வலைப்பதிவு அமைப்பு மாற்றங்கள்
by வெங்கட் • February 4, 2007 • அறிவிப்புகள், பொது • 13 Comments
என்னுடைய வலைப்பதிவுகளின் அமைப்பில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறேன். இது குறித்த உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாயிருக்கிறேன்.
முதலாவதாக பழைய Pentium II 233 MHz, Fedora Core 2 Linux -ல் இயங்கிக் கொண்டிருந்த என் வழங்கியிலிருந்து புதிய ( இதுவும் பழைய பெட்டிதான்). இந்த புதிய பெட்டி Pentium 4, 1.3 GHz, Ubuntu Linux-ல் இயங்குகிறது. இதுவும் என் இல்லத்திலிருந்துதான் இயக்கப்படுகிறது.
சிதறிக்கிடந்த என்னுடைய தமிழ் வலைப்பதிவு இடுகைகளை புதிய வேர்ட்பிரஸ் 2.1 ல் தொகுத்திருக்கிறேன். BlogCMS பொதியை முற்றாக ஒதுக்கி வேர்ட்பிரஸ்க்கு மாறியிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட 650 இடுகைகள், 3,500 கருத்துக்கள், பின் தொடர்தல்களை ஒருவழியாக ஒருங்கிணைத்திருக்கிறேன். என்னுடைய பழைய இடுகைகள் அனைத்தையும் தேடல் பெட்டியிலிருந்து அடையமுடியும். பழைய இடுகைகளின் படங்களையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன். பழைய இசைப்பதிவுகளின் பாடல் கோப்புகளை இன்னும் ஒழுங்குபடுத்தவில்லை. வருகின்ற சிலநாட்களில் அதையும் செய்வேன். அதைச் செய்தவுடன் இசைப்பதிவுகளைத் தொடர உத்தேசம். (பிரகாஷ்! நீங்க சொன்னது காதுல விழுந்திருச்சு)
BlogCMS-ல் இருந்து WordPress பொதிக்கு எப்படி மாற்றினேன் என்பதைப்பற்றி விரிவாக என் ஆங்கிலப்பதிவில் எழுதியிருக்கிறேன். இப்பொழுது ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாகப் பதியத் தொடங்கியிருக்கிறேன். என் ஆங்கில இடுகைகளில் புதியனவற்றை இந்தப் பதிவின் வலது பத்தியில் காணலாம். இதேபோல Google Reader வழியாக நான் படிக்கும் செய்திகள், கட்டுரைகள் குறித்த பகிர்வையும் இங்கே தருகிறேன். இதிலிருப்பவை உங்களில் யாருக்கேனும் சுவாரசியமாக இருந்தால் தெரிவிக்கவும். (இதைத் தொடர்ந்து வெளியிடுவதா இல்லை நீக்குவதா என்று முடிவெடுக்க உதவும்).
பல நாட்களாக யோசித்துக்கொண்டிருந்த என் Photoblog ஐயும் தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படங்களை Flickr தளத்தில் சேர்க்கிறேன். பிறகு Flickr -லிருந்து நேரடியாக என் வலைப்பதிவில் அவற்றை இணைக்கிறேன். இப்படிச் செய்வதால் என்னுடைய வழங்கியில் அதிகம் படங்களைச் சேமிக்கத் தேவையில்லை. மேலும் படங்கள் Flickr -லிருந்தே நேரடியாகப் பரிமாறப்படுவதால் என்னுடைய அகலப்பாட்டை இணைப்பும் அதிகம் பயன்படுத்தபடாது.
Flickr -ல் நான் புதிதாகச் சேர்த்த படங்களின் செய்தியோடையும் இந்தப் பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பக்க அமைப்பிற்குப் பெரிதும் வெள்ளையில் இருக்கும் ஆடையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இது படிக்க எளிதாக் இருக்கிறதா என்று சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். (முந்தைய பதிவில் கவி-யும், கிருபாவும் சொன்ன இடது மார்ஜின் அதிகரிப்புக் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுகிறேன்).
இந்தத் Flickr, WordPress, Photoblog, DynDNS தொழில்நுட்பங்களைப் பற்றிய தகவல்கள் யாருக்காவது தேவைப்பட்டால் எழுதவும். என்னாலான உதவியைத் தருகிறேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி!
வெங்கட்,
நான் முன்பே சொன்னது போல இடது புறம் margin கண்டிப்பாக தேவை. மற்றபடி வெண்மை நிற பின்ணனி சிரமில்லாமல் படிப்பதற்கு உகந்ததுதான். முடிந்தால் மூன்றாவது column ஐ கொஞ்சம் வித்தியாச படுத்தினால் நல்லது. may b an embossed box kind of design, i think it will bring more clarity and let the user foucs the main content.
One more thing i noticed when i type “http://domesticatedonion.net/” in the address bar it shows the directory structure which i am not sure is a right thing. BTW your english blog design is nice!!
oh very nice nice its a great design
கவி – இடது மார்ஜினை அதிகப்படுத்துவது சிக்கலாக இருக்கிறது. பக்கத்தின் அகலம் மாறுபடும் அமைப்பில் இருக்கிறது (சாரளத்தைப் பெரிது செய்தால் இட ,வல காலியிடங்களும் அதிகரிப்பதைப் பார்க்கலாம்). இதற்கு ஒட்டுமொத்தமாக பக்கத்தின் அகல அமைப்பை மாற்றியாக வேண்டும்.
முதல் பக்கத்தில் ஒரு index உருவாக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் செய்துவிட்டு இதைச் செய்ய உத்தேசம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
தமிழ்,
நன்றிகள்.
கொஞ்சம் தடம் மாறிய கேள்வி.
உபுண்டுவில் தமிழில் தட்டச்ச என்ன செய்கிறீர்கள்.
ரொமப நாளாக தடவிக்கொண்டிருக்கிறேம்.
SCIM யில் தமிழுக்கான ஒரு வரி கூட இல்லை.
நன்றி
வ.குமார்,
இதை நான் உபுண்டுவில் தான் தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தமிழில் தட்டச்ச விரும்புவது, வலைப்பதிவுகளுக்காக மட்டும் என்றால் பயர் பாக்ஸில் தமிழ் விசை extension உபயோகிக்கலாம். SCIM எனக்கு GEDIT ல் எந்த வித பிரச்சனையில்லாமல் வேலை செய்கிறது. ஓபன் ஆபிஸில் சோதித்து பார்க்கவில்லை
குமார் – நான் பழைய கணினியில் உபுந்துவில் பாலு சொல்வதைப் போலத்தான் பயன்படுத்திவந்தேன். இங்கே எழுதியிருக்கும் சர்வரில் தமிழ் போடவில்லை.
தபுண்டு பொதியைப் பயன்படுத்திப் பாருங்களேன்.
உங்களுக்கு இந்தப் பக்கம் பயன்படும் என்று நினைக்கிறேன்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சுட்டி குழம்பினால் விக்கிப்பீடியாவில் tabundu என்று தேடவும்
venkat,
I guess the layout in percentage. but somewhere there shd be a property in CSS for leftmargin. i guess it must be zero now u can try with 10px or 20px.
may b here u got to change
body { background: #fff; color: #333; font: 62.5% Georgia, “Times New Roman”, Times, serif; text-align: center; }
* { padding: 0; margin: 0; }
try the margin value and see
வெங்கட்:
என்ன ஆலோசனை சொல்றதுன்னு தெரியல. ஆனா உங்க வலைப்பாக்கம் அழகாகவும் படிக்க எளிதாகவும் இருக்கு.
ஆர்கிட்டுகளைப் பார்த்தேன். உங்கள் ஆர்க்கிட் ஆர்வம் அறிந்ததுதான் என்றாலும் படங்கள் அருமை.
நன்றி!
வெங்கட், மிக்க நன்றி, அந்த Perl Script முறையினை முன்பே பார்த்திருந்தேன், சோம்பல் காரணமாக மாற்றமல் இருந்தேன், உங்க ஆங்கிலப் பதிவினை பார்த்ததும் முயன்று பார்க்கும் ஆவல் வந்தது, வெற்றிகரமாக அனைத்து BLOGCMS பதிவுகளையும் WordPress -க்கு இறக்குமதி செய்தாகிவிட்டது. மீண்டும் ஒரு நன்றி.
பரணி – மகிழ்ச்சி. உங்கப் பதிவைப் பார்த்தேன். படங்கள் அருமை. விரைவில் என்னுடைய photoblog-ல் ஒரு இணைப்பு கொடுக்கிறேன்.
ஆமாம், exif-க்கு என்ன plugin பயன்படுத்துகிறீர்கள்? நான் சிலவற்றை முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் எதுவுமே flickr, lightbox போன்ற குழப்பங்களுடன் சரியாக வேலைசெய்வதில்லை.
//ஆமாம், exif-க்கு என்ன plugin பயன்படுத்துகிறீர்கள்?//
Exif – க்கு Yet
another Photoblog plugin பயன்படுத்துகிறேன், படக்கோப்பினை நமது தளத்தில் ஏறினால் மட்டுமே இது வேலை செய்யும்.