• அஸ்தி டெட்டி பேர்

    by  • December 22, 2007 • நகைச்சுவை • 1 Comment

    eternabear.jpg அபத்தத் தயாரிப்புகள் வரிசையில் இன்னொன்று. அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்த மாதம் ஒரு காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் நினைவாக அவர்களது பூதவுடலின் ஒரு பாகத்தை (நகம், தலைமயிர், எரியூட்டப்பட்ட சாம்பல், இத்யாதி) உள்ளடக்கி நிரந்தரமாக நெஞ்சோடு கட்டிக்கொள்ள கரடி (அல்லது குதிரை, பூனை) பொம்மை (Teddy Bear), தலையணை போன்றவற்றைத் தயாரிப்பதற்கு இவர்களுக்கு உரிமையளிக்கப்பட்டிருக்கிறது. செத்துப்போனவர்களை நிழற்படமாக்கி சட்டத்தில் அடைத்து தொங்கவிட்டால் மாத்திரம்போதாது நிரந்தமாகத் தலைக்கடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு இப்பொழுது இது சாத்தியமாகியிருக்கிறது.

    13 பக்கங்கள் கொண்ட இந்த அமெரிக்கக் காப்புரிமைப் பத்திரத்தில் இந்தப் பொம்மைகளைத் தயாரிப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பது குறித்த விபரங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் உலகு

    என்ற வள்ளுவர் வாக்கைப் பொய்யாக்கி நிரந்தரமாகப் புட்டியில் அடைத்து பொம்மையாக்கிக் கட்டிக்கொள்ள முடியும் இப்பொழுது.

    (நன்றி: Journal of Improbable Research)

    One Response to அஸ்தி டெட்டி பேர்

    1. December 22, 2007 at 11:04 am

      உளனொருவன் இன்றில்லை என்றுதானே சொன்னார்,உளன் மறுவடிவில் இங்கில்லை’ என சொல்லவ்வில்லதானே……..எனவே வள்ளுவர் வாக்கு சரியே :-)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *