s College of Agriculture and Natural Resources. “We end up with, I think, a superior material.”

    சாணியால் பிணைக்கப்பட்ட மரத்தைப் பயன்படுத்த முதலில் பெருந்தயக்கம் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இன்றைய முன்னேறிய வேதிநுட்பங்களைப் பயன்படுத்த சாணியில் இருக்கும் துர்நாற்றத்தை முற்றாக நீக்க முடியும் என்பதில் அறிவியலாளர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

    சக்கரம் சுழல்கிறது.

    14 Responses to விரைவில் வருகிறது : சாணித் தரை

    1. ஸ்ரீநிவாஸ் வெங்கட்
      February 12, 2007 at 9:53 am

      மாக்கோலத்தோடு வந்தால் இன்னும் அழகுதான்.

    2. February 12, 2007 at 10:18 am

      எங்க அம்மா வெள்ளிக்கிழமைன்னு நினைக்கிறேன். அதென்ன கணக்கோ தெரியாது. மொழுகிக்கிட்டு இருக்கிறப்போதுதான் முக்கியமா வீட்டுக்கு உள்ள போகிற வேலை இருக்கும். வாங்கிக் கட்டிக்கணும். ம்ம்…ம்ம்..

    3. வெங்கட்
      February 12, 2007 at 11:52 am

      ஸ்ரீ.வெங்கட் – சாணி மொழுகிய தரையில் ஈரம் முழுவதும் காய்வதற்கு முன்பே மாக்கோலம் போட வேண்டும். அப்படிச் செய்தால் அது ஈரத்துடனும் சாணியுடனும் ஒன்றி, அரைநிரந்தரம் (semi-permanent) ஆகும்.

    4. வெங்கட்
      February 12, 2007 at 11:52 am

      தருமி – கோலம் மாதிரி, அரைக் காய்ச்சலில் இருக்கும்பொழுது காலை அழுத்தி வைத்தால் அடுத்தவாரம் மொழுகும் வரைக்கும் நம் காலடியைப் பார்க்க முடியும். வெயில் காலத்தில் வெளியே போய்விட்டு உள்ளே வரும்பொழுது சாணித்தரையில் உள்ளங்காலை வைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்.

      இங்க வூட்ல கார்பெட், ஹார்ட்வுட், க்ராணைட் என்று பல இடங்களில் வெவ்வேறு தரையைப் பராமரிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.

    5. February 12, 2007 at 12:47 pm

      ஈரச்சாணியில் மட்டுமே நாற்றமிருக்கும். உணவைப் புடைக்க பயன்படுத்தும் முறத்தைக் கூட சாணியால் மெழுகித்தான் பயன்படுத்துவார்கள். (இப்போது பிளாஸ்டிக் முறங்கள் வந்துவிட்டன) அது ஒரு கிருமிநாசினியும் கூட.

    6. February 12, 2007 at 2:03 pm

      ஆஹா… இதுதான் ‘உட்டாலக்கடியா’ :-)

      அங்கே animal manure என்றுதான் சொல்கிறார்கள். நீங்கள் அப்படியே நம்ம பக்க பழக்கமான ‘சாணியால்’ மெழுகுவதை முடிச்சுப் போட்டு சூப்பரா ஒரு பதிவு போட்டுட்டீங்க.

      ஒரிஜினல விட உங்களுது படிக்க நல்லா இருந்தது.

      இதுல மாக்கோலம் வேறயா… :-) ))

    7. February 12, 2007 at 7:41 pm

      கீழே பாலோ , ஜூஸோ, எண்ணையோ எதைக் கொட்டுனாலும் பிரச்சனை இல்லை.
      கொஞ்சம் சாணி போட்டு மெழுகிட்டா புத்தம்புதிய தரை.

      மெழுகுனவுடனே அரை ஈரத்துலெ இருக்கும்போது பெருக்கிவிட்டுறணும்.
      தும்பெல்லாம் இல்லாம தரை மழமழன்னு ஆயிரும். அப்பக் கோலம்போட்டா……
      அப்படியே பட்டாப் பதிஞ்சிரும்.

    8. பத்மா அர்விந்த்
      February 12, 2007 at 7:59 pm

      வெங்கட்
      என் மகன் நாம் வீட்டை மொழுகுவதையோ அடுப்பு மொழுகுவதையோ வாசலில் சாணி தெளித்து கோலம் போடுவ்தையோ நம்ப மறுக்கிறான். என் சகோதரி செல்பேசியில் சொன்ன போதும் இன்னும் நம்ப மறுத்து முகம் சுளிக்கிறான். என்ன சொல்ல? உங்களின் இந்த பதிவை படித்தும் நம்பிக்கை இல்லை.

    9. வெங்கட்
      February 12, 2007 at 10:55 pm

      துளசி – எண்ணை கொட்டினால் பிரச்சனை இல்லை. ஆனால் மழைகாலத்தில் ஈரம் காக்கும்போது பாயைப் போட்டுக்கொண்டு படுக்கமுடியாது. பாய்க்குக் கீழே நாலைந்து சாக்குப் படுதாக்களைப் பரப்ப வேண்டும். இதற்காகவே என் அப்பா நிறைய சாக்குகளைக் ஒன்றாகத் தைத்து ‘கார்ப்பெட்’ செய்திருப்பார்.

    10. வெங்கட்
      February 12, 2007 at 10:59 pm

      பத்மா – சென்ற முறை இந்தியாவிற்குப் போயிருந்தபோது என் மகன்களுக்கு விறகுவைத்து எரியும் அடுப்பைக் காட்டினேன். “appaa, this is too dangerous, they should not be using open flame” என்று சொல்லிவிட்டான். மரத்தூள் அடுப்பைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? அதை வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை. சின்ன வயதில் என் அம்மா அதனுடன் எத்தனை மன்றாடியிருப்பாள்!

    11. February 12, 2007 at 11:45 pm

      நம்ம பெருசுங்க எல்லாம் சரியாத்தான் செஞ்சு இருக்காங்க. வாழையிலையில் சாப்பாடு போடுவதிலிருந்து, இன்னும் என்னென்னவோ, நடுவில் ஏன் செய்கிறோம் எனக் கேள்வி கேட்காமல் போனதுதான் நாம் இதைத் தொலைத்ததற்குக் காரணம்.

      சில தலைமுறைகளாக நாம் ஏன் எனக் கேட்க, சரியான பதில் வராததால், நாம் இவற்றை தொடர்ந்து செய்ய தவறிவிட்டோம். இப்பொழுது காரணம் தெரிகிறது. செய்வோமா எனத் தெரியவில்லை.

      அமெரிக்காவில் சாணியிலிருந்து எரிபொருள் செய்வதற்கு மானியம் தரப்போவதாக சமீபத்தில் படித்த ஞாபகம். அதுதானே நம்ம வரட்டி!

    12. பத்மா அர்விந்த்
      February 13, 2007 at 11:14 am

      மரத்தூள் அடுப்பை பற்றி ஒரு பதிவிட வேண்டும். என் அண்ணா அதை அடைப்பதில் சூரன். நான் அடைத்தால் இடிந்து விழுந்துவிடும், புகையில் கண்ணே போய்விடும். அதனால் அது சின்ன அண்ணாவின் வேலை. ஒரு முறை இரண்டாம் வகை புகை (second hand smoke) பற்றி பேசியபோது இதுபோன்ற அடுப்புகள் பற்றீ பேசி இருக்கிறேன். என் அடுத்த திட்டம் இது போல இன்னும் இருக்கும் ஏழைகள் இருந்தால் அவர்களுக்கு ஒரு gas இணைப்புக்காக வசதி செய்ய வேண்டும் என்பது. பார்க்கலாம் முடியுமா என்று.

    13. March 7, 2007 at 3:23 am

      சாணித் தரை கிருமிகளின் சொர்க்கபுரி. அதை எப்படித்தான் சகித்துக் கொள்கிறீர்கள்? ஏனெனில் மாட்டின் சாணியில் புழுக்களும் கிருமிகளும் நெளிவதைப் பார்த்து அருவருவருப்பு அடைந்துள்ளேன். அதை பலர் கொண்டாடுவதுதான் எனக்குப் புரியவில்லை. திரும்பவும் அந்த சாணித் தரையா? அய்யோ வேண்டாம்.

      இவண்
      எழுத்தாளர் ஒளிர்ஞர்

    14. March 12, 2007 at 7:23 am

      hai, i am very happy to read all ur creations. i like to make more creations. urs olerzor

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *