• குழந்தைத் தொழிலாளர்கள்

    by  • December 20, 2007 • விளம்பரம் • 0 Comments

    child_labour.jpg
    என்னைக் கவர்ந்த பொதுநல விளம்பரங்களின் வரிசையில் இன்னொன்று:

    மிகச் சுருக்கமான, கோட்டுச் சித்திரத்தின் மூலம் அதிக தாக்கம் உண்டாக்கும் விளம்பரம் இது. இதன் செய்தி வாசகம் “Say no to child labour” என்பது. சிறுவயதில் வேலை செய்து சிறைப்பட்டுக் கிடக்கும் பெண் நோட்டுப் புத்தகத்தின் வாயிலாக வெளியுலகைக் காணமுடியும் என்று சுட்டுகிறது. இன்னொரு வகையில் படிப்பறிவைப் பெறுவதன் மூலம் சிறுமிக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் சாத்தியம் இருப்பதையும் சொல்லுகிறது. எந்தவிதமான முகபாவனைகளுக்கும் தேவையின்றி இருகைகளாலும் கம்பியைப் பிடித்திருப்பதன் மூலம் இயலாமையையும், ஆதங்கத்தையும் எளிதில் சொல்ல முடிகிறது. பார்த்த மாத்திரத்தில் சோகத்தை எளிதில் அறிய முடிவதால் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

    சிறுமியின் உருவத்தைச் சிறுகுழந்தை வரையும் கோட்டுச் சித்திரம்போலவே வடித்திருப்பதால் இந்த விளம்பரத்தின் செய்தி சிறுமியின் வாயிலாகவே வெளிவருவத்தைப் போன்ற பாரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

    சென்னையின் முத்ரா விளம்ரம் நிறுவனம் தயாரித்த இந்தப் பொதுநல விளம்பரம் இந்திய விளம்பர நிறுவனங்கள் கழகத்தின் (Advertising Agencies Association of India (AAAI)) 2007 ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிகளுக்கான விருதைப் (Young Creatives Competition) பெற்றிருக்கிறது. உலக அளவில் மதிப்பு மிக்க கான் விளம்பரப் போட்டிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *