மனித வரலாற்றில் எல்லா சமூகங்களிலும் காணக்கிடைக்ககூடிய ஒரே விஷயமாக பரத்தமை இருக்கிறது. இந்த பண்பாட்டு சமாச்சாரத்திற்கு சமன்பாடு எழுதினால் எப்படியிருக்கும்? இந்த விஷயம் இன்றைக்குக் காணக்கிடைத்தது.

மூன்று பொருளியலாளர்கள் – மரீனா டெல்லா கியூஸ்டா (ஐக்கியக் குடியரசு), மரியா லாரா டி தொமாஸோ (இத்தாலி) மற்றும் ஸ்டெய்னர் ஸ்ட்ரோம் (நார்வே) பொருளாதரக் கோட்பாடுகளின் அடிப்படியில் வேசித்தனத்தை விளக்க முற்படுகிறார்கள். இவர்களது ஆய்வறிக்கையின்படி பரத்தமையின் விலைபொருள் அவர்களது உடல். அது மாத்திரமே விலைபோவதற்குப் போதுமானதல்ல. துய்ப்பவரின் சுகானுபவம், சந்தையில் இதன் தேவை, எந்த அளவிற்கான சேவைகள் அளிக்கப்படுகின்றன போன்ற பல காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதையெல்லாம் வெறும் வார்த்தைகளால் விவரிப்பது துல்லியமாக இருக்காது என்று இதற்கான கணிதச் சமன்பாடுகளையும் இவர்கள் தந்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அளவிடுவது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல. ஆனால் முடிவில் இதை எளிதான பகுதி வகைகெழு சமன்பாடு (Partial Differential Equation) கொண்டு எழுதலாம் என்று அவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

\frac{\partial U / \partial L}{\partial U / \partial C}|S=0] \leq W-[\frac{\partial U / \partial R}{\partial U / \partial C}|S=0
ஆதார காரணிகளைப் பின்வருமாறு வரையறுக்கலாம்;

U – வேசிக்குத் தொழிலில் இருக்கும் ஈடுபாடு. அதாவது இந்தத் தொழிலில் ஈடுபடுவதில் எந்த அளவுக்கு அவர் நிறைவு காண்கிறார் என்ற அளவு. (பொருளாதாரத்தில் இதை நுகர்வோரின் தேவையளவு என்று சொல்வார்கள் – Utility Value)

L – தொழிலில் ஈடுபட அவருக்கு இருக்கும் ஓய்வுநேரம். (Leisure)

C – அவரைத் துய்ப்பவர்கள் எந்த அளவுக்கு அவருடைய விலைபொருட்களை (goods) மற்றும் சேவைகளை (services) நாடுகிறார்கள் என்ற அளவு (Consumability). (முதலில் goods என்பதை சாமன்கள் என்று சுலபமாகச் சொல்லலாமே என்று அடிக்க வராதீர்கள்).

S – வேசித்தனம் நுகர்வோருக்கு அளிக்கப்படும் அளவு (Supply Rate).

W – சந்தையில் வேசிகளுக்குக் கிடைக்கும் சம்பளம் (Wages) (தூய தமிழில் ரேட் என்றும் சொல்வார்கள்)

R – விலைமாதின் நாணயமும் அவருக்கு இருக்கும் பெயரும். (Reputation Factor). தூயதமிழில் இதை ரெஸ்பேட் என்று சொல்வார்கள்.

அற்புதமாக இருக்கிறது. சந்தையில் நிலைத்திருக்க அவர்கள் இந்த ஒரே சூத்திரத்தைக் கொண்டு தங்கள் நடவடிக்கைகளை வரையறுத்துக் கொள்ளமுடியும். ஆனால் பொதுவில் வேசித்தனம் அசிங்கமானதாகக் கருதப்படுகிறது. எனவே இந்தத் தொழிலில் அசிங்கம் எங்கு துவங்குகிறது என்பதையும் ஆசிரியர்கள் வரையறுத்திருக்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் முக்கியமான அம்சம் பிற பொருளாதாரக் கட்டுரைகளைப் போல இது பெண்களை முன்வைத்து வேசைத்தனத்தை வரையறுக்கவும் பயன்படுத்தவும் இல்லை. இது பால் சார்பற்ற பொதுக் கோட்பாடாக் கொள்ளப்படுகிறது. முந்தைய பொருளாதார அலசல்களைப் போலல்லாது தொழிற்படுநரின் சந்தை மதிப்பையும் இதில் கணக்கில் கொள்கிறார்கள்.

Our contribution consists in constructing a model, based on evidence from a wide range of studies of prostitution, which makes no restrictive assumptions regarding the gender, pay and nature of forgone earning opportunities of the prostitute, and applies the same behavioural hypotheses to prostitutes and clients. The main focus is the incorporation of reputation effects in the behaviour of both clients and prostitutes. Both clients and prostitutes have reputational potential which is not affected if they do not engage in prostitution. Buying or selling prostitution implies a stigma effect: reducing actual reputation to a lower level then the original potential. We first look at the prostitution market when reputational potentials are exogenous and then we consider the situation when those potentials are considered endogenous. In the endogenous case, it is assumed that if a higher quantity of prostitution is sold or bought in the economy, the stigma effect decreases and the corresponding reputational potentials increase. We discuss the possible implications of different policies and regulatory regimes on the industry and its different markets, and suggest ways forward for this research.

இந்த ஆய்வுக் கட்டுரை எந்த சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை. பொதுவில் Physical Review E சஞ்சிகையில் இதுபோன்ற சிக்கலான பல்துறை ஆய்வுகள் பதிப்பிக்கப்படுகின்றன. இவற்றில் சிலவற்றை வரும் நாட்களில் எழுத உத்தேசம்.