buddhist_lady.jpgமாதவிலக்கு காலத்தில் பெண் 1 முதல் 55 தேக்கரண்டி வரை இரத்தத்தை இழக்கிறாள். வெளியேறும் இரத்ததின் வாடையால் கவனம் பெறுகிறாள் (இது ஆதிகாலங்களில் வேட்டைமிருகங்களிடம் அவள் இருப்பைக் காட்டிக்கொடுத்திருக்கும்). சதைப்பிடிப்பினால் தாளமுடியாத வலியால் அவதிப்படுகிறாள். மாதவிலக்கிற்குச் சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த வலி துவங்கிவிடுகிறது. எல்லாம் முடிந்து விலக்கு நின்றுபோகும் வயதில் உடலமைப்பில் ஏற்படும் தீவிர மாறுதல்களால் பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது.

இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த மாதவிலக்கு பாலூட்டிகளுக்கு ஏன் ஏற்படுகிறது? வேட்டைவிலங்குகளிடம் காட்டிக்கொடுக்குமளவுக்கு இரத்தவாடையுடன் பெண் விலங்குகள் இருக்கவேண்டுமள்வுக்கு அதற்கு என்ன பரிணாம முக்கியத்துவம் இருக்கக்கூடும்?

காலம் காலமாக இது தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இந்தியா மாத்திரமல்லாது மேலை நாடுகளிலும் பழங்காலத்தில் விலக்கு குறித்த தவறான கருத்துகள் இருந்திருக்கின்றன. “அந்த அசிங்கம் பட்டவுடனேயே பயிர்கள் பட்டுப்போகும், வைன் புளித்துப் போகும், மரங்கள் தங்கள் பழங்களை உதிர்க்கும், இரும்பு துருப்பிடிக்கும், தாமிரம் கறுக்கும். நாய்கள் உட்கொண்டாலோ உடனடியாக பைத்தியம் பிடிக்கும்” என்று தன்னுடைய Etymologiae என்ற நூலில் St. Isidore of Seville எழுதினார்.

நம்மூரில் கேட்கவே வேண்டாம். வீட்டிற்கு வெளியே தள்ளிவைத்துவிடுவார்கள். நான் படித்த கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் உயர்வகுப்புகளில் படிக்கும் பெண்கள் வந்துபோக வகுப்பறைகளில் தனிவழியே இருந்தது. வழிபாடுகளிலும் இல்லச் சடங்குகள் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளாமல் என் அம்மா தனியே நிற்பதை என்னால் ஒருக்காலத்திலும் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடிந்ததில்லை.

என் நெருங்கிய குடும்பத்தில் யாரும் அதிகம் படித்தவர்கள் இல்லை. தூரத்து உறவில் இருந்த ஒரு சிவில் இஞ்சினியர் மாமா இதற்கு ஒரு ‘அறிவியல்’ விளக்கம் சொல்வார். “அது அப்புடிதாண்டா. அவாள்டேந்து மூனு நாளுக்கும் ஆல்ஃபா, பீட்டா, காமா ரேடியேஷன் வந்துண்டுருக்கும். ரேடியேஷன் தெரியுமோல்யோ, ஜப்பான்காராள்லாம் மூஞ்சி கோணாலா, மூக்கு சப்பையா இருக்கறத்துக்கு அமெரிக்காக்காரன் போட்ட அணுகுண்டுலேந்து வந்த ரேடியேஷன்தான் காரணம். அதுக்காகத்தான் ஆத்துல சேக்ககூடாது. தொளசி ரொம்ப சென்ஸிட்டிவ் ப்ளாண்ட். ரேடியேஷன் பட்டா அடுத்த நிமிஷமே கருகிப்போயிடும்”. இப்படியாக அவரது விஞ்ஞான விந்யாசம் தொடர்ந்துகொண்டே இருக்கும். இவரிடம் நான் இரண்டு கேள்விகள் கேட்டேன்; அவர் கடைசிவரை பதில் சொல்லவேயில்லை.

“மாமா, ரேடியேஷன் பட்டா அசிங்கமாயிடுவாள்னா அழகான பொம்மனாட்டிகளுக்கு தீட்டே வராதா?” “ஆல்ஃபா, பீட்டாவுக்கெல்லாம் மெடிசின்ல நெறையா யூஸ் இருக்குன்னு சொல்றாளே, ஏம் பொம்மனாட்டிகள ரேடியேஷன் சோர்ஸ்ஸா வைச்சுக்கறதில்லை?”

சொல்லப்போனால் ஆதிகாலங்களில் நம் சமூகம் முற்றிலும் வேறாக இயங்கியிருக்கிறது. வேளான் சமூகங்களில் தாய்வ்ழி உரிமையும் பெண்ணாதிக்க குழுமங்களும் இருந்த நாட்களில் நம் மூன்னோர்கள் கையாண்ட தந்திர வழிபாடுகளில் மாதவிலக்கு வழிபாட்டுக்கு உரியதாகவே கருதப்பட்டிருக்கிறது. விலக்கு காலத்தில் தங்கள் ஆடைகளை விலக்கிப் பயிர்களுக்கு யோனியைக் காட்டினால் பயிர்கள் செழித்து வளரும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. இதன் எச்சமாகவே இன்றைக்கும் துர்க்கை, காளி வழிபாடுகளில் மாதவிலக்கின் வெளிப்பாடாகவே குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது என்று தத்துவ அறிஞர் தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய சொல்வார்.

போற்றுதலுக்கு உரியதாகவோ, தூற்றப்படுவதாகவோ மாதவிலக்கின் பங்கு ம் அடிப்படைக் காரணங்களும் தவறுதலாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்ற்ன. பரிணாம அடுக்கில் மேலிருக்கும் பாலூட்டிகளில் மாத்திரமே காணப்படும் இந்த மாதவிலக்கின் பரிணாம நோக்கம் என்னவாக இருக்கும்? இன்றளவும் இது பரிணாமவியலில் புரியாத புதிராகவே இருக்கிறது. மாத்யூ பெத்தெல்ஹேய்ம் பரிணாமத்தின் அடிப்படையை விளக்க முற்படுகிறார்.

According to Doggett, certain upper primates (the Catarrhini, which includes humans, Old World monkeys and humanoid apes) menstruate because their uterine tissue is too specialized for oxygen delivery to be reabsorbed (as it is in other mammals). In fact, he argues, menstruation arose in response to the high oxygen demands of our super-advanced central nervous system and our Mr. Peabody brains, the same grey matter that gives us poetry, hand-eye coordination, calculus, shivering, the atom bomb and the ability to walk and chew bubble gum at the same time.

All embryonic tissue requires oxygen, but neural tissue needs a constant oxygen supply or it can suffer irreparable damage. In humans and fellow Catarrhini, the blastocyst penetrates deep into the nourishing endometrium within a week of fertilization. As early as day 21, the central nervous system begins to develop. This intimate association gives our brainy embryo a plentiful supply of oxygen earlier than any other primate, mammal or vertebrate. And, of course, we have humongous brains to show for it.