thanjavur_parvathi.jpgசமீபத்திய Proceedings of the Royal Society B சஞ்சிகையில் காலம் காலமாக உலகத்தின் பல காலாச்சாரத்தைச் சார்ந்த இலக்கியங்களிலும் மெல்லிடையில் அழகு போற்றப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்ணுடல் சார்ந்த அழகியலில் மெல்லிய இடை உலகம் முழுவதும், எல்லா காலங்களிலும் மாறத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. மெல்லிதழ்/தடித்த உதடுகள், வெண்ணிறமேனி/பொலிகருமை, கதுப்பு அல்லது வடிந்த கன்னங்கள், சிறிய/பெரிய கண்கள் என்று காலத்தாலும் கலாச்சாரத்தாலும் அழகியல் வரையறைகள் மாறிக்கொண்டேயிருக்க, மாறாதிருப்பது மெல்லிடை என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

சிற்றிடை எளிதில் பெரும்பாலும் எல்லாக் கலாச்சாரங்களிலும் அதிகம் மறைக்கப்படாத (அல்லது ஆடைகளால் கோடிகாட்டப்படும்) அழகின் வெளிப்பாடாக இருந்திருக்கிறது. எனவே இதுவே குழந்தைப்பேறுக்கு ஏதுவான ஆரோக்கியமுள்ள பெண் என்று ஆண்கள் அடையாளம்காணும் விடயமாக நிலைத்திருக்கிறது. (ஆண் பெண் உடற்கூறு அழகியல் சார்ந்த அனைத்து விடயங்களுக்கும் மரபியல் ரீதியாக சந்ததியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகுதியே முக்கியமானதாக இருந்திருக்கிறது. உதாரணமாக ‘ஈர்க்கிடை நுழையா ஆர்த்த தடமுலைகள்’ பாலூட்டவும், பருத்த புட்டங்கள் பேறுகாலத்தில் நெகிழவும், நீள் கூந்தல் புரதக் குறைவின்மையின் அடையாளமுமாக பெண்ணழகியல் வரையறைகளாகின்றன. மறுபுறத்தில் திண்தோள், நெடிய ஆகிருதி, வலிய புஜங்கள் போன்றவை வேட்டையாடுதல் தொடங்கி விவசாயம் வரை உடலுழைப்புக்கும் ஆதாரமாக இருக்க, ஆணின் அழகு வரையறையாகிறது).

The researchers said: “References to beautiful women abound throughout human history and across cultures.

“Ancient Greek epics, Persian and Chinese poetry, Indian classics, mythology and even popular or folk stories glorify feminine beauty . . . our study suggests that, in spite of variation in the description of beauty, the marker of health and fertility — a small waist — has always been an invariant symbol of feminine beauty.”

பருத்த இடை பெண் ஹார்மோனான எஸ்ட்ரோஜன் குறைபாட்டின் ஒரு வெளிப்பாடு என்று அந்த ஆராய்சிக் கட்டுரை தெரிவிக்கிறது. பருவமடையும் சமயத்தில் பெண்ணின் இடை சிறுத்திருக்க உடலில் எஸ்ட்ரோஜனின் அளவு அதிகமாதலும், மாதவிலக்கு நிறைவடைந்த சமயத்தில் எஸ்ட்ரோஜன் குறையும் பொழுது இடை பெருக்கிறது. 345,000 நாவல்கள், காவியங்கள், நாடகங்கள் போன்றவற்றில் உடற்கூறு வர்ணனைகளை ஆராயும்பொழுது பெண்களின் அழகுபற்றிச் சொல்பனவற்றுள் இடையே பெரிதும் பேசப்படுவதாகக் கட்டுரை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து முலைகள், கால்கள், தொடை, கண்கள், கூந்தல், தோலின் பளபளப்பு போன்றவை பேசப்படுகின்றன.

“My love is unique; no one can rival her, for she is the most beautiful woman alive . . . Gold is nothing compared to her arms, and her fingers are like the lotus flowers. Her buttocks are full, but her waist is narrow. Just by passing, she has stolen away my heart”

Rameses the Great to Queen Nefertari (c 1300-1250BC) written on her tomb

“Her skin and teeth must be cleare, bright and neat . . . / Large brests, large hips, large space betweene the browes / A narrow mouth, small waste”

Sir John Harington (1561-1612)

“Beautiful women . . . in the palace of Chu, there were none who did not admire their slender waist”

Xu Ling (507-83)

“That which her slender waist confined Shall now my joyful temples bind; No monarch but would give his crown His arms might do what this has done”

Edmund Waller On: a Girdle

* * *

rembrandt.jpgஇதற்கு விலக்காக நான் கண்டது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய ஓவியங்களை. ஆம்ஸ்டர்டாம் நகரிலிருக்கும் ரெம்ப்ராண்ட் ம்யூசியத்தின் ஓவிங்களைத்தான். அங்கேயிருக்கும் பெரும்பாலான 17 ஆம் நூற்றாண்டு ஓவியங்களில் பெண்கள் தடித்த இடைகொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். இங்கே படத்தில் இருப்பது ரெம்ப்ராண்டின் ஓவியம்.

இதைத்தவிர தமிழ்நாட்டில் ஒரு/இரு தலைமுறைக்கு முந்தைய கவர்ச்சிக் கன்னிகள்/கதாநாயகிகள் எல்லோருமே கனபாடிகளாகத்தான் இருந்தார்கள். ஜோதிலெட்சுமி, ஜெயமாலினி தொடங்கி, மடிப்பு அம்சா என்று ஐயிட்டம் ஆட்டக்காரிகளும். புஜபலபாராக்கிரமம் கொண்ட கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா தொடங்கி அம்பிகா, ராதா, குஷ்பு ஈறாக ‘அழுவாச்சி’ கதாநாயகிகளும் பேரிடைப் பேரணங்குகளே. அவ்வப்பொழுது இதற்கு விதிவிலக்காக காஞ்சனா, அமலா என்று ஒன்றிரண்டு ஒல்லிகளும் வந்துபோகும். பின்னர் சிம்ரன் காலம்தொடங்கிதான் தமிழில் தொடர்ச்சியாக இடைகள் உலகத்தரத்தை எட்டியிருக்கின்றன என்று நினைக்கிறேன்.