இந்தியன் எக்ஸ்பிரஸ் : இளையராஜா பேட்டி
by வெங்கட் • May 31, 2007 • இசை • 2 Comments
இன்றைய NewIndPress -ல் இளையராஜாவின் பேட்டி வெளியாகியிருக்கிறது.
இப்படியாகத் தலையுமில்லாமல் வாலுமில்லாமல் நோக்கமும் இல்லாமல் தெளிவுமில்லாமல் ஏன்தான் பேட்டியெடுத்துத் தொலைகிறார்களோ என்று தெரியவில்லை.
அச்சுப்பதிப்பில் இது எப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை. முப்பெத்தெட்டாம் பக்கத்து மூலை கணக்காக ஏதாவது வரிவிளம்பரங்களுக்கிடையே மிஞ்சிப்போன வெற்றிடத்தை நிரப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
* * *
சீனி கம் பாடல்கள் கம்போஸிங்க் பற்றி நேரம் கிடைக்கையில் கொஞ்சம் எழுத வேண்டும்.
//அச்சுப்பதிப்பில் இது எப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை//
வெங்கட் , அவ்ளோ மோசமில்லை, அதாவது அச்சு வடிவம், … சென்னை எக்ஸ்பிரஸின் ( தினசரி சப்ளிமெண்ட்) மூன்றாம் பக்கத்தில் பாதியளவுக்கு வந்திருந்தட்து.. நடுவிலே சீனிகம்மின் அமிதாப் புகைப்படம், இளைராஜாவின் புகைப்படம்..
கொஞ்சம் ஹைப் ஏற்படுத்துகிற படம் வெளியானால், தொடர்புடையவர்களை, சாஸ்திரத்துக்கு, பேட்டி கண்டு போடுவது தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு பொழுது போக்கு மற்றும் பிசினஸ்
அந்த பேட்டியை வாசித்தால், சுமாராக, ஒரு ஐந்து நிமிடம் பேட்டியாளரிடம் பேசி இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். டெஸ்க்டாப் உபயத்தில், அது அரைப்பக்க பேட்டியாக மாறியிருக்கிறது….
வெங்கட், இசை பற்றிய பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு… கொஞ்சம் மனசு வைங்க..