பெருக்கல், வகுத்தல் கணக்குகளை குழந்தைகளுக்குச் சொல்லித்தர பல செய்முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் Traditional Algorithm என்ற முறையில் பெருக்கக் கற்றுக் கொண்டவர்கள். இன்றளவும் நான் இதைத்தான் பயன்படுத்திவருகிறேன். என்னுடைய பையனுக்குச் சொல்லித்தரும்பொழுது செய்வழிகளுக்கு முன்னால் உள்ளுணர்வின் அடிப்படையில் அவனாக எப்படிச் செல்கிறான் என்பதை அவதானிப்பது என் வழக்கம். மேற்கொண்டு படிக்குமுன் இந்த வீடியோவைப் பாருங்கள்:

[youtube]http://www.youtube.com/watch?v=Tr1qee-bTZI[/youtube]

இதில் வருகின்ற Partial Fractions Method உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. ஆறாம் வகுப்பிலோ, ஏழாம் வகுப்பிலோ படித்ததாக நினைவு. Lattice Algorithm பாடமுறையில் படித்த நினைவு இல்லை. ஆனால் பொழுதுபோக்கு கணிதம் போன்ற ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். இங்கே (ஒண்டாரியோ மாநிலம், கனடா) நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்குப் போதுமான அளவுக்குக் கணக்கு பயிற்சித் தரப்படுவதில்லை என்பது என் கருத்து. இந்த வீடியோவின் அடிப்படையில் விவாதிக்கப் பல விடயங்கள் இருக்கின்றன. வரும் நாட்களில் எழுதலாம் என்று எண்ணம்.

நீங்கள் ஒரு சிறுமிக்கோ, சிறுவனுக்கோ கற்றுக் கொடுத்தால் எப்படிக் கற்றுக் கொடுப்பீர்கள்?