மைக்ரோஸாஃப்ட் விஸ்டா வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில் இந்த மூன்று செய்திகளும் முக்கியமானவையாக இருக்கின்றன.

1. மைக்ரோஸாஃப்ட் சிறிய மற்றும் நடு அளவு நிறுவனங்கள் பயன்படுத்தும் மென்கலன் முறையாக உரிமைத்தொகை செலுத்தப்பட்டவையா என்று தீவிரமாகக் கண்காணிக்கப்போகிறது.

In the past, Microsoft contacted companies by phone or email and asked to come in and audit their software. Microsoft contends companies have an incentive to have legally licensed software, and its audit and asset management teams also can look for ways the company can save money, he said.

Most companies comply, but up to 3 percent don’t. Under the new programme, if Microsoft doesn’t receive a response after 14 days, the company will send a succession of three “escalation” letters over three weeks. The last two letters warn the case could be turned over the BSA, which could pursue legal action, Dhaliwal said.


விஸ்டாவை வெளியிட்டதன் முழு நோக்கமும் திருட்டு மென்கலன் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதானோ என்ற சந்தேகம் எழுகிறது. இதில் ஒன்றும் தவறில்லை. தங்கள் காப்புரிமையை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், இதைக் கூடத் திறமையாக அவர்களால் செய்யமுடியும் என்று தோன்றவில்லை. காரணம் அடுத்த இரண்டு செய்திகள்;

2. மைக்ரோஸாஃப்ட் மென்கலன் வெளியிடும்பொழுது இரண்டு வடிவங்களில் வெளியிடும். ஒன்று நேரடியாகப் புதிய கணினிகளில் நிறுவ, மற்றது அவர்களது பழைய வடிவத்தின் மீது மேம்பாட்டிற்காக நிறுவ. அதாவது, நீங்கள் விண்டோஸ் 2000 வைத்திருந்தால் ‘மேம்பாடு வடிவம் எக்ஸ்.பி ‘ வாங்கி (இது முழுவடிவத்தைவிட மலிவாகக் கிடைக்கும்), பழையதன் மேலேயே நிறுவிக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இதுபோன்ற மேம்பாடு உரிமையை நிறுவும்பொழுது பழைய வடிவம் இருக்கிறதா என்றெல்லாம் துல்லியமாக ஆராய்ந்ததில்லை. ஆனால் விஸ்டா நிறுவ பழைய வடிவம் ஒன்று இருந்தேயாக வேண்டும் என்று மைக்ரோஸாஃப்ட் சொன்னது. அப்படி இல்லையென்றால் நிறுவுதல் நின்றுபோகும்.

Daily Tech தளத்தில் வெளியான இந்த முறையைப் பயன்படுத்தினால் பழைய உரிமை இல்லாமலேயே நிறுவ முடியும். (அதாவது அதிகம் காசு கொடுத்து முழுவடிவத்தை வாங்க வேண்டியதில்லை). இவர்கள் கண்டுபிடிப்பின்படி புதிய கடினவட்டில் நிறுவும்பொழுது பழைய உரிமை இல்லை என்று மறுத்தால் 30 நாட்களுக்குச் சோதித்துப் பார்க்கிறேன் என்று சொல்லி முதலில் நிறுவவேண்டும். பின்னர், அது மறுபடியும் துவங்கும்பொழுது வரிசை எண்ணை உள்ளிட்டால் சரியாக நிறுவிக்கொள்ளும். இதைச் செய்வதற்கு அதிக நுட்பத்திறன் தேவையில்லை. அந்தத் தளத்தில் படங்களுடன் முழு செய்முறையையும் கொடுத்திருக்கிறார்கள்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் அதிகக் காசு கொடுத்து முழுவடிவத்தையும் வாங்க வேண்டும்? இது வேண்டுமென்றே கொடுத்த வசதியாக அல்லது திட்டமிடலில் தவறா? எது எப்படியாயினும் இது முழு மடத்தனம்.

3. விஸ்டாவின் மாபெரும் மேம்பாடு என்று அதன் Digital Rights Management (DRM) சங்கேதம் பற்றி மைக்ரோஸாஃப்ட் மார்தட்டிக் கொண்டிருக்கிறது. நேற்று இங்கே கனடாவின் கன்கார்டியா பல்கலைக்கழத்தில் (மாந்ட்ரியால்) அலெக்ஸ் இயனெஸ்கு என்ற மாணவரால் இந்த DRM சங்கேதம் தகர்க்கப்பட்டிருக்கிறது. விஸ்டா அதன் பல பயன்பாடுகளுக்கு இந்த சங்கேதத்தை முழுவதுமாகச் சார்ந்திருக்கிறது. உதாரணமாக, மைக்ரோஸாஃப்டால் அங்கீகரிக்கப்படாத ஒரு கிராஃபிக்ஸ் கார்டை நிறுவினால் உடனே டி.ஆர்.எம் தலையிட்டு விஸ்டாவின் முக்கிய கண்கவர் செயற்பாடுகளை நிறுத்திவிடும். (அதாவது இப்படி செயற்பாட்டை நிறுத்துவதன் மூலம் நீங்கள் மைக்ரோஸாஃப்ட் கைகாட்டும் வன்கலனை மட்டுமே வாங்கமுடியும்). நேரடியாகக் காசுகொடுத்து வாங்காத பாடல் உங்கள் கணினியில் இருந்தால் அதைப் பாடவைக்க முடியாது.

However, it does bypass DRM. As part of the Protected Media Path, (PMP), Windows Vista sets up a number of requirements for A/V software and drivers in order to ensure it complies with the demandes of the media companies. One of these features, which has been heavily criticized as being the actual reason behind driver signing, is that “some premium content may be unavailable” if test signing mode is used. Originally, I assumed that this meant that the kernel would set some sort of variable, but this didn’t make sense: once your unsigned driver could load, it could disable this check. After reading the PMP documentation however, it seems to me that the “feature” explained is more likely the cause of this warning on premium content.

தகர்க்கப்பட்ட சங்கேதம் இவற்றை முழுவதுமாகப் புறந்தள்ளி முழுப் பயன்பாடுகளையும் அனுபவிக்க ஏதுவாக்குகிறது.

இப்படி வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே அதன் முதுகெலும்பு முறிக்கப்பட்டால் மைக்ரோஸாஃப்ட் எப்படி திருட்டைக் கட்டுப்படுத்தப்போகிறது என்று தெரியவில்லை.

கொசுறுச் செய்தி: … (Alex Ionescu) is in his first year of obtaining a bachelor’s degree in Software Engineering. He is also a Microsoft Student Ambassador and is representing the company on campus as a Technical Rep.