• பியர் – மைக்ரோக்ஸ்கோப்பின் அடியில்

    by  • January 31, 2007 • அறிவியல்/நுட்பம், கலைகள் • 7 Comments

    பியரும் நேரமும் கிடைத்தால் என்ன செய்யலாம்? கொஞ்சம் கொஞ்சமாக இரசித்துக் குடிக்கலாம். நிறைய பியரும் கொஞ்சம் நேரமும் கிடைத்தால் அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் பியரும் நிறைய நேரமும் கூடவே ஒரு மைக்ரோஸ்கோப்பும் கிடைத்தால் என்ன செய்யலாம்? அற்புதமான படங்களை உருவாக்கலாம்.
    beer_becks_dark.jpgbeer_elephant_red.jpgbeer_hineken_dark.jpgbeer_irish_red_lager.jpg

    (Click on the images to enlarge)

    Molecular Expressions என்ற இந்த தளத்தில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரையான பல்வேறு நுண்ணோக்கிகளைப் பற்றிய அற்புதத் தகவல்கள் இருக்கின்றன. அறிவியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் இந்தத் தளம் சுவாரசியமானதாக இருக்கும். நுண்ணோக்கியின் உதவிகொண்டு அற்புதக் கலைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அறிவியலும் கலையும் ஒருங்கிணையும் இந்தப் புள்ளி மிகச் சுவாரசியமானது. நேரங்கிடைக்கும்பொழுது சில நிமிடங்கள் இந்தத் தளத்தில் செலவிடுவது என் வழக்கம்.

    இன்று இந்தத் தளத்தில் கண்ட அற்புதப் படங்கள் இங்கே. இவை எல்லாம் நுண்ணோக்கியின் உதவிகொண்டு எடுக்கப்பட்ட பியர் படங்கள். இன்னும் தேசவாரியாக பல்வேறு பிராண்ட் பியர்களின் படங்களும், அதிகுறை தட்பநிலையில் பியரை உறையவைத்தும், பியர் படிகங்கள் வளர்த்தும் எடுக்கப்பட்ட படங்களும் உண்டு. இதுபோல அறிவியல்-கலை இயைபு குறித்த தளங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

    7 Responses to பியர் – மைக்ரோக்ஸ்கோப்பின் அடியில்

    1. சன்னாசி
      January 31, 2007 at 5:53 pm

      வெங்கட், இதைப் பார்த்திருக்கிறீர்களா தெரியவில்லை. சில இழுப்பு/ரவுண்டுக்கடுத்தே நாம் high as kite ஆகும்போது அத்தனை வலையைப் பின்னவேண்டிய சிலந்திக்கு எவ்வளவு சிக்கலாக இருக்கும் ;-)

      http://www.trinity.edu/jdunn/spiderdrugs.htm

    2. பத்மா அர்விந்த்
      January 31, 2007 at 7:33 pm

      நிறப்பிரிகை எப்படி சாத்தியமாகிறது? பல்வேறு நிறங்கள் தெரிய ஒன்றூ அடர்த்தியாகவும் இன்னொன்று சற்றே மங்கலாக அல்லது வேறு நிறங்களில் தெரிய என்ன செய்கிறார்கள் என்றோ எந்த வித மைக்ராஸ்கோப் என்றோ விவரம் தெரியுமா?

    3. January 31, 2007 at 7:52 pm

      இதே மாதிரி,தண்ணீரைக்கூட வெவ்வேறு நிலையில் எடுத்துப்போட்டிருந்தார் ஒரு ஜப்பானியர்.
      சரியாக ஞாபகம் இல்லை.

    4. வெங்கட்
      February 1, 2007 at 8:53 am

      குமார் – நீரின் இயற்பியல் மிகவும் சிக்கலானது. நீர் உறைந்து படிகமாகும்பொழுது எதேச்சையாக உருவாகும் படிகங்கள் (spontaneous crystals – not seeded by dust or anything else) ஒவ்வொன்றும் அமைப்பில் வெவ்வேறாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஒரே மாதிரியான இரண்டு படிகங்களை வளர்ப்பது இன்னும் சாத்தியமில்லாததாக இருக்கிறது. இதில் நிறைய விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்.

    5. வெங்கட்
      February 4, 2007 at 11:09 pm

      Hello all, I just discovered that my new WordPress 2.1 installation auto-approves a few and hold some in moderation and hence the delay in some comments appearing here. My apologies.

    6. வெங்கட்
      February 4, 2007 at 11:10 pm

      சன்னாசி – அந்த இணைப்பு நன்றி. ஆனால் அது முழுமையான அறிவியல் விஷயமாகத் தோன்றவில்லை. இதேபோல ஓரு வீடியோவைக் கூடப் பார்த்திருக்கிறேன். விரைவில் அதன் சுட்டியைத் தருகிறேன்.

    7. வெங்கட்
      February 4, 2007 at 11:14 pm

      Padma, Most of these are contrast enhanced. It is possible to use a polarization contrast or Normaski contrast microscope and enhance the contrast. Some of the modern microscopes are also capable of using birefringence contrast that gives these spectacular color contrasts.

      More on the technique is here: http://www.microscopy.fsu.edu/beershots/beerphotos.html

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *